Home கடலுக்கு அடியில் எட்டாம் கண்டம்
திங்கள், 28 மே 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
கடலுக்கு அடியில் எட்டாம் கண்டம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அறிவும், அறிவியலும் வளர்ந்து கொண்டே இருக்கும். புதிது புதிதாக உலகம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். அல்லது நாம் அறியாத பல செய்திகளை அறிவதற்கான வாய்ப்பு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.

இதுவரை நாம் ஏழு கண்டங்கள் இருப்பதாகப் படித்துவந்தோம். இதோ புதிதாக, கடலுக்கு அடியில் ஸீலாண்டியா (Zealandia) என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இச்செய்தி நமக்குத் தான் புதிது. ஆய்வாளர்கள் கடந்த 20 ஆண்டுகளாக இது குறித்து ஆய்வு செய்துவருகிறார்களாம்.

உலகில் தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா என 6 கண்டங்களில் மக்கள் வாழ்கின்றனர். தவிர முழுவதும் பனியால் சூழப்பட்ட அண்டார்டிகாவையும் நாம் ’கண்டம்’ என்னும் கணக்கில் தான் வைத்திருக்கிறோம். கண்டம் என்பது மிகப்பெரிய நிலப்பரப்பு ஆகும். இதை அரசியல் ரீதியிலான பிரிவாக அல்லாமல், புவியியல்படியான பிரிவாகப் பார்க்கவேண்டும்.

தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஸீலாண்டியா தென்பசிபிக் கடலுக்கு அடியில் உள்ளது. அதாவது தற்போதுள்ள நியூசிலாந்துக்கு அடியில் கடலுக்குள் மூழ்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸீலாண்டியா’ என்னும் இந்த புதிய கண்டத்தை, நியூஸிலாந்து கண்டம் என்றும் டாஸ்மாண்டிஸ் என்றும் சிலர் அழைக்கின்றனர். இது அண்டை கண்டமான ஆஸ்திரேலியாவின் அளவில் மூன்றில் 2 மடங்கு கொண்டது. மேலும் நியூசிலாந்தை போன்று 3 மடங்கு பெரியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஸீலாண்டியா கண்டத்தின் 94% பகுதி கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கிறது. இக் கண்டத்தில் நிலமாக இருக்கும் பகுதிகள் நியூஸிலாந்தின் வடக்கு தெற்கு தீவுகளும், நியூ கலேடோனியாவுமாகும்

புவியியல் அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் இத்தகவல் அமெரிக்க ஜியாலஜிக்கல் சொசைட்டி ஆய்வு இதழில் நிக் மார்டிமர் என்பவரால் எழுதி வெளியிடப்-பட்டுள்ளது.

அப்போ உடனடியாக பாடப்புத்தகங்களில் மாறிவிடும் என்ற கவலை வேண்டாம். இன்னும் அறிவியலர் நிறைய ஆய்வு செய்ய வேண்டும்.

- இறைவி

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்