சனி, 29 ஏப்ரல் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
வண்ணங்கள் வண்ணங்கள் காலை ஒளியில் செந்நிறம் மாலை வெய்யில் மஞ்சளாய் சோலைப் பூக்கள் பன்னிறம் சுவைக்கும் வண்டு கருநிறம்   நீல மேகம் கருமையாய் நிறத்தை மாற்று... மேலும்
மலையேறிய மார்கோ மலையேறிய மார்கோ அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் உள்ள போல்பர் என்ற நகரத்தைச் சேர்ந்தவர் 19 வயது பெண் மார்கோ ஹேய்ஸ். சிறு வயது முதலே மலையேற்றம் விளையாட்டு... மேலும்
தொலைநோக்கி தொலைநோக்கி பிரபஞ்ச ரகசியம் - 45தொலைநோக்கி- சரவணா இராஜேந்திரன் மனித நாகரீகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர்களின் விழிகள்தான் தொ... மேலும்
எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும் எச்சரிக்கையும் விழிப்பும் எப்போதும் எதிலும் வேண்டும் - சிகரம் உள்ளங்கையில் உலகம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் 30 வயதைக் கடந்தவர்கள்கூட உண்பது, உழைப்பது, உறங்குவது தவிர எந்த அறிவும் விவரமும் ... மேலும்
Banner
நம் தமிழ்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

இயலும் இசையும் நாடகமும்

இணைந்த மொழியே முத்தமிழாம்;

நயமும் சுவையும் நடையழகும்

நாவில் பெருக்கும் நற்றமிழாம்.

 

தேனும் பாலும் கலந்திட்ட

தித்திப் பான தீந்தமிழாம்;

மானும் மயிலும் சேர்ந்தாற்போல்

மனதை மயக்கும் மாத்தமிழாம்.

 

வாக்கில் இனிமை நிறைந்திட்ட

வாய்மை நிறைந்த வண்டமிழாம்;

சீக்கி ரத்தில் கற்பதற்குச்

சிறந்த எளிய செந்தமிழாம்.

 

அவ்வை கபிலர் இளங்கோவும்

அனுப வித்த அருந்தமிழாம்;

இவ்வை யத்தில் யாவருக்கும்

ஏற்ற மொழியே இன்தமிழாம்.

 

தந்தை தாயைப் போல்நம்மைத்

தாங்கும் பாசத் தண்டமிழாம்;

நந்த வனத்தின் தென்றல்போல்

நம்மை வருடும் நந்தமிழாம்.

 

பூவின் வாசம் போல்மணக்கும்

புகழைக் கொண்ட பூந்தமிழாம்;

ஆவின் கன்றும் ‘அம்மா’வை

அழைக்கும் உயர்ந்த எம்தமிழாம்!

- கே.பி.பத்மநாபன்
சிங்கநல்லூர், கோவை

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017