Home Walt Disney World எப்காட் - பந்தயக் கார் ஓட்டுவோமா?
புதன், 20 ஜூன் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
Walt Disney World எப்காட் - பந்தயக் கார் ஓட்டுவோமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

- மருத்துவர்  சோம.இளங்கோவன்

நம் அனைவர்க்கும் விரைவாகக் கார் ஓட்டிப் பார்க்க வேண்டும் என்று விருப்பம் உண்டல்லவா? சிறு குழந்தை முதல் கார் ஓட்ட வேண்டும் என்ற விருப்பம். அதிலும் வேகமாக காரை ஓட்ட வேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் இடம் பொங்கி வழியும்! அங்கே இரண்டு வகைகள். ஒன்று நன்கு தெரிந்தவர்கள் எந்தக் கார் வேண்டும், எஞ்சின், டயர் என்று ஒவ்வொன்றாகக் கணினியில் தேர்ந்தெடுத்து அதன் உள்ளே அமரலாம்! மற்றவர்கள் அங்குள்ள காரில் அமரலாம். என்ன நடக்கும் என்பது தெரியாது! இருட்டில் கார் ஓடும். இரண்டு பக்கமும் மற்ற கார்களும், நகரத் தெருக்களும், வளைந்த பாதையும் நாம் செல்லும் வேகத்தை மயக்க வைக்கும்! நம் கார்தான் ஓடுகின்றதா? இல்லை இரு பக்கமும் மற்றவை திரைகளில் ஓடுவதும், நம் கார் ஆடுவதும், வளைவதும் நாம் வேகமாகச் செல்வதுபோல உள்ளதா? தெரியாது! ஆனால் மயிர்க் கூச்சல், சத்தம் காதைப் பிளக்கும். கடைசி இரண்டு மணித்துளிகள் வெளியே உண்மையாகவே 60 மைல் வேகத்தில் வளைந்து சென்று நிற்கும்! நமக்கு மூச்சு வரும்! ஒவ்வொருவரும் கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாதிரி இறங்குவோம்! பலநாள் கனவு நிறைவேறி விட்டது!

கற்பனைக் கூடம்

ஒரு பெரிய உயரமான கண்ணாடி பிரமிட் போன்ற கட்டிடம்! அதில் போய் நாம் வரிசையில் நின்று, வரும் உட்காரும் வண்டியில் அமர்வோம். இருட்டறைக்குள்ளே செல்லும். ஒரு விஞ்ஞானியும் பலவித கற்பனை மிருகங்களும் ஓசை, வண்ணம், நாற்றம் பற்றிப் பாடலுடன் சொல்வார்கள். மிக மிக மெதுவான விட்டில் பூச்சி ஓசை மென்மையாகக் கேட்கும். பின்னர் வரிசையாகப் பல ஓசைகள். பறவைகள் ஆயிரக்கணக்கில் கத்தும். பின்னர் பெரிய நகரத்தின் பல்வேறு ஓசைகள் காதைப் பிளக்கும். அடுத்து கண்கவர் வண்ணக் காட்சிகள் ஒவ்வொன்றாய்க் காட்சியளிக்கும். அடுத்து மூக்கிற்கு வேலை. பல நறுமணங்கள்,

கடைசியில் ‘ச்கங்க்’  எனும் முயல் போன்ற மிருகம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு நீரைத் தெளிக்கும். அதன் நாற்றம் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வரும். பின்னர் ஒரு கூடத்தில் இறங்குவோம். அங்கு பலவிதமான கணினிகளில் நாம் என்ன வேண்டுமானாலும் படைக்கலாம். அங்கிருந்து படமெடுத்து இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்! உங்கள் கற்பனை என்று அது கணினியில் நம் கற்பனை என்னவெல்லாம் செய்ய முடியும் என்று விளையாடும் விளையாட்டுக் கூடம்! கற்கள் மேல் குதித்தால் அவை ஓசை எழுப்பும்! அங்குள்ள கடையில் விற்கும் பொருள்கள் கற்பனை கலந்தவை. காசும் கற்பனை அளவு அதிகந்தான்!

 

 

பேசும் ஆமை

ஒரு சிறு அரங்கத்தில் நின்று கொண்டும், சிலர் அமர்ந்தும் இருப்போம். ‘கிரஷ்! வா வா’ என்று சத்தம் போடச் சொல்வார்கள். உடனே அங்கு பெரிய நீர்த்தொட்டியில் பேசும் ஆமை ஒன்று வரும். அங்குள்ளவர்களை “சிவப்பு சட்டை போட்டு முன்னே உள்ள உன்னைத்தான் கேட்கிறேன், உன் பெயரென்ன? நடுவில் உள்ள கருப்புக் குல்லாய் எங்கிருந்து வருகின்றீர்கள்” என்று பலவிதக் கிண்டல் கேள்விகள் கேட்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கும் கிண்டலாகப் பதில் சொல்லும்! வாயையும், கண்களையும் எப்படித்தான் அசைத்துக் கிண்டலாகப் பேச வைக்கின்றார்களோ! மேலும் நீமோ போலும் வருவார்கள்.

 

நிலம்

பல்வேறு வகை விளைபொருள்கள், எப்படி விளைகின்றன? புதிய வகை வளர்ப்பு முறைகள் என்று பல்வேறு காட்சிகளைப் பார்க்கலாம். அங்கே உலகின் ஆறு கண்டங்களிலும் உள்ள அற்புதங்களை நம்மை சிறு வானூர்தி போன்ற ஒன்றில் ஏற்றிக் காண்பிப்பார்கள். நாம் மேலே பறப்பது போலவே இருக்கும். அப்படியே சீனாவின் பெருஞ்சுவர், எகிப்தின் பிரமிட், தாஜ்மகால் என்று பறந்து பார்ப்போம். அற்புதமான மணித்துளிகளாக இருக்கும்! ஒரு படகிலே அமர்ந்து செல்லும் பயணம். 13 மணித்துளிகளில் மழைக்காடுகள், ஆப்பிரிக்கப் பாலைவனத்தில் மணல் வீசும் புயல் என்று பார்ப்போம். அங்கேயே விளைவிக்கப்பட்டு அங்கேயே உணவாகும் பழங்கள், மிக்கி மவுசு போன்ற வெள்ளரிக்காய்கள் மண்ணில்லாமல் தொங்கு தோட்டத்தில் வளரும்!

அசந்து போய் உட்கார்ந்து அந்த அருமையான உணவை உண்போமா?

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்