Home மாரடைப்பு போக்கும் மாணவர் மனோஜ்!
புதன், 20 ஜூன் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
மாரடைப்பு போக்கும் மாணவர் மனோஜ்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அன்பார்ந்த பிஞ்சுகளே! நலமா?

அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack), மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack)) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது!

டாக்டர்களேகூட சிலர் இப்படிப்பட்ட இறப்புக்கு ஆளாகின்றனர்.

இதுபற்றி ஒரு நம்பிக்கையூட்டக் கூடிய செய்தி ஒன்றை பிரபல மருத்துவ நிபுணர் (பேராசிரியர்) டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள் நமக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.

அதை பிஞ்சுகளாகிய உங்களுடன் பகிர்கிறேன்.

மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை வலி சில அறிகுறிகள்.

எந்த அறிகுறியும் இல்லாமல் தாக்கும் மாரடைப்பும் உண்டு. யாராலும் கண்டுபிடிக்க முடியாது. திடீரென நெஞ்சடைக்கும். சுருண்டு விழுவார்கள், இதயம் நின்றுவிடும், உயிர் பிரிந்துவிடும்.

சைலன்ட் அட்டாக் என்பார்கள். டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியாது. ஏகப்பட்ட டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். எதிலாவது அறிகுறி தெரிந்தால் சொல்வார்கள்.

எந்த சோதனையும் செய்யாமல் சைலன்ட் அட்டாக் வரப்போவதை முன்கூட்டியே கண்டுபிடிக்க வழி தெரிந்துவிட்டது இப்போது. வழிகாட்டி பெரிய விஞ்ஞானியோ, நோபல் விருது பெற்றவரோ இல்லை.

நமது ஓசூர் சிறுவன் ஆகாஷ் மனோஜ். பத்தாம் வகுப்பு மாணவன். ”அப்படியா?” என்ற நம் வியப்புக்கு அவரே விடை தருகிறார்.

‘‘எங்க தாத்தா ரொம்ப ஆரோக்கியமாக இருந்தார். அவருக்கு டயபெடிஸ், பிளட் பிரஷர் இருந்தது. ஆனால், ரொம்ப கன்ட்ரோல்ல வச்சிருந்தார். திடீர்னு ஒரு நாள் பேசிட்டு இருந்தப்ப அப்படியே சுருண்டு விழுந்து செத்துப் போனார். நிமிஷத்துல எல்லாம் முடிஞ்சுருச்சு. சைலன்ட் ஹார்ட் அட்டாக்னு டாக்டர்கள் சொன்னாங்க.’’

‘‘அது என்னான்னு படிக்க ஆரம்பிச்சேன். பெங்களூர்ல உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் இருக்கிற லைப்ரரிக்குப் போய் இதயம் சம்பந்தமான எல்லா தகவல்களையும் படிக்க ஆரம்பிச்சேன். வெளிநாட்டுப் பத்திரிகைகள், புத்தகங்கள் எல்லாம் அங்கே வரும். எல்லாவற்றையும் படித்தேன். இப்பொழுது எனக்கு 15 வயது. ஆனால், டாக்டர்களுக்கு ஹார்ட்பற்றி வகுப்பு எடுக்கிற அளவுக்குப் பேச முடியும்.

ரத்தத்திலே இருக்கிற FABP3  என்கிற ஒரு புரோட்டீன் அதிகமாகும்போது சைலன்ட் அட்டாக் வருகிறது என்று தெரிந்தது. அது ஒரு நெகடிவ் புரதம். அதனால், பாசிட்டிவ் புரதம் மூலமாக அதை ஈர்க்க முடியும். அதாவது பக்கத்தில் இழுத்து அடையாளம் காண முடியும். மணிக்கட்டு அல்லது காதுக்குப் பின்னால் ஒட்டிக் கொள்கிற மாதிரி சின்ன ஸ்டிக்கர் மாதிரி ஒரு சிலிக்கான் பேட்ஜ் தயாரித்தேன்.

அதை ஒட்டிக்கிட்ட உடனே அதிலே இருந்து பாசிட்டிவ் எலக்ட்ரிக் இம்பல்ஸ் உற்பத்தியாகி, ரத்த நாளங்களில் ஊடுருவும். அங்கே நெகடிவ் புரதம், அதாவது, FABP3  இருந்தா, உடனே பேட்ஜ் அதனை இழுக்கும். அது எந்த அளவு இருக்குன்னு அந்த பேட்ஜ் காட்டிக் கொடுக்கும். அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு சைலன்ட் அட்டாக் வரப் போகிறது என்று அர்த்தம். உடனே, டாக்டரை பார்க்கணும்‘’ என்று விவரிக்கிறான் மனோஜ்.

பிளாஸ்திரி மாதிரி இருக்கும் இந்தக் கருவிக்கு தன் பெயரில் காப்புரிமை கேட்டு மனு கொடுத்திருக்கிறான் ஆகாஷ் மனோஜ்.

பன்னாட்டு மருந்து கம்பெனிகள் எத்தனைக் கோடி வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்து இதன் உற்பத்தி உரிமையை வாங்கத் தயாராக இருக்கும் நிலையில்,

மனோஜின் சிந்தனை வேறு மாதிரியாக இருக்கிறது.

‘‘எனக்குப் பணம் பெரிதல்ல. என் தாத்தா மாதிரி இனிமே யாரும் சைலன்ட் ஹார்ட் அட்டாக் வந்து இறக்கக் கூடாது. அதனால், மத்திய அரசு மூலமாக மலிவான விலையில் இதை உற்பத்தி செய்து, எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யவேண்டும் அது தான் என்னுடைய ஆசை’’ என்கிறான்.

பூர்வாங்க சோதனைகள் முடிந்து மனிதர்களிடம் சோதிக்கும் கட்டத்தை மனோஜின் சிலிகான் பேட்ஜ் எட்டியிருக்கிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் இளம் கண்டுபிடிப்பாளர் விருதும், பாராட்டுப் பத்திரமும் அளித்திருக்கிறார். பிளஸ் 2 முடித்ததும் அவன் விரும்பிய கார்டியாலஜி துறையில் சேர்த்துக் கொள்ள டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தயாராக இருக்கிறது.

வாழ்க அந்த மனோஜ்!

வெல்க அவரது மனிதநேயம்!! என்று பாராட்டுவோம்.

இது போல் நீங்களும் மனித சமூகத்துக்கு பயனளிக்கும் துறைகளில் கவனம் செலுத்தி வெல்ல வேண்டும் என்பது தான் இந்த தாத்தாவின் விருப்பமும்!

உங்கள் தாத்தா,

கி.வீரமணி

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்