சனி, 16 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
கோடை விடுமுறைப் பயன்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

விடுமுறை நாளில் வீணாய்
வெயில்தனில் அலையா தீர்கள்;
சுடுகிற வெப்பத் தாலே
சோர்வுடன் நோய்கள் சேரும்:
உடுத்திடும் உடைகள் மென்மை
உள்ளதாய் இருத்தல் நன்று;
கெடுத்திடும் பனிக்கூழ்* வேண்டாம்;
கேடிலா இளநீர் உண்பீர்:
அடுக்கடுக் காக ஆன்ற
அறிஞரின் நூல்கள் வாங்கி
விடுப்பினில் வீட்டுள் தங்கி
விரிவறி வோடு வாசி:

கெடுதலைச் செய்யா நல்ல
கனிகளை உண்ணல் நன்று;
படுப்பதும் பாயில் என்றால்
பலநலம் உண்டா கும்காண்:
விடியலில் எழுந்து சற்று
விரைவுடன் நடத்தல் நன்று;
மடியிலா தென்றும் அந்தி
மாலையில் சற்றே ஆடு:
படித்திடும் நூல்கள் எல்லாம்
பகுத்தறி வூட்டல் வேண்டும்;
துடிப்புடன் கோடை நாளைத்
தோழனே! பயன் படுத்து!

- கே.பி.பத்மநாபன்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017