வியாழன், 19 அக்டோபர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உணவைக் காப்போம்! உணவைக் காப்போம்! தட்டில் வைத்த உணவினையே தரையில் சிந்திக் களையாதே; கொட்டிப் பரப்பி உண்ணாமல் குறைவாய் உண்ணப் பழகிடுக:   கிட்டும் உணவை ஏழையர்க்குக் கேட்... மேலும்
செய்து அசத்தலாம் செய்து அசத்தலாம் அழகிய அன்னம் தேவைப்படும் பொருள்கள்: 1.            சதுர வடிவ சிறிது தடிமனான வெளிர் நீல பேப்பர் ஒன்று. 2.            கருப்பு நிற ஸ்கெட்ச்... மேலும்
குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் குறுகிய கால விடுமுறையில் என்ன செய்யலாம்? மாதிரி செயற்பட்டியல் - உமாநாத் செல்வன் நீண்ட பயணங்கள் சாத்தியமில்லாத, உடனடியாக வெளியூர்களுக்குச் சென்று வரமுடியாத இந்த ஒருவாரம் - பத்து நாள் வரையிலான விடுமுறை... மேலும்
வாழையின் வாய்மொழி வாழையின் வாய்மொழி பேசாதன பேசினால் - 13வாழையின் வாய்மொழி- மு.கலைவாணன் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் சுட்டிப் பெண் இனியா வீட்டில் தேர்வுக்காகப் படி... மேலும்
சிறு கை அளாவிய ஜுவல் சிறு கை அளாவிய ஜுவல் சின்னக் குழந்தைகளின் கிறுக்கல்களைக் கண்டிப்போர் உண்டு... கழுத்திலேயே அணிவோர் உண்டா? உண்டு என்கிறது அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலம் சார்ல... மேலும்
பிஞ்சு மனம் பிஞ்சு மனம் தங்கம்மா பாட்டியை அந்த பள்ளியில் படிக்கும் எல்லா குழந்தைகளுக்கும் நன்கு தெரியும். பாட்டி இந்த பள்ளியில் வேலை செய்யவில்லை. ஆனால், தினமும் ம... மேலும்
புதிய உலகம் : எதிர்கால மனிதர்களுக்காக!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

எதிர்கால மனிதர்களுக்காக 7 புதிய உலகங்கள் தயாராக உள்ளன. நமது சூரியனைச் சுற்றி 8 கோள்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல் நாம் பல்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி பல கோள்கள் இருப்பதையும் பூமியைப்போன்ற பல கோள்கள் இருப்பதையும் பிரபஞ்ச ரகசியத்தொடரில் படித்திருக்கிறோம். நாசா விண்வெளி ஆய்வு நிலையம் கெப்ளர் விண்வெளி ஆய்வு மூலம் பூமி போன்ற பல கோள்கள் உள்ள விண்மீன்களை தொடர்ந்து ஆய்வுசெய்துகொண்டு வருகிறது.

2014-ஆம் ஆண்டு ஆல்பா அக்வேரி எனப்படும் கும்ப ராசி விண்மீன் மண்டலத்தின் அதிக வெளிச்சம் கொண்ட விண்மீனை ஆய்வு செய்துவந்தபோது அதன் அருகில் ஒரு சிறிய அளவு வெண்புள்ளி மிகவும் மங்கலாகவும் அடிக்கடி ஒளி மறைந்து பிறகு அதிகரித்தும் காணப்பட்டது. மிகவும் மங்கலாக காணப்பட்ட இந்த விண்மீனுக்கு தாராப்பிஸ்ட் 1 என்று பெயர் சூட்டி அதைக் கதிரியக்கத் தொலைநோக்கியால் ஆய்வு செய்து வந்தனர்.

அப்போது இதுவரை நாம் கேள்விப்பட்ட கோள்களிலேயே முழுக்க முழுக்க கடல், கடற்கரை, தரை, மலை, சமவெளி என அனைத்தையும் தன்னகத்தே அடக்கிய 4 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அதேபோல் நமது துருவப் பகுதிகளைப் போன்றே உறைபனியைக் கொண்ட கோள்களும் அங்கே இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த விண்மீன் நமது பூமியிலிருந்து சுமார் 44 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்த விண்மீனைச் சுற்றி 7 விண்மீன்கள் உள்ளன என்று கண்டுபிடித்த வானியல் ஆய்வாளர்கள், இதில் 3 கோள்களில் உயிரினங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும் துல்லியமாகக் கூறியுள்ளனர்.

இதுகுறித்து வானியல் ஆய்வாளர் மைக்கேல் கில்லான் கூறியபோது, இவற்றில் நீர் மற்றும் உயிர் வாழ்க்கைக்கான மூலக்கூறுகள் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. அனைத்துக் கோள்களும் சீரான சுற்றுப் பாதையில் பயணிப்பதால் இங்கு பூமியைப் போன்ற காலநிலை மாற்றங்கள், பருவச் சூழல்கள், மழை மற்றும் புயல்கள் தோன்றும் வாய்ப்பு நிச்சயம் உள்ளது எனக் கூறுகிறார்.

தாராப்பிஸ் விண்மீன் நமது சூரியனைவிட மிகவும் சிறிய விண்மீன் ஆகும். இந்த விண்மீனைச் சுற்றி 7 கோள்கள் இருப்பது மிகவும் வியப்பான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. முக்கியமாக சூரியனைப் போன்ற நடுத்தர விண்மீன்கள் மட்டுமே உயிரோட்டமான கோள்களைத் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் என்று கூறிவந்த நிலையில் சூரியனைவிட பல மடங்கு மிகவும் குறைவான வெப்பம் கொண்ட சிறிய விண்மீன் உயிரோட்டமான கோள்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது வானியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் புதிய தகவலாகவே படுகிறது. இந்தக் கோள்கள் அனைத்தும் சில மணி நேரங்களில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சில நாட்களில் தனது விண்மீனையும் சுற்றிக் கொள்கின்றன.

கலீஸ் என்ற விண்மீனைச் சுற்றிப் பல பெரிய கோள்கள் இருப்பது குறித்து 2009-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கோள்கள் அனைத்தும் நமது பூமியைவிட மிகப் பெரியவை. அக்கோள்களில் ஈர்ப்புவிசை மிக அதிகமாக இருக்கும். அங்கு மனிதர்கள் சென்றால் அவர்களால் நகரவே முடியாது. அதுமட்டுமல்லாமல் இங்கு 60 கிலோ எடைகொண்ட ஒரு மனிதர் அக்கோளுக்குச் சென்றால் அவரின் எடை 400 கிலோ ஆக மாறியிருக்கும். ஆனால், தற்போது கண்டறியப்பட்டுள்ள கோள்கள் முழுக்க முழுக்க நமது பூமியை ஒத்த கோள்கள் ஆகும். இக்கோள்களுக்கு தாராப்பிஸ்ட் B,C,D,E,F,G,H என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை முழுக்க முழுக்க பூமியின் மாதிரியைப் போன்றே உள்ளன.

புதிய கோள்கள் குறித்து ஓரளவு தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் இந்தக் கோள்களில் மனிதர்கள் வாழக்கூடியத் தன்மைகள் உள்ளனவா என்பது பற்றி மேலும் ஆய்வுகள் நடத்திய பின்பே உறுதியாகக் கூற முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- சரவணா இராசேந்திரன்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017