Home வாழ்த்துகள் பிஞ்சுகளே!
திங்கள், 28 மே 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
வாழ்த்துகள் பிஞ்சுகளே!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

வகுப்பில் ஒரு எட்டு* முன்னே வைத்திருக்கிறீர்கள். நம் அண்ணன்கள், அக்காக்களெல்லாம் பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். மதிப்பெண்களை வைத்தெல்லாம் பெரிதாய் கவலை கொள்ளத் தேவையில்லை.

தமிழகக் கல்வித் துறை முக்கியமான பல மாற்றங்களைக் கண்டு கொண்டிருக்கிறது. ’நீட்’ என்ற பெயரில் திணிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. அதற்கான தேர்வைக் கூட இவ்வளவு வன்முறையாகவும், மோசடியாகவும் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நம் அண்ணன்கள் அக்காக்களெல்லாம் பட்ட பாடுகளை நாம் தொலைக்காட்சியில் பார்த்தோம். இவற்றிலிருந்து நம்மையும், நம் கல்வியையும் காக்க தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறோம். இது ஒருபுறம்.

மற்றொரு புறம் - மேல்நிலைப் பள்ளிக் கல்வி தொடர்பான இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

1. 11-ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே,  12-ஆம் வகுப்பு பாடத்தை நடத்திக் கொண்டிருந்த கல்வி நிறுவனங்களின் தவறான போக்கை மாற்ற 10, 11,12 ஆகிய மூன்று வகுப்பிற்கும் பொதுத் தேர்வு உண்டு என்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

2. மேல்நிலைப் பள்ளியில் பாடப்பிரிவுகளை வழங்கும்போதும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் முந்தைய ஆணையை நினைவூட்டி பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது.
இவையிரண்டும் முக்கியமானவை,

மற்றபடி, கேள்வி முறைகளிலும், மதிப்பெண் அளவுகளிலும் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எவ்வகையில் பயன்படும் என்பதை கல்வியாளர்கள் ஆய்வு செய்துவருகிறார்கள்.

கல்வித் துறையின் மீது அனைவரின் கண்களும் இருக்கும் வேளையில்தான் இப்போது அடுத்த வகுப்புக்குள் நீங்கள் நுழைகிறீர்கள்.

பெரியார் பிஞ்சு உங்களுக்கு சொல்வது ஒன்று தான். கல்வி என்பதும், படிப்பு என்பதும் வெறும் பள்ளிக் கல்வி மட்டுமல்ல... இந்த சமூகத்தில் சுற்றி இருப்பவற்றிலிருந்தும், இயற்கையிடமிருந்தும் நாம் கற்க ஏராளமாக உண்டு. பாடப் புத்தகங்களைத் தாண்டி நூலகங்களில் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடித் தேடிப் படியுங்கள். மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. பாடத்தைப் புரிந்து மதிப்பெண்களையும் பெறுவது கூடுதல் சிறப்பு - அவ்வளவுதான்.

மதிப்பெண் எடுப்பதைவிட அறிவியலை நாம் எப்படி புரிந்து படிக்கிறோம் என்பதும் தான் முக்கியமானது. 64 கிராம் எடை கொண்ட மிகச் சிறிய செயற்கைக் கோளை உருவாக்கிய கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் ரிஃபாத் ஷாரூக், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுத்திருக்கும் மொத்த மதிப்பெண்கள் 750. அறிவியல் அறிவுக்கும், அறிவியல் பாட மதிப்பெண்ணுக்குமே தொடர்பில்லை எனும்போது பிற துறைகளில் உள்ள திறமைகளை மதிப்பெண்ணால் அளவிட முடியுமா?

1190 மதிப்பெண் எடுத்துள்ள யாழினி அக்கா, “நான் எல்லா செய்திகளையும் படிப்பேன்” என்று சொல்வதையும் கேளுங்கள்.

பள்ளிக்கூடம் என்பது நம்மையொத்த வயதுள்ள மாணவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பையும், கூடவே அடிப்படையாக தெரிந்துகொள்ள வேண்டிய சிலவற்றைக் கற்கும் வாய்ப்பையும் சேர்த்துத் தரும் இடம். அவ்வளவே! பயப்படாமல், கவலையில்லாமல் மகிழ்ச்சியாக இவ்வாண்டு பள்ளிக் கூடத்தை அனுபவியுங்கள்!

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்