சனி, 16 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
தந்தை பெரியாரின் கதை - 3
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

பெரியாருக்கு 12 வயது.

அப்பாவின் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். வியாபாரம் செய்வதில் கெட்டிக்காரர் ஆனார்.

பெரியார் ஓய்வு நேரத்தில் கடைக்கு வருகிறவர்களிடம் வாதம் செய்வார். எந்த விஷயத்தைக் கேட்டாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பார்.
‘எல்லாம் ஆண்டவன் செயல். தலைவிதிப்படி தான் நடக்கும்’ என்று சொன்னால் நம்பமாட்டார்.
ஒரு சமயம் பெரியார் ஒரு வம்பு செய்தார்.

ஈரோட்டு கடைத் தெருவில் ராமநாத அய்யர் என்பவர் கடை வைத்திருந்தார். அவருக்கு தலைவிதி மீது அதிக நம்பிக்கை.
‘எது வந்தாலும் அதற்கு தலைவிதிதான் காரணம்’ என்பார் ராமநாத அய்யர்.

‘நீர் சொல்வது உண்மைதானா? எல்லாவற்றையும் தலைவிதி என்று ஏற்பீரா?’ என்று பதிலுக்குக் கேள்வி கேட்டார் பெரியார்.
‘ஏற்கிறேன்’ என்றார் அய்யர்.

அய்யர் கடைமுன் தட்டி கால் கொடுத்து தூக்கி வைக்கப்பட்டிருந்தது. அத்தட்டியை பெரியார் காலால் தட்டிவிட்டார். தட்டி அய்யரின் தலைமீது விழுந்தது.
அய்யர் கோபத்துடன் திட்டிக்கொண்டு பெரியாரை துரத்தினார்.

“தலைவிதி தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறீர்?” என்று சொல்லிக் கொண்டே பெரியார் ஓடிவிட்டார்.

பன்னிரண்டு வயதிலே பெரியாருக்கு ‘தலைவிதி’ என்ற முட்டாள்தனத்தில் நம்பிக்கை இல்லை.

பெரியார் செய்த விளையாட்டு

பெரியாருக்கு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 19. அவருடைய மனைவி பெயர் நாகம்மை. நாகம்மை மீது பெரியாருக்கு மிகுந்த அன்பு இருந்தது. நாகம்மையை தன் கொள்கை வழிக்கு மாற்றுவதற்காக பெரியார் செய்த செயல்கள் விளையாட்டாகவும், குறும்பாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.

பெரியாருடைய அம்மா மதப்பழக்க வழக்கங்களில் ஈடுபாடு உடையவர். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பார். அவருடன் சேர்ந்து நாகம்மையும் விரதம் இருக்க வேண்டும். இது பெரியாருக்கு

பிடிக்கவில்லை.

பெரியாருக்கு மாமிச உணவு மீது எப்போதும் கொள்ளை ஆசை. விரத நாளன்று வீட்டில் மாமிச உணவு சமைக்கக் கூடாது என்பது அம்மாவின் உத்தரவு.

நாகம்மை பெரியாருக்கு மட்டும் தனியாக மாமிச உணவு சமைத்துக் கொடுப்பார். பிறகு தீட்டுப் போக குளித்து விடுவார். பெரியார் சமையலறைக்குள் நுழையக் கூடாது. பெரியாரின் அம்மா உத்தரவுப்படி நாகம்மை நடந்துகொண்டார்.

இது பெரியாருக்குப் பொறுக்கவில்லை. அவருடைய விளையாட்டுப் புத்தி வேலை செய்தது. ஒரு வெள்ளிக்கிழமை நாகம்மை நோன்பு இருந்தார். விரத நாளன்று தனக்கு மாமிச உணவு வேண்டுமென்று பெரியார் பிடிவாதம் செய்தார்.

நாகம்மையும் மாமிச உணவு சமைத்தார். பிறகு குளிக்கப் போனார். அந்த சமயம் பார்த்து பெரியார் சமையலறைக்குள் நுழைந்தார். நாகம்மை உண்பதற்குரிய விரதச் சோறு தனியாக இருந்தது. ஒரு எலும்புத் துண்டை அந்தச் சோற்றுக்குள் புதைத்து வைத்தார்.

 

நாகம்மை சாப்பிடும்போது அந்த எலும்புத் துண்டு தலையை நீட்டியது. பயந்து போனார். இது பெரியாருடைய விளையாட்டு என்று புரிந்துகொண்டார். பெரியாருடைய விருப்பப்படி நாகம்மை விரதம் இருப்பதை விட்டு விட்டார்.

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017