சனி, 16 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியைப் படைத்த மாணவர்...
PDF  | Print |  E-mail
User Rating: / 2
PoorBest 

அனைத்து மாநிலங்களும், நாடுகளும் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை, காற்று மாசுபடுதல். இதனால் பல்வேறு சுவாசக் கோளாறுகளும், உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன. இதனை எப்படி சமாளிப்பது என அரசுகள் திணறி வரும் நிலையில், காற்று மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியினை எளிமையான முறையில் சென்னையைச் சேர்ந்த 18 வயது மாணவர் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவரது பெயர் இரா.அரவிந்தன். 1998இல்  பிறந்தவர். சென்னை, திருவான்மியூர் அருகே உள்ள பாலவாக்கத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ஆம் வகுப்பு படிக்கும்போது தமது ஆய்வைத் தொடங்கி, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது இக்கருவியை முழுமையாக வடிவமைத்தார். தற்போது பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அறிவியலின் மீது அவருக்கு இருந்த அதிக ஆர்வம் காரணமாக பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து கொண்டே நான்காண்டுகளாக பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டு, தம்முடைய சுயசிந்தனையில் காற்று மாசுக் கட்டுப்பாட்டுக் கருவியை முழுமையாக உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்தனிடம் பேசிய போது, “நாள்தோறும் நாம் பயன்படுத்தும் சமையலறை,தொழிற்சாலைகள் மற்றும் மோட்டார் வாகனம் போன்றவற்றிலிருந்து வெளிவரும் மாசு கலந்த நச்சுக் காற்று மனிதர்களுக்கும் பிற உயிரினங்களும் உயிர் வாழப் பெரிதும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

உலகளவில் 60% மக்கள் நச்சுத்தன்மை கலந்த காற்றினைச் சுவாசிப்பதால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

குறைந்த அளவு ஓர் ஆண்டிற்கு 6 இலட்சம் பேர் காற்று மாசுபாட்டின் காரணமாக மரணமடைகின்றனர். மாசு கலந்த நச்சுக் காற்றினை சுவாசிப்பதால் ஒரு நாளைக்கு 1,648 பேர் மரணமடைகின்றனர் என உலக சுகாதார ஆய்வு மய்யம் தெரிவிக்கின்றது.

மேலும் இதனால் இருதய நோய், நுரையீரல் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இதனை முழுமையாகத் தடுக்கவே இந்த காற்று மாசு கட்டுப்பாட்டுக் கருவி” என்று தெரிவித்தார்.

இவர் உருவாக்கியுள்ள ‘ளிஞீளிழிணி’ கருவியை வாகனங்களின் புகைக் கூண்டிலோ, சமையல் அறையின் புகை கூண்டிலோ அல்லது தொழிற்சாலைகளின் புகை கூண்டுகளிலோ பொருத்தினால், இக்கருவி காற்றினை மாசற்றதாக மாற்றுவதுடன் கார்பன் பொருட்களை வீழ்படிவுறச் செய்கிறது. அவற்றை நாம் உரமாக வேளாண்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

இக்கருவியின் மூலம் நமக்குக் கிடைக்கும் பயன்கள்

1. காற்றில் மாசு ஏற்படுவதையும், புவி வெப்பமயமாதலையும் தடுத்து பொருளாதாரப் பிரச்சினையையும் சரி செய்கிறது.

2.    காற்றில் உள்ள மாசுத் துகள்களை நீக்கி அனைத்து உயிர்களுக்கும் சுவாசிக்க உகந்த காற்றை அளிக்கிறது.

3.    மேலும் பசுமைக்குடில் வாயுக்களை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

படிப்பு என்பது மதிப்பெண் பெறுவதற்காக அல்ல. மனித சமூகத்திற்குப் பயன்படும் புதுமை செய்யவே! அரவிந்தனுக்கு நம் ‘பெரியார் பிஞ்சு’களின் வாழ்த்துகள்!

- கா.அமுதரசன், வை.கலையரசன்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017