சனி, 16 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
முடிவிற்கு வந்த பயணம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

‘கியூரியாசிட்டி’ செவ்வாய்க்கோளில் தன் ஆய்வுப் பணிகளை நிறைவு செய்துவிட்டது. [Curiosity Rover]

கேட்க சிறிது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எல்லாவற்றிற்கும் என்றாவது ஒரு முடிவு உண்டல்லவா?

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, செவ்வாய்க் கோளில் தரையிறங்கி மண் பரிசோதனை, வளிமண்டலத்தில் உள்ள காற்று சோதனை மற்றும் தரையில் உயிரினங்கள் உள்ளனவா என்று அறிந்துகொள்ள ‘கியூரியாசிட்டி ரோவர்’ (Curiosity Rover) என்ற தானியங்கி ஆய்வுக் கலத்தை செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி, அது  வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்தில் கால் பதித்தது.

அந்த ஆய்வுக்கலன் 2012 ஆகஸ்ட் 06இல்  எரிந்து போன எரிமலைப் பள்ளத்தாக்கில் இறங்கியது.

இந்த ஆய்வுக்கலன் பற்றி நாம் ஏற்கனவே படித்திருக்கிறோம், கிட்டத்தட்ட ஒரு சிறிய கார் போன்ற இந்த ஆய்வுக்கலத்தில், தானியங்கி பரிசோதனை நிலையம்,

படப் பதிவுக் கருவி மற்றும் பதிவுகளை சரிசெய்து அனுப்பும் தொழில்நுட்பம் போன்றவற்றுடன் அமைக்கப்பட்டிருந்த இந்த விண்கலம் தலைகீழாகக் கவிழ்ந்தாலும் தானாகவே மீண்டும் பழைய நிலைக்கு மாறி தனது பணியைத் தொடரும் வகையில்,

இது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

‘நாசா’ 1980-ஆம் ஆண்டு செவ்வாய்க் கோள் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory - MSL) என்ற ஒன்றை உருவாக்கியது. இந்த ஆய்வுக்கூடத்தின் நீண்டகால திட்டத்தின்படி உருவானதுதான் இந்த ‘கியூரியாசிட்டி’.

செவ்வாய்க் கோளில் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதே ‘செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்’ என்கிற திட்டத்தின் நோக்கமாகும்.

கியூரியாசிட்டியின் பணிகள்

 

படத்தில் இருக்கும் சிறுமியின் பெயர் கிளாரா மா (Clara Ma). செவ்வாய் சென்ற Curiosity  ஊர்திக்குப் பெயர் சூட்டியவர் இவர் தான்!!

2009 ஆம் ஆண்டு நாசா நடத்திய பெயர் சூட்டல் போட்டியில் "Curiosity" என்கிற பெயரைப் பரிந்துரை செய்து தனது 11-ஆம் வயதில் பரிசைத் தட்டி சென்றவர்.

தற்போது செவ்வாயில் இருக்கும் கலனில் இவரது பெயரும், கையொப்பமும் பொறிக்கப்பட்டுள்ளன.

செவ்வாய்க் கோளில் கரிமச் சேர்மங்கள், தாவரங்கள் வளரத் தேவையான சூழல் மண்ணில் இருக்கிறதா,

அப்படி இருந்தால் அங்கு எவ்வகையான கனிமங்கள் இருக்கின்றன என்பதை ஆய்வு செய்வதற்கும்,

உயிர் வாழத் தேவையான கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ்,

கந்தகம் போன்ற வேதியியல் கூறுகளை ஆய்வு செய்வதற்கும் அனுப்பப்பட்டது.

பருவமாற்றத்தை அறியும் அதன் கருவிகள்  செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்பம் குறித்து ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.

மேலும், செவ்வாய்க் கோளில் உள்ள காற்று மண்டலத்தின்  பரிணாம வளர்ச்சியினை அலசுதல்,  நீர், கார்பன்_டை_ஆக்ஸைடு ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம்,  சுழற்சி முறை குறித்து ஆராய்தல்,

செவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவான முறையினை அலசுதல்,

எல்லாவற்றையும் விட செவ்வாயில் எதிர்காலத்தில் மனிதர்கள் வந்து தரையிறங்கும் சாத்தியக் கூறுகளைப் பற்றி ஆராய்வதும் இதன் முக்கியப் பணியாக இருந்தது.

“எதையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத்தான், கியூரியாசிட்டி” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

அந்த ஆர்வத்திற்கான  விடையைத் தன்னாலான வரை தந்திருக்கிறது இந்த கியூரியாசிட்டி.

மண் மாதிரிகளை பரிசோதிக்கும் வகையில் சில கட்டளைகள் அமெரிக்காவில் உள்ள ஆய்வு நிலையத்தில் இருந்து மே நான்காம் தேதி அனுப்பப்பட்டன. ஆனால், இந்த கட்டளையை அது ஏற்கவில்லை.

இதனை அடுத்து அதன் இயக்கத்தை கட்டுப்படுத்த முயன்றபோது அவை கட்டளைக்கு ஏற்ப செயல்படவில்லை.

அடுத்த நாளான மே அய்ந்தாம் தேதி கியூரியாசிட்டி பூமிக்குக் கட்டளைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டது,

இதனை அடுத்து ஆய்வுக் கலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கும் வகையில் இணைக்கப்பட்ட பேக் அப் சிஸ்டத்தை இயக்கி கியூரியாசிட்டியின் செயல்பாடுகளை கவனித்தபோது அது தன்னுடைய செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்தி மீண்டும் இயங்கா நிலைக்குச் சென்றுவிட்டது.

இதனையடுத்து  ‘கியூரியாசிட்டி’ இனி இயங்காது என்று நாசா அறிவித்துவிட்டது.

2012 முதல் 2017 வரை செவ்வாய்க் கோளில் தரையிறங்கி சுறுசுறுப்பாக செவ்வாய் பற்றிய பல தகவல்களை நமக்கு தந்துகொண்டிருந்த கியூரியாசிட்டி இனி இயங்காது என்ற தகவல் நமக்கு கொஞ்சம் கவலை அளிக்கத்தான் செய்கிறது.

நம் இதழில் முன்பு வெளிவந்த பிரபஞ்ச ரகசியம் தொடரில் செவ்வாய் பற்றி பல தகவல்களை நாம் தெரிந்துகொள்ள இந்த கியூரியாசிட்டி பெரிதும் உதவியாக இருந்தது.

இருப்பினும் 2022-ஆம் ஆண்டு மனிதர்கள் செவ்வாய் கோளில் இறங்கப் போகிறார்கள்.

அப்போது புதிய நிலப்பரப்பு மனிதர்களுக்கு கிடைக்கும். இதை உறுதி செய்தது இந்த கியூரியாசிட்டிதான்.

- சரவணா இராஜேந்திரன்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017