வெள்ளி, 23 ஜூன் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
நன்றி சொல்லப் பழகுவாய் நன்றி சொல்லப் பழகுவாய் உன்னால் முடியும் செயலைநீயே செய்தல் நனிநன்று; உதவி நாடின் பிறரிடத்தில்உருப்படி யாய்அது நடவாதே! உதவி கேட்டு வருவோர்க்குஉழைப்பை நல்கத் தவறாதே... மேலும்
தந்தையைப் போற்றுவோம்! தந்தையைப் போற்றுவோம்! அறிவைப் புகட்டும் தந்தையினை ஆண்டு முழுதும் போற்றிடினும்குறிப்பாய் ஒருநாள் சிறப்பாக கொண்டா டுதல்தான் தந்தையர்நாள்!தம்மின் தமது மக்களெலாம் த... மேலும்
போசாதன போசினால் - 9 போசாதன போசினால் - 9 யாழினி வீட்டு வாசலில் தன் தோழிகளோடு பாண்டி விளையாடிக் கொண்டிருந்தாள். ஏழாம்  வகுப்பு படிக்கும் யாழினிக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டு. ஆனால்... மேலும்
பள்ளிக்கூடங்கள் பழகுமுகாமாக மாறுவது எப்போது? பள்ளிக்கூடங்கள் பழகுமுகாமாக மாறுவது எப்போது? குழந்தைகள் உலகத்தின் தேசிய வார்த்தை ‘போரடிக்கிறது’ என்பதுதான். எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். மற்றதெல்லாம் ஆளுக்கு... மேலும்
தந்தையைப் போற்றுவோம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அறிவைப் புகட்டும் தந்தையினை
ஆண்டு முழுதும் போற்றிடினும்
குறிப்பாய் ஒருநாள் சிறப்பாக
கொண்டா டுதல்தான் தந்தையர்நாள்!

தம்மின் தமது மக்களெலாம்
தக்க அறிவைப் பெறுதற்கு
இம்மண் மீது உழைப்பதிலே
என்றும் தந்தை உயர்ந்தவரே!

ஆன்றோர் அவையில் தம்மகனை
அமரச் செய்யும் முயற்சியிலும்
சான்றோன் ஆக்க முயல்வதிலும்
சளைக்கா துழைப்பர் தந்தையரே!

தமிழின் மண்ணில் பிறந்தோரைத்
தனது மக்கள் என்றுணர்ந்து
தமிழர்க் கறிவை ஊட்டிட்டார்
தந்தை பெரியார் அறிந்திடுவீர்!

உண்மை அறிவைத் தமிழ்மக்கள்
உணரச் செய்தப் பெரியாரை
எண்ணித் தந்தை யர்நாளில்
எல்லோ ரும்நாம் போற்றிடுவோம்!


கே.பி .பத்மநாபன்,
சிங்கால்லுர்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017