வியாழன், 14 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
அனிதாக்கள் மடியாத நிலையை உருவாக்குவோம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

நீட் என்னும் பெயரில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு தேர்வு, தமிழ்நாட்டின் கல்விச் சூழல், மருத்துவத் துறையின் மீது பெரும் நெருக்கடியை ஏவியிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் கனவைக் கலைத்துக் கொள்ள முடியாத மாணவி அனிதாவின் உயிரையும் பறித்திருக்கிறது. அனிதா அக்காவின் போராட்ட உணர்வை நாம் முன்னெடுக்க வேண்டும்; ஆனால், அவர் தேடிக் கொண்ட முடிவை ஒருபோதும் நாம் தொடரக் கூடாது. பல்லாண்டுகள் போராட்டத்தின் விளைவே நாம் பெற்றிருக்கும் கல்வி வாய்ப்பு! இடைக்காலத் தோல்விகளால் ஒரு போதும் துவண்டுவிடக் கூடாது. உண்மை நம் பக்கம் இருக்கும் வரை இறுதிவெற்றி நமக்கே!

தமிழ்நாட்டின் கல்விச் சூழல், சமமான கற்றல் வாய்ப்பை நோக்கி, இந்தியாவின் எந்த மாநிலத்தை விடவும் பல மடங்கு வேகமாக முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. நீட் போன்ற தேர்வுகளால் அதைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சிகளை எப்போதும் ஏற்க முடியாது.

நவோதயா பள்ளிகள் என்னும் பெயரில் மேலும் சமமற்ற நிலையை உருவாக்கத் தொடர் முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்களின் நலனுக்கெதிரான எதுவும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வருங்காலத்துக்கு எதிரானது என்பதால் அதற்கெதிரான சமூகநீதிக் குரலை நாம் தொடர்ந்து முழங்குவோம்.

உச்சநீதிமன்றம் சென்றும் போராடிய உணர்வுக்காக அனிதா அக்காவைப் போற்றுவோம்!

இனிமேலும் அனிதாக்கள் மடியாத வண்ணம் நிலையை மாற்றுவோம்!!

நீட் மற்றும் நவோதயாக்களை நாட்டை விட்டு ஓட்டுவோம்!!!

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017