வியாழன், 14 டிசம்பர் 2017

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காட்டலோனியா காட்டலோனியா I.         அமைவிடமும் எல்லைகளும் ¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது. ¨           போர்த... மேலும்
பலன் எதிர்பார்த்து.. பலன் எதிர்பார்த்து.. =             கூடு கட்டத் தெரியாத... குயில் நல்லாப் பாடுது! மகசூல் பண்ணத் தெரியாத... மண் புழு உரத்தை சேர்க்குது!   =             கரை ... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தேவையான பொருட்கள்: 1.            சதுர வடிவ அரக்கு வண்ணக் காகிதம். 2.            கருப்பு நிற ஸ்கெட்ச் பேனா. செய்முறை 1.            அரக்... மேலும்
காரணமின்றி ஏற்காதீர்கள்! காரணமின்றி ஏற்காதீர்கள்! - சிகரம் போலி என்பது உண்மைகளைப் போல தோற்றத்தில் இருந்து ஏமாற்றும் பொய்மைகள். ‘போலி’ பொருளில் மட்டுமல்ல, கருத்திலும் உண்டு, காட்சியிலும் ... மேலும்
பிளாஸ்டிக் தவிர்ப்போம்! பிணியின்றி வாழ்வோம்!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

உலகிற்கே பெருங்கேடு இதுதானப்பா
உடனேநாம் இதைத்தடுக்க வேண்டுமப்பா
உலகெல்லாம் நிறைந்திருக்கும் பொருள்தானப்பா - அது
உயிர்களுக்கு தீங்குதரும் நெகிழியப்பா

மண்ணிலே புதைத்தாலும் மட்காதப்பா
மரம்செடி கொடிகளுக்கும் மரணமப்பா
ஆடுமாடும் இதைத்தின்றே சாகுதப்பா - இதனால்
ஆறுகடல் குளங்களெல்லாம் அசுத்தமப்பா

எரித்தழித்தால் கரும்புகைதான் சூழுமப்பா
அதனாலே டயாக்சீன்வாயு பெருகுமப்பா
இதன்புகையை சுவாசித்தால் அய்யோஅப்பா
ஏதேதோ நோய்களெல்லாம் வருமேயப்பா

மழைநீரை நிலத்தில்நுழைய தடுக்குதப்பா
மண்ணெல்லாம் மலடாகப் போகுதப்பா
நிலத்துநீர் மட்டமெல்லாம் குறையுதப்பா - இனி
நித்தமுமே யுத்தம்தான் வாழ்க்கையப்பா

ஆயிரம் ஆண்டானாலும் அழியாதப்பா
அத்துணை உயிர்களுக்கும் கெடுதலப்பா
அதனாலே அலட்சியமாய் இருக்காதப்பா
அக்கறையாய் இதைத்தவிர்க்க முயன்றிடப்பா

பாலித்தீன் கவர்களைப் பயன்படுத்தும்
பழக்கத்தை இன்றேநீ விட்டிடப்பா
பருத்தியில் நெய்திட்ட பைகளையே
பயன்படுத்தும் பழக்கத்தை தொடங்கிடப்பா

பலசரக்குக் கடைகளுக்குச் செல்லும்போது
மறக்காமல் சணல்பையைக் கொண்டுபோப்பா
சந்தைக்குக் காய்கறிகள் வாங்கப்போனால்
துணிப்பையை விழிப்புடனே எடுத்துப்போப்பா

குளிர்பானம் குடிதண்ணீர் இவற்றையெல்லாம்
விலைகொடுத்து எப்போதுமே வாங்காதப்பா
இவையெல்லாம் அடைக்கப்பட்டு விற்பதுவோ
உடலுக்குத் தீங்குதரும் பிளாஸ்டிக்டப்பா

முடிந்தவரை இதைத்தவிர்க்க முயன்றிடுப்பா
இதன்கேட்டை நண்பருக்கும் சொல்லிடப்பா
பிளாஸ்டிக் பயன்பாட்டை விலக்கி வைத்து
இயற்கையுடன் இன்பமுடன் வாழ்ந்திடப்பா


- தமிழோவியன், தெற்கிருப்பு, கடலூர்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017