Home தந்தை பெரியாரின் கதை - 9
திங்கள், 19 பிப்ரவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
மறையாத உண்மைகள்! மறையாத உண்மைகள்! ¨             இல்லாத ஒன்றை இருப்பதாய்ப் பேசும் மாயைகளுக்கு இங்கே பஞ்சமில்லை!   பகுத்தறிவை மறந்து பட்டம் பெறினும் படித்தவன் என்பதில் அர... மேலும்
அரசியின் கோபம் அரசியின் கோபம் --கலவை சண்முகம் ஏனிந்த அரசி இந்தக் குதி குதிக்கிறாள்? நான் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதுபோல. அரண்மனையில்தான் குதித்தாள் என்றால் ... மேலும்
மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து கணினியும் இணையமும் அவசியம்தான் -                     அதுவே கதியென்று கிடக்காதே தினம்தினம்தான்! அலைபேசி பயன்பாடும் முக்கியம்தான் -       ... மேலும்
மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்-_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும்... மேலும்
இறந்தவர் உயிர் உடலைவிட்டு  வெளியே போகிறது? இறந்தவர் உயிர் உடலைவிட்டு வெளியே போகிறது?   இறந்தவரின் உயிர் அவர் உடலைவிட்டு வெளியே செல்கிறது என்று பலரும் எண்ணுகின்றனர். இது அறியாமை மட்டுமல்ல, அசல் தவறும் ஆகும். உயிர் என்பது உ... மேலும்
தந்தை பெரியாரின் கதை - 9
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியார் வைக்கம் வீரர்

- சுகுமாரன்

கேரளத்தில் வைக்கம் எனும் ஊர் இருக்கிறது. அங்கு வைக்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் நடந்து செல்ல அனுமதி இல்லை. நாய்களும் பன்றிகளும் செல்லக்கூட தடை இல்லை. ஆனால் மனிதனுக்குத் தடை இருந்தது.

இந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து வைக்கத்தில் போராட்டம் தொடங்கியது. காங்கிரஸ் கட்சி தலைவரான ஜார்ஜ் ஜோசப் என்பவர் தொடங்கினார். அவரும் அவருடைய தொண்டர்களும் கைது செய்யப்பட்டார்கள். பிறகு போராட்டத்தை நடத்த ஆளில்லை. ஜார்ஜ் ஜோசப்பும் கே.பி.கேசவ மேனனும் சிறையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெரியாருக்கு அனுப்பினார். அக்கடிதத்தில் பெரியாரை போராட்டத்திற்கு தலைமை தாங்கும்படிக் கேட்டிருந்தார்.

அச்சமயத்தில் பெரியார் சுற்றுப்பயணத்தில் இருந்தார். கடிதத்தைப் படித்தார். அவரால் பயணத்தை தொடர முடியவில்லை. மனைவியிடம்  சொல்லிவிட்டு மூட்டை முடிச்சிகளுடன் வைக்கத்திற்குக் கிளம்பிவிட்டார்.

பெரியார் வைக்கத்திற்கு வந்திருக்கிறார் என்றவுடன் மக்கள் கூடிவிட்டனர். போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்துவிட்டது.

பெரியார் வந்திருக்கும் செய்தி திருவாங்கூர் மன்னருக்கும் தெரிந்தது. அவர் மகிழ்ச்சி அடைந்தார். பெரியாருக்கு வரவேற்பு அளிக்க அதிகாரிகளை அனுப்பினார்.

பெரியாரிடம் அதிகாரிகள் வந்து அரசாங்க விருந்தினராகத் தங்கும்படி அழைத்தனர். இதையறிந்த மக்கள் குழம்பினர். பெரியார் போராட்டத்தை நடத்த வந்திருக்கிறாரா? இல்லை நிறுத்த வந்திருக்கிறாரா? என்ற சந்தேகம் கொண்டனர்.

பெரியாரை திருவாங்கூர் மன்னர் உபசரித்த காரணம் வேறு. திருவாங்கூர் மன்னர் டில்லிக்கு போகும் வழியில் ஈரோட்டில் பெரியாருடைய மாளிகையில் தங்கி உணவருந்திச் செல்வது வழக்கம். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியாருக்கு விருந்து வரவேற்பெல்லாம் செய்ய நினைத்தார்.

இந்தக் காரணம் மக்களுக்குத் தெரியாது. அதனால்தான் சந்தேகம் கொண்டனர். ஆனால், பெரியாரின் செயல் அவர்களின் சந்தேகத்தைப் போக்கி விட்டது.

வரவேற்பு அளிக்க வந்த அதிகாரிகளிடம், ‘உங்கள் மன்னரின் அழைப்பிற்கு நன்றி. நான் போராட்டத்தை நடத்த வந்திருக்கிறேன். அரசு விருந்தினராக வரமுடியாது’. வேண்டுமானால் நீங்கள் என்னை கைது செய்யலாம் என்றார் பெரியார்.

‘வைக்கம் போராட்டம் ஒருபோது நிற்காது. மன்னர் தன் கடமையைச் செய்யலாம்’ என்றார் பெரியார்.

போராட்டம் நடந்தது. பெரியார் கைது செய்யப்பட்டார். அருவிக்குத்தி என்ற ஊரில் சிறையில் அடைக்கப்பட்டார் உடன் சென்ற தோழர் அய்யாமுத்துவும் கைதானார்.

தோழர் ராமநாதன் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்தினார். அதன்பின் பெரியாரின் மனைவி நாகம்மை போராட்டத்திற்குத் தலைமை ஏற்றார். பெண்களைத் திரட்டினார். போராட்டம் தீவிரமானது.

ஒரு மாதத்திற்குப் பிறகு பெரியார் விடுதலை செய்யப்பட்டார். பெரியார் மீண்டும் தடையை மீறி போராட்டத்தில் கலந்துகொண்டார். ஆறுமாதம் தண்டனை பெற்றார்.

பிறகு நாகம்மையார் தலைமையில் பெருங்கிளர்ச்சி உருவானது. இறுதியில் அரசாங்கம் பணிந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெருவில் நடக்கும் உரிமை வழங்கப்பட்டது.

இந்தப் போராட்டம் நாடெங்கும் புகழ்ந்து பேசப்பட்டது. பெரியார் “வைக்கம் வீரர்’’ என்று பேரும் புகழும் பெற்றார்.

===================

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஊர் சேரன்மாதேவி. அங்கு மாணவர்கள் தங்கிப் படிக்கும் குருகுலப்பள்ளி ஒன்று நடந்தது. அதை நடத்த காங்கிரஸ் கட்சி பண உதவி செய்தது.

குருகுலத்தில் உயர் ஜாதி (பார்ப்பன) மாணவர்களுக்கு தனி உணவு சமைக்கப்பட்டது. குடிக்கத் தண்ணீர் தனிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டது.

ஒருநாள் பார்ப்பனரல்லாத மாணவன் உயர்ந்த ஜாதி மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடித்து விட்டான். அவன் அதற்காகத் தண்டிக்கப்பட்டான்.

அப்போது பெரியார் காங்கிரஸ் கட்சி செயலாளர். குருகுலத்தில் ஜாதிப் பிரிவினை வளர்க்கப்படுகிறது என்ற செய்தியை அறிந்தார். குருகுலத்திற்கு பண உதவி செய்வதை நிறுத்தினார்.

ஆனால் குருகுலத்தைச் சேர்ந்த ஒருவர் பெரியாருக்குத் தெரியாமல் பணம் வாங்கிச் சென்றுவிட்டார். பெரியாருக்கு இது தெரிந்தது. ஒருநாள் குருகுலத்திற்கு திடீரென்று சென்றார். அங்கு பார்ப்பனரல்லாத மாணவர்களைத் தனியாக உட்கார வைத்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து பெரியார் திடுக்கிட்டார். நல்லறிவு வளர்க்க வேண்டிய இடத்தில் தீண்டாமையைக் கடைபிடிப்பதை எண்ணி மனம் பதைபதைத்தார்.

‘சமபந்தி உணவு அளிக்க வேண்டும் என்று காந்தியடிகளே கூறியுள்ளார். ஆனால், இங்கு ஜாதி வேற்றுமை வளர்க்கிறீர்கள் இது நியாயமா?’ என்று கேட்டார் பெரியார் குருகுலத்தை நடத்தும் வ.வே.சு.அய்யரிடம்.

‘எல்லா பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட நான் சம்மதிக்கமாட்டேன். அப்படிச் செய்தால் குருகுலம் கெட்டுவிடும்’ என்றார் வ.வே.சு. அய்யர்.

பெரியார் கோபத்துடன், குருகுலத்தை ஒழிப்பேன் என்று கூறிவிட்டு வந்தார்.

இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியிலிருந்த சில தலைவர்கள் குருகுலத்தை நடத்திய வ.வே.சு. அய்யரை ஆதரித்தனர். பெரியார் மிகவும் கோபம் கொண்டார்.

பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஆதரவாக இடஒதுக்கீடு கோரும் ஒரு தீர்மானத்தை காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கொண்டு வந்தார். பெரியார் தீர்மானம் ஏற்கப்படவில்லை. இதன் மூலம் ஜாதி சமத்துவத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என்பதைப் பெரியார் புரிந்துகொண்டார்.

பெரியாருக்கு காங்கிரஸ் கட்சி மீது வெறுப்பு ஏற்பட்டது. காங்கிரசை விட்டு விலகினார்.

நாட்டில் ஜாதியை ஒழிக்க பெரியார் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டார்.

ஜாதியை ஒழிப்பதன் மூலமே தாழ்ந்த மனிதன் சுயமரியாதை பெறமுடியும் என்று விளக்கினார் பெரியார்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த காரணத்திற்காக மனிதன் ஆடு மாடுகளைவிட கேவலமாக மதிக்கப்படுவதை எதிர்த்து தன்மானம் கொள்வதே சுயமரியாதையாகும்.

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்