Home வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்? அம்மன் சக்தியாலா?
சனி, 22 செப்டம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்? அம்மன் சக்தியாலா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

வேப்ப மரத்தில் பால் வடிவது அம்மன் (மாரியாத்தாள்) அருள் என்று சொல்லி அங்கு சூடம் கொளுத்தி வழிபடுவார்கள். வேப்ப மரத்தில் பால் வடிவது அம்மன் அருளா? இதன் உண்மை அறிய என்ன செய்ய வேண்டும்?

வேப்ப மரம் தாவர வகையைச் சேர்ந்தது. எனவே, தாவர இயல் படித்த அறிவியல் ஆசிரியரிடம் இதன் உண்மை என்ன என்று கேட்டு அறிய வேண்டும்.

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். இதை மாரியாத்தாள் மகிமை என்று கூறி சூடம் கொளுத்தி வழிபடுகின்றனர். இது அறியாமையின் அடையாளம். இதற்கு எந்தவிதத் தெய்வீகக் காரணமும் இல்லை.

பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ளமாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்ப்பகுதி அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப் பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்து பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) இனிப்புப் பால் போன்று வடியும். இதைத்தான் பால்வடிகிறது என்கின்றனர்.

மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும்.

இப்படி பால்வடிகின்ற மரங்கள், நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும் என்பது இந்த உண்மையை அய்யத்திற்கு இடமின்றி உணர்த்துகிறது. எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லையென்பதும், வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லையென்பதும் இவ்வுண்மையைத் தெளிவாய் உணர்த்தும்.

எனவே, காரணம் புரியாததற்கெல்லாம் கடவுள் மகத்துவம் என்று கண்மூடி வாழ்வதைத் தவிர்த்து, காரணம் அறிந்து, அறிவு வழியில் வாழ வேண்டும்.<

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்