Home காட்டலோனியா
சனி, 22 செப்டம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
காட்டலோனியா
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

I.         அமைவிடமும் எல்லைகளும்

¨           உலக வரைபடத்தில் அகலக்கோடு 410--_490 வடக்கு 10 _ 280 கிழக்கு அமைந்துள்ளது.

¨           போர்த்துகல், பிரான்ஸ், ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ ஆகியன அண்டை நாடுகளாகும்.

¨           கடல் எல்லைகளையும், தரை எல்லைகளையும் கொண்ட பகுதி.

¨           பரப்பளவு 32,108 கி.மீ2 (12,397 சதுர மைல்)

II.   இயற்கை அமைப்பும் காலநிலையும்

¨           நிலவளம், கடற்கரை, மலைகள், ஆறுகள், ஏரிகள் என அனைத்து இயற்கை வளங்களும் நிறைந்த பகுதி ஸ்பெயின் நாட்டின் வளம் மிகுந்த பகுதி காட்டலோனியா.

III.             பொருளாதாரம்

¨           ஸ்பெயின் நாட்டின் பொருளாதாரத்தில் அய்ந்தில் ஒரு பங்கு காட்டலோனியாவிலிருந்து கிடைக்கிறது.

¨           புழக்கத்திலுள்ள நாணயம் யூரோ.

¨           ஸ்பெயினின் 25.6% ஏற்றுமதி பங்களிப்பைச் செய்கிறது.

¨           உள்நாட்டு உற்பதி 19 சதவீதம்.

¨           ஸ்பெயினுக்கு வரும் அன்னிய நேரடி முதலீடு 20.7% இந்த மாகாணத்திற்குப் போகிறது.

¨           ஏராளமான தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்கள் வர்த்தக நிறுவனங்கள் வங்கிகள் யாவும் இங்கு செயல்படுகின்றன.

IV.              மொழியும் மக்களும்

¨           அரானஸ் (Aranese), காட்டலான், ஓக்ஸிடன், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் பேசப்படுகின்றன.

¨           2016 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி காட்டலோனியாவின் மக்கள் தொகை 7,522,596.

¨           ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16% இங்கு வாழ்கின்றனர்.

¨           காட்டலோனியா தனி மொழி, தனிப் பண்பாடு, தனி தேசியக் கொடி, தனி தேசிய கீதம் என சுயாட்சியுடைய மாகாணம்.

V.    தனிநாடு போராட்டம்

¨           ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான காட்டலோனியா, தனி நாடு கோரிக்கையை முன் வைத்துப் போராடிவரும் வேளையில், அந்நாட்டின் அரசைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவது குறித்து ஸ்பெயின் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

¨           தனிநாடு குறித்து ஸ்பெயினின் தடையை மீறி பொது வாக்கெடுப்பு நடத்தியது. இதில் 90% மக்கள் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

¨           காட்டலோனியா தனி நாடு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தது.

¨           2014இல் இருந்து இரண்டு முறை தனி நாட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

¨           இங்கிலாந்து, அமெரிக்கா, அய்ரோப்பிய ஒன்றியம் ஆகியவை காட்டலோனியா தனி நாடாவதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் தனி நாடு அங்கீகாரத்துக்கான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறது.

¨           தலைநகராக பார்சிலோனா அமையும்.

VI.              விளையாட்டு

¨           கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, ரிங் காக்கி, டென்னிஸ், மோட்டார் விளையாட்டு போன்றவை முக்கிய விளையாட்டுகளாய் உள்ளன.

¨           தலைநகர் பார்சிலோனாவில் உலகப் பிரசித்தி பெற்ற காளைச் சண்டை விளையாட்டு நடத்தப்படுகிறது.

VII        வரலாற்றுக் குறிப்பு

¨           அய்ரோப்பா கண்டத்தின் வளம் பொருந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதி.

¨           காட்டலோனியா பகுதி பிரான்சுக்கும், ஸ்பெயினுக்கும் இடையில் மாறி மாறி ஆளப்பட்டுள்ளது.

¨           ஒரு திருமண உடன்படிக்கையின் மூலமாக சில நிபந்தனைகளுடன் ஸ்பெயின் நாட்டுடன் இணைந்தது.

¨           அரகான் மண்டலத்துடன் இணைந்த காட்டலோனியா 19ஆம் நூற்றாண்டில் போர்களால் பாதிப்படைந்தது. சில தன்னிச்சையான அதிகாரங்கள் அளித்து ஸ்பெயின் தன்னுடன் இணைத்துக் கொண்டது.

VIII.  மேலும் சில தகவல்கள்

¨           ‘சார்டனா’ என்பது காட்டலோனிய மக்களால் விரும்பி ஆடப்படும் பிரபலமான நடனம்.

¨           காட்டலோனிய மக்களில் பெரும்பான்மை யினோர் இசையில் ஆர்வமுள்ளவர்-களாக உள்ளனர். ரம்ப, ராக் மற்றும் பாப் இசைகள் பிரபலமாக உள்ளன.

¨           தேசிய தினம் செப்.11

¨           காட்டலான் தொலைக்காட்சி, காட்லானியா வானொலி ஆகியன அரசின் முழுக் கட்டுப்பாட்டில் காட்டலானியா, ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் ஒளி_ஒலிபரப்பப்படுகிறது.

¨           மீன், கடல் உணவுகள், ஆலிவ் ஆயில் காய்கறிகள் போன்றவை முக்கிய உணவு பொருள்கள் ஆகும். பிரட்டில் தக்காளிக் கூழை சேர்த்து உண்ணுவது இங்கு பிரபலம்.

¨           காட்டலோனியாவிலிருந்து வெளிவரும் தினசரி இதழ்கள். காட்டலான், ஸ்பானிய மொழிகளில் வெளிவருகின்றன.

¨           ‘காஸ்டெல்’ என்ற மனிதக் கோபுரம் அமைப்பது விழாக் காலங்களில் நடைபெறுகிறது.

¨           கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்-படுகிறது.

¨           காட்டலோனியாவில் யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியச் சின்னங்கள் அதிக அளவு உள்ளன.

¨           வானூர்தி நிலையங்கள், துறைமுகங்கள், மேம்படுத்திய சாலை வசதிகள், இருப்புப் பாதைகள் என அனைத்து போக்குவரத்து வசதிகளிலும் தன்னிறைவு பெற்ற மாகாணம்.

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்