புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
திருக்குறள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

குன்றின் விளக்காய் இருந்திடலாமே
குறளை தினமும் படித்தாலே - நல்ல
குணங்கள் வளரும் படித்தாலே!

கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்
குறளின் படியே நடந்தாலே - தீய
குணங்கள் மறையும் அதனாலே!

இரண்டு அடியில் இனிய கருத்தை
எடுத்துச் சொன்ன நூலது - வாழ்வு
செழிக்கும் சுவைமுப் பாலது!

இருண்ட வாழ்வில் விளக்கை ஏற்றும்
இன்றே குறளைப் படித்திடு - பேச்சில்
எவர்தான் வரினும் வென்றிடு!

கல்வி ஒன்றே உயர்ந்தோ ராக்கும்
கருத்தை உயர்வாய்ச் சொல்லுது - அதனைக்
கற்றோர் வாழ்க்கை வெல்லுது!

செல்வம் அதிலே சிறந்த செல்வம்
செவியில் கேட்டல் என்றுதான் - நம்
¨செந்நாப் போதார் சொன்னது!

-    செந்நாப் போதார் _ திருவள்ளுவரைப் போற்றும் புகழ்ச் சொற்களில் ஒன்று.
தெய்வப் புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், நாயனார் போன்ற இன்னும் பல புகழ்ச் சொற்களும் உண்டு.

 

- அருப்புக்கோட்டை செல்வம்

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017