Home ஓட்டை விழுந்த பூமியின் சட்டை!
திங்கள், 17 டிசம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் லண்டனில்  10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ப... மேலும்
கின்னஸ் கின்னஸ் சாதனையின் அடையாளம்! இயற்கையின் தோற்றத்தில் மனித சமூகம் என்றைக்குமே வித்தியாசமானதுதான். புதுமைகள் செய்வதில் மனித சமூகத்திற்கு இருக்கும் ஆர... மேலும்
வாழவைக்கும் வாழ்வியல் மாலை வாழவைக்கும் வாழ்வியல் மாலை ஊக்கம் பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே! அறிவொளி அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம் முறிவொளி மர... மேலும்
கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) படக்கதை எழுத்து: உடுமலை படங்கள்: லாங் வாக் டூ ஃபீரீடம் படத்திலிருந்து… மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… நவம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும், 12ஆம் பக்கத்தில் 2ஆம் வரியில் உறக்கத்திலிந்து என்... மேலும்
ஓட்டை விழுந்த பூமியின் சட்டை!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

“என்ன அறிவு வானத்தையே பாத்துட்டு இருக்க, விளையாட வரலையா?’’

“நா வல்லை கிரி. நீங்க எல்லோரும் போங்க’’

“ஏன் வரலை. என்னாச்சு உனக்கு?’’

“சட்டை கிழிஞ்சு போச்சு’’ என சோகம் தோய்ந்த குரலில் கூறினான் அறிவு.

“சட்டை கிழிஞ்சுதக்கெல்லாமா வருத்தப்படுவாங்க. கிழிந்ததை தெச்சுட்டாப் போகுது’’ என்றான் கிரி.

“கிழிஞ்சது என்னோட சட்டை இல்லை. பூமியோட சட்டை’’ என அறிவு வானத்தைப் பார்த்தபடி கூறினான்.

“என்னது பூமிக்கு சட்டையா?’’

“உனக்கு என்னாச்சு புதுசு புதுசா பேசற’’

“எனக்கு ஒன்னும் ஆகலை, உண்மையிலேயே பூமியோட சட்டையில ஒட்டை விழுந்துடுச்சு. அதை நெனைச்சுத்தான் நான் வருத்தப்படுறேன்’’ என்றான் அறிவு.

“எனக்கு ஒன்றுமே புரியலை அறிவு. கொஞ்சம் புரியும்படியா சொல்லு.’’

“சரி. நல்லா கேட்டுக்கோ! நாம எப்படி சட்டை போடறமோ அப்படித்தான் இந்த பூமிக்கு மேலே ஓசோன் படலம் இருக்கு. அதுல இப்ப ஓட்டை விழுந்துருச்சு. அதனால நமக்கு பல பாதிப்புகள் வரப்போகுது’’.

“ஓசோன் படலமா? அப்படின்னா என்ன? அது ஓட்டை விழுந்தா நமக்கு என்ன பாதிப்பு வரும்? கொஞ்சம் தெளிவா சொல்லு அறிவு.’’

மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள். இதை வேதி குறியீட்டில் ளி3 என்பர். இந்த ஓசோன் வாயு படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. இதுல 20 முதல் 25 கி. மீட்டர் வரையிலான உயரம் மிக அடர்த்தியாக இருக்கும். சூரியஒளிக் கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள், புறஊதாக் கதிர்கள் இருக்கும். இதில அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து நம்ம பூமிய வெப்பம் அடையச் செய்கிறது.

ஆனால், இந்தப் புறஊதாக் கதிர்கள் பூமியில் உள்ள மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படி தீமை ஏற்படுத்தும் புற ஊதாக் கதிர்கள் பூமியை வந்து தாக்காமல் நம்மைக் காக்கும் கவசமாக இருப்பதே இந்த ஓசோன் படலம்.’’

“ஓ... இதுதான் ஓசோன் படலமா, எப்படி இந்த ஓசோன் படலம் ஓட்டை ஆச்சு’’ என ஆர்வம் பொங்க கேட்டான் கிரி.

“இந்த ஓசோன் படலம் ஓட்டை ஆவதற்கு முக்கிய காரணமே மனிதாகளாகிய நாம்தான் கிரி’’

“என்ன சொல்லற அறிவு, நாமதான் காரணமா?’’

“ஆமாம், இந்த ஓசோன் படலம் ஓட்டை ஆனதற்கு முழு பொறுப்பு நாமதான். நாம அன்றாடம் பயன்படுத்தற குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் குளோரா புளோரா கார்பன் என்னும் வாயு வளிமண்டலத்திலுள்ள ஓசோன் துகள்களைத் தாக்குகிறது. இதனால் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்படுகிறது’’ எனக் கூறிவிட்டு பெருமூச்சு விட்டான் அறிவு.

“இதனால நமக்கு என்ன மாதிரி தீமைகள் வரும் ஹரி’’

“இப்படி ஓசோன் படலம் ஓட்டை ஆவதனால பல தீமைகள் வரும். வளிமண்டலத்தில் மிகுதியான வெப்பம் கூடும். இதனால் உலக வெப்பநிலை உயரும். இதன் காரணமாக வறட்சி ஏற்படும். பனிமலைகள் வேகமாக உருகி கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வருவதால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் ஏற்படக் கூடும். மேலும், தாவரங்களின் உற்பத்தித் திறன் குறைவதோடு விலங்கினங்களும் அதிக அளவு பாதிக்கப்படும்.’’

இதைக் கேட்டதும் கிரியின் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

“இந்த ஓசோன் படலம் ஓட்டை அடையாமல் தடுக்க ஏதாவது விதிமுறைகள் இருக்கா அறிவு, இருந்தா சொல்லு. உடனே நாம அதைச் செய்வோம்” என்றான் கிரி.

“இதற்கும் மேலேயும் ஓசோன் படலம் ஓட்டை ஆகாமல் தடுக்க நம்மால் முடியும். அதற்கு அனைவரின் கூட்டு முயற்சியும், ஒத்துழைப்பும் வேண்டும். முதலில் குளோரா புளோரா கார்பனை வெளியிடும் சாதனங்களைத் தடை செய்ய வேண்டும். அதிக அளவில் மரங்களை நடவேண்டும். இதுபோன்ற செயல்களினால் மட்டுமே நம்மால் ஓசோன் படலத்தை காக்க முடியும்’’ என்றான் அறிவு.

“எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினையைப் பற்றி தெரிஞ்சுட்டேன். இப்பவே ஓசோன் படலம் ஓட்டை ஆவதிலிருந்து தடுப்பதற்கான நடைமுறைகளில் ஈடுபடப் போறேன். முதல் வேலையா எங்க வீட்டச் சுத்தியும் நிறைய மரங்களை நடப்போறேன். குளிரூட்டியை பயன்படுத்துவதையும் குறைச்சுக்கப் போறேன். இனி எங்க வீட்டுல குளிர்சாதனப் பெட்டிக்கு பதிலா மண்பானையை பயன்படுத்தப் போறேன்’’ என்றான் கிரி.

“உன்ன மாதிரியே எல்லோரும் செயல்பட்டாங்கன்னா ஓசோன் படலத்தை ஓட்டை ஆகாமல் காப்பாத்திடலாம் கிரி. நம்மிலிருந்து தொடங்குவதுதானே மாற்றம். அதே நேரம் கருவிகளைப் பயன்படுத்துறதை முற்றிலும் குறைக்க முடியாது. அவற்றால் பாதிப்புகள் வராமல் அறிவியலைக் கொண்டு ஆராய வேண்டும். அதுதான் தீர்வு” என்றான் அறிவுமணி.


- உமையவன்

Share
 

முந்தைய மாத இதழ்

அன்பு அன்பு அன்பு என்பது அனைவரின் மனதிலும் அடியினில் சுரந்திடல் தெளிவாகும்! இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும் இணைந்தலை* புரண்டது வெளியாகும்!   ... மேலும்
பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெயருக்குப் பொருந்தச் சீரோடு அறியா மையினை வேரோடு அகற்றிடப் பிறந்த மாநாடு! உலகம் இதுவரை காணாத ஒப்பற்ற முதலாம... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் -சரவணா இராஜேந்திரன் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி என்று ஒருதரப... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் சிறிய இருக்கை தேவையான பொருட்கள்: 1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை. செய்முறை 1.     முதல... மேலும்