புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
தமிழர் திருநாள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

தைத்திங்கள் முதல் நாள்!

தமிழர் போற்றும் பெருநாள்!

 

புத்தாடை, பச்சரிசிப்

பொங்கலிட்டு

தமிழப் புத்தாண்டை

வரவேற்போம்!

 

இனமானத் தமிழர்

இன்பம் காணவே!

நலமான கொள்கைகளை

நம் நெஞ்சில் சேர்ப்போம்!

வளமான சமுதாயத்திற்கு

பெரியார் காட்டிய வழியை

உறுதியுடன் ஏற்போம்!

 

பொங்கல் திருநாளில்

புதுமைகள் மலரட்டும்!

சிந்தைமிகு தமிழர் நெஞ்சில்

பகுத்தறிவு வளரட்டும்!

 

சந்தைமிகு உலகில்

சரித்திரம் படைக்க

இன்றே நாம் எழுவோம்!

விந்தைமிகு வீரத்தை

விளையாட்டில்

நாம் தருவோம்!

- கவிஞர் அ.உதயபாரதி

துணிவு கொள்வாயே!

தம்பி தம்பி உன்னை நம்பி

தரணியில் வாழ்வாயே

பூனையைப் பார்த்து சகுணம் என்று

நம்பி விடாதே

உலகம் உன்னை வாழ்த்த இருக்கு

சோம்பி விடாதே!

அங்கே இங்கே பேய் இருக்கென்று

பயமும் கொள்ளாதே!

சின்னதம்பி சின்னதம்பி

துணிவு கொள்வாயே!

- வி.பி.மாணிக்கம், புதுச்சேரி

தமிழ்மொழி

அன்பு மொழி

ஆக்கபூர்வ மொழி

இனிய மொழி

ஈதல்மிகு மொழி

உயர்வான மொழி

ஊக்கம் தரும் மொழி

எழில்மிகு மொழி

ஏற்றம் தரும் மொழி

ஐ மிகு மொழி

ஒப்பற்ற மொழி

ஓங்கி ஒலிக்கும் மொழி

ஔவைப் பாட்டியைத் தந்த அமுத மொழி

நம் மொழி!

செம்மொழி!

தமிழ்மொழி!

- சா.மூ.அபிநயா, வாலாசாப்பேட்டை

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017