Home உலக நாடுகள்
சனி, 22 செப்டம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
உலக நாடுகள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

அமைவிடமும் எல்லைகளும்:

¨           ‘ஹங்கேரி’, அய்ரோப்பாவில் மய்யத்தில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும்.

¨           உலக வரைபடத்தில் 47O 26` N   19O15` E ணி பகுதியில் அமைந்துள்ளது.

¨           இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன.

¨           ‘புதாபெஸ்ட்’ இதன் தலைநகரமும், மிகப் பெரிய நகரமும் ஆகும்.

¨           நாட்டின் மொத்த பரப்பளவு 93,000 சதுர கி.மீ. (35,000 சதுர மைல்)

¨           நிலப்பரப்பில் உலகின் 109ஆவது இடத்தில் உள்ளது.

மொழியும் மக்களும்

¨           ஆட்சிமொழி ஹங்கேரியன்.

¨           83.7% ஹங்கேரியர், 14.7% ஏனையோர், 3.1% ரோமா, 1.3% ஜெர்மானியர் வாழ்கின்றனர்.

¨           மக்கள் தொகை 9.797,561 (உலக மக்கள் தொகையில் 92ஆம் இடம்)

¨           மொத்த மக்கள் தொகையில் 76% கிறித்தவர்களும், 3% மக்கள் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர்.

¨           21% மக்கள் எந்த மதத்திலும் சாராதவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம்:

¨           ‘ஹங்கேரி’ அய்ரோப்பிய ஒன்றியம், நேட்டோ, பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகிய அமைப்புகளில் உறுப்பு நாடாக உள்ளது.

¨           போரிண்ட் (HUF) ï நாணயம் புழக்கத்தில் உள்ளது.

¨           ஹங்கேரி ஓர் உயர் -_ நடுத்தர _ வருவாயைக் கொண்ட நாடாக உள்ளது.

¨           ஹங்கேரி ஒரு பிரபலமான சுற்றுலா ஈர்ப்பு நாடென்பதால் ஆண்டுக்கு 10.67 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் பெருந்தொகை வருவாயாக கிடைக்கிறது.

வரலாற்றுக் குறிப்புகள்:

¨           ‘ஹங்கேரி’ என்ற பெயர் 7ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

¨           ‘ஹங்கேரி’ நாடு இளவரசன் ஆர்ப்பாதுவினால் உருவாக்கப்பட்டது.

¨           ஆர்ப்பாதுவின் கொள்ளுப்பேரன் முதலாம் ஸ்டீவன், கி.பி.1000ஆம் ஆண்டில் கிறித்துவ நாடாக மாற்றி அதன் அரசனானான்.

¨           முதலாம் உலகப் போரை அடுத்து, ‘ஹங்கேரி’ தனது 71% நிலப்பகுதியையும், 58% மக்கள் தொகையையும், 32% ஹங்கேரிய இனக் குடிகளையும் இழந்தது.

¨           இரண்டாம் உலகப்போரின் முடிவில் ‘ஹங்கேரி’, சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து 1947 முதல் 1989 வரை நாற்பதாண்டுகால கம்யூனிச ஆட்சி நிலவியது.

அரசு முறை

¨           1989 அக்டோபர் 23இல் ‘ஹங்கேரி’ ஜனநாயக நாடாளுமன்றக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

¨           “ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு’’ அரசாங்கம் நடைபெறுகிறது.

¨           தற்போதைய அரசுத் தலைவராக ‘யானேசு ஆடெர்’ பிரதமராக விக்டர் ஒர்பான் ஆகியோர் உள்ளனர்.

¨           சட்டமன்றம் ‘தேசியப் பேரவை’ என்று அழைக்கப்படுகிறது.

மேலும் பல தகவல்கள்:

¨           அய்ரோப்பிய ஒன்றியத்தில் அதிக அளவு இயற்கைத் தேன் உற்பத்தி செய்யும் நாடாகும். நாடு முழுவதும் 15,000 தேனி வளர்ப்பு மையங்கள் உள்ளன.

¨           ரோபினியா போலிடோசிசிய மலர்த்தேன் இங்கு மிகப் பிரபலம்.

¨           உலகின் மிகப் பெரிய வெப்பநீர்க் குகை உள்ளது.

¨           உலகின் இரண்டாவது பெரிய வெந்நீரூற்று ஏரி (ஏவீசு ஏரி) உள்ளது.

¨           நடு அய்ரோப்பாவின் மிகப் பெரிய ஏரி (பலத்தான் ஏரி) உள்ளது.

¨           அய்ரோப்பாவின் மிகப் பெரிய இயற்கை புல்நிலம் (ஓர்த்தோபாகி தேசிய வனம்) இங்குள்ளது.

¨           அதிக எண்ணிக்கையில் ஏரிகள் உள்ள நாடு.

¨           அதிக தொடர்ச்சியான புல்வெளிகள் உள்ள நாடு.

¨           ‘ஹங்கேரி’ உயர்தர சாலை வசதி, இரயில்வே, விமானம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்தில் தன்னிறைவு பெற்ற நாடு.

¨           ‘ஹங்கேரி’யில் உள்ள புதாபெஸ்ட் மெட்ரோ உலகின் இரண்டாவது பழமையான சுரங்க பாதை இரயில்வே ஆகும்.

¨           5 பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

¨           ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டத்தில் 3 மூன்றுமுறை தங்கம் வென்ற நாடு.

¨           உலகின் ஆரோக்கியமான மக்கள் வசிக்கும் நாடு ‘ஹங்கேரி’.

¨           நாடு முழுக்க இளைஞர்களாலும், சிறுவர்-களாலும் கால் பந்தாட்டம் விரும்பி விளையாடப்படுகிறது.

¨           கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மக்கள் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர்.

¨           பல அரசியல் கட்சிகள் கொண்ட நாடு.

¨           ‘ஹங்கேரி’ 19 மாகாணங்களாக பிரிக்கப்-பட்டுள்ளன.

¨           தரைப்படை, விமானப்படை போன்றவற்றில் வலிமையான நாடு.

¨           அறிவியல் தொழில்நுட்பத்தில் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்த நாடு.

¨           பெரும்பான்மையினராக கற்றவர்கள் வாழும் நாடு.

¨           ‘ஹங்கேரி’யில் அனைவருக்கும் உயர்தரமான கட்டாயக் கல்வி வழங்கப்படுகிறது.

¨           “பீஸ் பல்கலைக்கழகம்’’ (1367), “வெஸ்ப்ரீம் பல்கலைக்கழகம்’’ என உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.

¨           மருத்துவத்துறையில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு என்பதால் பல், பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற சிகிச்சைகளுக்கு உலக மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர்.

¨           கட்டடக் கலையில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடு. புகழ்பெற்ற கட்டடங்கள் பல ‘ஹங்கேரி’யில் உள்ளன.

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்