Home பிளாஸ்டிக்
புதன், 19 டிசம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் லண்டனில்  10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ப... மேலும்
கின்னஸ் கின்னஸ் சாதனையின் அடையாளம்! இயற்கையின் தோற்றத்தில் மனித சமூகம் என்றைக்குமே வித்தியாசமானதுதான். புதுமைகள் செய்வதில் மனித சமூகத்திற்கு இருக்கும் ஆர... மேலும்
வாழவைக்கும் வாழ்வியல் மாலை வாழவைக்கும் வாழ்வியல் மாலை ஊக்கம் பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே! அறிவொளி அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம் முறிவொளி மர... மேலும்
கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) படக்கதை எழுத்து: உடுமலை படங்கள்: லாங் வாக் டூ ஃபீரீடம் படத்திலிருந்து… மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… நவம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும், 12ஆம் பக்கத்தில் 2ஆம் வரியில் உறக்கத்திலிந்து என்... மேலும்
பிளாஸ்டிக்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பல் துலக்கப் பயன்படும் பிரஷ் முதல் பாத்ரூம் மக் வரை சகலமும் பிளாஸ்டிக் ஆகிவிட்டன. மளிகை முதல் உணவு, மருந்துகள் என அனைத்தும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு கிடைக்கின்றன. மலிவான விலையில், எளிதில் கிடைக்கக் கூடியது, எளிதில் அப்புறப்படுத்தக் கூடியது என்பதால், பிளாஸ்டிக்கின் மோசமான பின்விளைவு பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.

பிளாஸ்டிக்கினால் விளைந்த கேடு:

ஒவ்வொரு ஆண்டும் கடலிலும், ஆற்றிலும் விழும் பிளாஸ்டிக் குப்பைகளால் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடல் பறவைகளும், கடல் பாலூட்டிகளும் உயிரிழக்கின்றன.

¨           ஒவ்வோர் ஆண்டும் 13 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்படுகின்றன.

¨           ஒரு நி-மிடத்திற்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

¨           பிளாஸ்டிக் உடைந்தாலும், கிழிந்தாலும் அது நச்சுகளை வெளியேற்றிக்கொண்டுதான் இருக்கும்.

¨           ஒரு பிளாஸ்டிக் பை அழிய 15 முதல் 100 ஆண்டுகள் வரை ஆகும்.

பிளாஸ்டிக்கைத் தவிர்க்க.. மாற்று வழிகள்...

¨           பிளாஸ்டிக் பிரஷ் பயன்படுத்தினால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, பிரஷ்ஷில் இருந்து அதிகமான ரசாயனம் வெளியாகும்.

¨           தண்ணீர் குடிக்க, பித்தளை, துரு ஏறா எஃகு stainless steel போத்தல்களைப் பயன்படுத்தலாம். மதிய உணவை எடுத்துச் செல்வதற்கு பிளாஸ்டிக் அல்லாத எஃகு பாத்திரங்களை எடுத்துச் செல்வது நல்லது.

¨           குழந்தைகளுக்கு பேபி பாட்டிலோ, பிளாஸ்டிக் அல்லது ரப்பர் முகிழ் (Nipple)
கொடுப்பதைத் தவிருங்கள். குழந்தைகளின் பால் போத்தலில் மிக மோசமான பிளாஸ்டிக் கலக்கப்படுகிறது. உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றை ஸ்பூன், பாலாடை, ஸ்டீல் கிண்ணம், ஸ்டீல் தம்ளரில் கொடுக்கலாம்.

¨           இளநீர், பழச்சாறு குடிக்கும்போது உறிஞ்சு குழலைத் தவிர்க்க வேண்டும்.

¨           கடைக்குச் செல்கையில், துணிப் பைகளை வைத்திருங்கள்.

¨           மூன்று ஆர் (R)-களை அதாவது REDUCE, REUSE, RECYCLE
என்பதை நாம் எப்போதும் கடைபிடித்தல் வேண்டும். அதாவது, பிளாஸ்டிக் பயன்படுத்துவதைக் குறைப்போம். தேவை எனில், ஏற்கனவே இருக்கும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவோம். பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வோம்.

இதைப் பின்பற்றினால் நம் உடலும், நாம் வாழும் பூமியும் ஆரோக்கியமாக இருக்கும்!

.

ந.சீதளாதேவி, சே.மரியம்,

ஒன்பதாம் வகுப்பு,

பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாபநாசம்,

Share
 

முந்தைய மாத இதழ்

அன்பு அன்பு அன்பு என்பது அனைவரின் மனதிலும் அடியினில் சுரந்திடல் தெளிவாகும்! இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும் இணைந்தலை* புரண்டது வெளியாகும்!   ... மேலும்
பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெயருக்குப் பொருந்தச் சீரோடு அறியா மையினை வேரோடு அகற்றிடப் பிறந்த மாநாடு! உலகம் இதுவரை காணாத ஒப்பற்ற முதலாம... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் -சரவணா இராஜேந்திரன் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி என்று ஒருதரப... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் சிறிய இருக்கை தேவையான பொருட்கள்: 1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை. செய்முறை 1.     முதல... மேலும்