புதன், 17 ஜனவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திறமை திறமை உயர்ந்த பனைமரம். அதன் ஓலை நுனியில் கூடுகட்டிக் கொண்டிருந்தது ஒரு தூக்கணாங்குருவி. தன் சின்ன அலகால் ஓலையின் ஓரத்திலிருந்து இழை எடுத்து பி... மேலும்
சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி உடுமலைப்பேட்டை மாணவரின் கண்டுபிடிப்பு! உடுமலைப்பேட்டையைச் சார்ந்த மாணவர் சுற்றுப்புற மாசுபாட்டைத் தடுக்கும் கருவி ஒன்றை உருவாக்கி சிந்திப... மேலும்
தமிழ்த் திருநாள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

வாழையும் கரும்பும் நெல்லும்

வயல்களில் விளைந்து வந்து

மேழியின் பெருமை சொல்லும்

மிகப்பெரும் திருநாள் பொங்கல்!

 

பாலுடன் அரிசி வெல்லம்

பருப்புநெய்ப் பொங்கல் செய்து

காலையில் படைத்து வண்ணக்

கதிர்தொழும் திருநாள் பொங்கல்!

 

காளைகள் தினமும் சென்று

கடுமையாய் உழைத்தல் கண்டு

நாளொரு தினத்தில் நன்றி

நவின்றிடும் திருநாள் பொங்கல்!

 

வேலென வேகம் கொண்டு

விரைந்திடும் ஏறு தன்னை

வாலிபர் அடக்கி வென்று

வரும்மறத் திருநாள் பொங்கல்!

 

ஏழைகள் செல்வர் என்ற

ஏற்றத்தாழ் வெதுவும் இன்றி

மாளிகை குடிசை எல்லாம்

மகிழ்வுறும் திருநாள் பொங்கல்!

 

ஞாலமும் மறையாய் எண்ணும்

நறும்தமிழ்க் குறள்நூல் தந்த

சீலரின் நினைவாய் மண்ணில்

சிறப்புறும் திருநாள் பொங்கல்!

Share
 

முந்தைய இதழ்கள் 2016

முந்தைய இதழ்கள் 2017

பிஞ்சு 2017