Home மனம் என்பது இதயம்?
திங்கள், 19 பிப்ரவரி 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
மறையாத உண்மைகள்! மறையாத உண்மைகள்! ¨             இல்லாத ஒன்றை இருப்பதாய்ப் பேசும் மாயைகளுக்கு இங்கே பஞ்சமில்லை!   பகுத்தறிவை மறந்து பட்டம் பெறினும் படித்தவன் என்பதில் அர... மேலும்
அரசியின் கோபம் அரசியின் கோபம் --கலவை சண்முகம் ஏனிந்த அரசி இந்தக் குதி குதிக்கிறாள்? நான் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதுபோல. அரண்மனையில்தான் குதித்தாள் என்றால் ... மேலும்
மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து மின்னணுச் சாதனங்களை மிகையில்லாது பயன்படுத்து கணினியும் இணையமும் அவசியம்தான் -                     அதுவே கதியென்று கிடக்காதே தினம்தினம்தான்! அலைபேசி பயன்பாடும் முக்கியம்தான் -       ... மேலும்
மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? மெட்ராஸ்-ஐ பார்த்ததும் தொற்றும்? பொதுவாக மழைக்காலங்களில் மெட்ராஸ்-_ஐ என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு கண்நோய் பரவலாகத் தொற்ற ஆரம்பிக்கும். அப்போது கண் உறுத்தல் அதிகம் இருக்கும்... மேலும்
இறந்தவர் உயிர் உடலைவிட்டு  வெளியே போகிறது? இறந்தவர் உயிர் உடலைவிட்டு வெளியே போகிறது?   இறந்தவரின் உயிர் அவர் உடலைவிட்டு வெளியே செல்கிறது என்று பலரும் எண்ணுகின்றனர். இது அறியாமை மட்டுமல்ல, அசல் தவறும் ஆகும். உயிர் என்பது உ... மேலும்
மனம் என்பது இதயம்?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

காரணமின்றி ஏற்காதீர்

மனம் என்பது இதயம்?

- சிகரம்

படித்தவர்கள் முதல் பாமரர் வரை அனைவரிடமும் காணப்படும் குழப்பம் இது. கவிஞர்கள் இத்தவற்றின்மீது எத்தனையோ கற்பனைக் கோட்டைகளைக் கட்டி விடுகின்றனர்.

“இதயத்தில் இடங்கொடு!’’

“நான் இருப்பது உன் இதயத்தில்!’’

என்று உள்ளம் உருக, உணர்ச்சி மயமாய் உருகுகின்ற காட்சியெல்லாம் இன்று திரைப்படங்களில் பார்க்கலாம். பிஞ்சுகளே நீங்கள் இந்த மனம் என்பது எது என்பதுபற்றி சிந்தித்தது உண்டா? இதோ உங்களுக்கு சிறு விளக்கம்.

இதயம் என்பது என்ன?

இது புரியாமல்தான் மேற்கண்ட தவறான கற்பனைகள். இதயம் என்பது இரத்தம் பாய்ச்சும் இயந்திரம். அவ்வளவே!

சுத்தம் செய்யப்பட்ட இரத்தத்தைப் பெற்று, மீண்டும் சுத்த இரத்தத்தை உடலுக்குப் பாய்ச்சுகின்ற பணியை ஒயாது செய்யும் ஓர் இயந்திரம் அது.

ஆனால், இதயத்தில் நம் நினைவுகள் பதிவாவது போலவும், நாம் இரக்கப்படுகின்ற உணர்வு அங்கேதான் எழுவது போலவும், கொடுஞ் சிந்தனைகள் அங்கேதான் குடிகொண்டிருப்பதாயும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது  அறியாமை; உண்மையல்ல.!

இரக்கக் குணம் அற்றவர்களைக் கல் நெஞ்சினர் என்பர்.

படித்ததை நெஞ்சில் வை என்பர். நெஞ்சில் என்ன இருக்கிறது? இதயமும், நுரையீரலுந்தான். இதில் எப்படி படித்தது பதியும்?

ஆக, மனம் என்பது நெஞ்சில் இருப்பதாக, அதுவும் இதயத்தில் இருப்பதாகக் கருதுவதும், நம்புவதும் அறியாமை. அது தப்பு.

நாம் ஏதாவது ஓர் அதிர்ச்சிக்கு ஆளாகும்போது நெஞ்சில் ‘திக்’ என்ற உணர்வு தோன்றும். அப்போது மனது ‘திக்’ என்றது என்பர். அதனால் இதயத்தை மனம் என்று எண்ணும் அறியாமை ஏற்படுகிறது.

நெஞ்சில் ‘திக்’ என்பது எதனால்?

நாம் திடீரென அதிர்ச்சிக் குள்ளாகும் போது, நமது இரத்த ஓட்டம் திடீரென விரைவுபடும். சட்டென்று  இதயத்தில் மோதும். அப்போதுதான் நமக்குத் ‘திக்’ என்ற உணர்வு ஏற்படுகிறது. மற்றபடி இதயத்தில் மனம் இருப்பதால் அல்ல.

நாம் பயப்படும்போதுகூட நெஞ்சு “டப் டப்’’ என்று அடித்துக்கொள்ளும். இரத்த ஓட்டம் விரைந்து செல்வதன் விளைவே இது. இதயம் விரைவாய்த் துடிப்பதன் உணர்வே அது.

மனம் என்பது மூளைதான்!

நாம் எண்ணினாலும், சிந்தித்தாலும், இரக்கப்பட்டாலும் எல்லாம் மூளையில்தான் நடைபெறுகிறது. நாம் படிப்பதும், பார்ப்பதும், கேட்பதும், பதிவாவதும் மூளையில்தான். நெஞ்சில் - இதயத்தில் அல்ல. அதனால்தான் மூளை பாதிக்கப்பட்டால் நினைவு மறந்து போகிறது.

எனவே, மனது என்பது மூளையேயன்றி நெஞ்சு _ இதயம் அல்ல!

 

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்