Home அரசியின் கோபம்
புதன், 16 ஜனவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
களை கட்டிய காலை நிகழ்ச்சி களை கட்டிய காலை நிகழ்ச்சி பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து... மேலும்
அல்லும் பகலும் உழைத்திடடா! உழைப்பால் உலகை வென்றிடலாம் உண்மை! இதனை அறிந்திடுவீர்! உழைப்பால் முடியா செயலென்று உலகில் எதுவும் இல்லையென்பீர்!   அடிமேல் அடிகள் அடித்தி... மேலும்
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! ஆசிரியர் தை… தை… தை… இயற்கையின் விந்தை எழில் பொங்கும் வித்தை அழிய வேண்டும் அகந்தை ஆக வேண்டும் மேதை மகிழ வைக்கும் விருந்தை குளிர வேண்ட... மேலும்
உங்கா, சிங்கா, மங்கா கதை கேளு… கதை கேளு… விழியன் பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்ட... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் விழா நாயகர்கள் சரவணா ராஜேந்திரன் வள்ளுவர், கவுதம புத்தர், வர்த்தமான மகாவீரர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தல... மேலும்
அரசியின் கோபம்
PDF  | Print |  E-mail
User Rating: / 1
PoorBest 

--கலவை சண்முகம்

ஏனிந்த அரசி இந்தக் குதி குதிக்கிறாள்? நான் என்னவோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்டதுபோல. அரண்மனையில்தான் குதித்தாள் என்றால் இப்போது உப்பரிகையில் நின்றுகொண்டு குதிக்கிறாள். பால்கனியில் நின்றுகொண்டு குதிக்கிறாள். கட்டிலில் படுத்துக்கொண்டு குதிக்கிறாள். குதிகுதியென்று குதித்துக் கொண்டே இருக்கிறாளே...! வாய் தவறிக்கூட நான் எதுவும் அவளைச் சொன்னதாக எனக்கு நினைவில்லையே... என்னையறியாமல் நான் எதுவும் சொல்லியிருப்பேனா? பாலைக் குடித்துவிட்டு இரவிலே குவளையை அப்படியே தூக்கி எறிந்துவிட்டல்லவா தூங்கிவிட்டேன்... கையிலே கொடுக்காமல் வீசியெறிந்தது ஒரு குற்றமாக இருக்குமோ? பலமுறை இப்படி நடந்திருக்கிறதே.. இப்போது மட்டும் அது எப்படிக் குற்றமாகும்? சரி, இனி அந்தத் தவற்றைச் செய்யக்கூடாது

கனவிலே ஏதாவது அவளைத் தரக்குறைவாகப் பேசியிருப்பேனா? இல்லையே... கனவு வந்ததாக ஒரு தகவலும் இல்லையே! பிறகேன் அரசி இப்படிக் குதிக்கிறாள்? ‘அதெப்படிச் சொல்லலாம்?... அதெப்படிச் சொல்லலாம்?’ என்று. அதெப்படி அதெப்படி என்று சொல்கிறாளே தவிர அப்படி நான் என்ன சொன்னேன் என்பதைச் சொல்ல மாட்டேன் என்கிறாளே. இதென்னப் புரியாத புதிர்?

மாமன்னன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு இதையே யோசித்துக் கொண்டிருந்தார். அமைச்சர் வந்தார். “அரசே! இன்று சிற்றரசர்கள் சிலரை வரச் சொல்லியிருந்தீர்கள்! வருங்காலத்தில் போர் மேகங்கள் சூழ்ந்தால் கூட்டணி அமைத்துக் கொள்வது பற்றி. தங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்டுக்கொண்டே...

மாமன்னர் அவர் மீது எரிந்து விழுந்தார். “போங்கள்... போங்கள்... இன்று நான் யாரையும் சந்திக்க விரும்பவில்லை. நாளை என்ன... இன்றே அத்தகையப் போர்ச் சூழல் உருவாகிவிட்டது” அமைச்சருக்கு எதுவும் விளங்கவில்லை. “புரியும்படியாகச் சொல்லுங்கள் அரசே’’ என்றார்.

“நன்றாகக் காது கொடுத்துக் கேளுங்கள்” என்ற மாமன்னன், அரசி பால்கனியில் நின்றபடி “அதெப்படிச் சொல்லலாம்? அதெப்படிச் சொல்லலாம்? என்று குதிக்காமல் குதிப்பதைச் சுட்டிக் காட்டினார்.

“என்ன சொல்கிறார்கள் நமது அரசி?”

“அதுதானே எனக்கும் புரியவில்லை. முடிந்தால் எனக்கொரு உதவி செய்யுங்கள். போய் உங்கள் மகாராணியிடமே கேட்டுத் தெரிந்துகொண்டு வந்து சொல்லுங்கள். அதற்கு முன் அந்த சிற்றரசர்களை இன்னொரு நாள் சந்திப்பதாகக் கூறி நிலைமை சரியில்லை என்று பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்.”

அமைச்சர் அப்படியே செய்தார். சிற்றரசர்கள் போய்விட்டார்கள். உடனே சென்று அரசியைச் சந்தித்தார்.

“வாங்க! அமைச்சரே வாங்க! அதெப்படிச் சொல்லலாம் என்று உங்கள் மாமன்னரிடம் நீங்களாவது கேட்டீர்களா?” என்று கேட்க அமைச்சர் தலையைப் பிய்த்துக் கொண்டார். “அரசி! என்ன இது? அதெப்படிச் சொல்லலாம், அதெப்படிச் சொல்லலாம் என்று சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னால் எப்படி? மாமன்னர் அப்படி என்னதான் சொன்னார்? அதைச் சொல்லுங்களேன்.”

“முதலில் இதற்கு விளக்கம் சொல்லுங்கள். அக்குதொக்கு இல்லை என்றால் என்ன அர்த்தம்?”

“அக்கு என்றால் நேரடியான உறவுமுறை. தொக்கு என்றால் மறைமுகமான உறவு முறை. இவ்வளவுதான்” என்றார் அமைச்சர்.

“நினைத்தேன்... நினைத்தேன்... இப்படித்தான் இதற்குப் பொருள் இருக்கும் என்று. இப்போது தாங்களும் தெளிவாகக் கூறிவிட்டீர்கள். என்னைப் பார்த்து உங்கள் மாமன்னர் இப்படிக் கூறலாமா? அதெப்படிச் சொல்லலாம்? அதெப்படிச் சொல்லலாம்?” என்று மீண்டும் மீண்டும் அரசி புலம்பினாள்.

“உங்கள் அரசர் என்னைப் பார்த்து, “அக்கு தொக்கு இல்லாதவள் என்று நேரடியாகக் கூறிவிட்டார். போதுமா’’ என்றாள் அரசி பலமாக அழுதபடி. “எந்த உறவும் இல்லாத அனாதையா நான்? அனாதையா நான்? நீங்கள் சொல்லுங்கள். நீங்களே சொல்லுங்கள்.”

அரசி கூறியதைக் கேட்டு அமைச்சர் நிலைகுலைந்து நின்றார். “மாமன்னரா அப்படிச் சொன்னார்? மாமன்னரா அப்படிச் சொன்னார்? அரசரா அப்படிச் சொன்னார். இருக்காது... அப்படி எதுவும் நடந்திருக்காது. நம்ப முடியவில்லை. நம்பமுடியவில்லை” என்று அமைச்சரும் அரசியுடன் சேர்ந்துகொண்டு புலம்பித் தள்ளினார்.

“போங்கள்... உங்கள் மாமன்னரிடம் போய் அதெப்படிச் சொல்லலாம் என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வதைப் போல ஒரு நாலு வார்த்தை நன்றாகக் கேட்டுவிட்டு வாருங்கள். இது இந்த நாட்டு அரசியின் ஆணை!” என்றாள் அரசி. அமைச்சரும் மாமன்னரிடம் ஓடோடி வந்தார். “நம்ப முடியாவிட்டாலும்கூட நான் நம்பத்தான் வேண்டியுள்ளது. அதெப்படி நீங்கள் அப்படிச் சொல்லலாம்? சொல்லலாமா அரசே?” என்று அமைச்சர் கேட்க...

“அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்” என்று கேட்டுவரச் சொன்னால் நீங்களும் என்னிடம் வந்து என்னைப் பார்த்து அதெப்படிச் சொல்லலாம்.. அதெப்படிச் சொல்லலாம் என்று குதித்தால் நான் என்ன சொல்வது? சொல்லாத ஒன்றை எப்படிச் சொல்வேன்? சொல்லுங்கள்” என்றார் மாமன்னர் அமைச்சரிடம்.

“அக்கு தொக்கு இல்லை” என்றீர்களா அரசியைப் பார்த்து? நீங்கள் அப்படிச் சொல்லவில்லை என்றால் அரசி சொல்வது பொய்யா?” மாமன்னர் அமைச்சர் சொன்னதைக் கேட்டு இடிஇடி என்று சிரித்தார். அந்தச் சிரிப்பிலே அங்கிருந்த மண்டபத் தூண்கள் எல்லாம் பொடிப்பொடியாகி விழுவதைப் போல அதிர்ந்தன.

“அப்படிச் சொல்லவில்லை என்று நான் சொன்னால்தானே! அக்கு என்றேன்! ஆமாம்! தொக்கு என்றேன்! ஆமாம்! ஏன் சொல்லக் கூடாதா? இல்லாததை இருக்கிறது என்று எப்படிச் சொல்வது? நீங்களே சொல்லுங்கள் அமைச்சரே. ‘அ’ முதல் ‘ஃ’ வரை எழுதச் சொன்னேன் இளவரசனிடம் அவன் ‘ஃ’ கை விட்டுவிட்டான். எல்லாம் இருக்கிறது என்று அவன் வெளியே இருந்து சத்தம் போட்டான். அக்கு இல்லை, அக்கு இல்லை என்று நான் உள்ளேயிருந்தபடிச் சத்தம் போட்டேன். வழக்கமாக நான் உணவருந்தும்போது தொட்டுக்கொள்ளத் தொக்கு (தக்காளி) இருக்கும். அன்று இல்லை. தொக்கு இல்லை என்றேன் இவளிடம்.”

“மன்னர் மன்னா! அரசி தவறாகப் புரிந்துகொண்டார்கள். இரண்டையுமே தன்னைப் பார்த்துதான் கூறினீர்கள் என்று.”

“அமைச்சரே! இதென்ன வேடிக்கை? ‘ஃ’ இல்லை என்று அவனுக்கும், தொக்கு இல்லையென்று இவளுக்கும் சொன்னேன். இரண்டையும் தன்னைப் பார்த்துத்தான் சொன்னதாகவே அரசி எடுத்துக் கொண்டாலும் அதற்காக ஏன் கோபப்பட வேண்டும்?”

“மன்னர் மன்னா! நீங்கள் இதன் அர்த்தம் புரியாமல் பேசுகிறீர்கள். அக்கு தொக்கு இல்லையென்றால் யாரும் இல்லாத ஆதரவற்றவர் என்று பொருள்.”

அமைச்சர் கூறியதைக் கேட்ட மாமன்னர் மிரண்டு போனார். “நான் ‘ஃ’ இல்லை, ‘தொக்கு’ இல்லை என்று கூறியது இவளுக்கு எப்படியோ எக்குத்தப்பாகக் கேட்டிருக்கிறது” என்று மாமன்னர் ஓடோடிப் போனார் அரசியைச் சமாதானப்படுத்த.

உடனே அமைச்சருக்கு ஓர் உத்தரவு பறந்தது. தினமும் ஓரிரு தமிழ் வார்த்தைகளுக்கு வெளியிலே கரும் பலகை வைத்து விளக்கம் எழுதிப் போடுங்கள் என்று. பரவட்டும் தமிழ்! தெளிவாகப் பரவட்டும் தமிழ்! என்று!

Share
 

முந்தைய மாத இதழ்

பெரியாரின் நூல்கள் படி! பெரியாரின் நூல்கள் படி!   பகுத்தறிவை வளர்ப்ப தற்குப் படித்திடுவாய் பெரியார் நூல்கள்; தகுதியுடைத் தலைவ னாகத் தாத்தாவின் நூல்கள் கற்பாய்!   அறிவுக்கே ஒத்து வா... மேலும்
பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் முதல் புதுக்கோட்டை வரை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்த்த... மேலும்
தித்தித்தா விட்ட பட்டம் தித்தித்தா விட்ட பட்டம் கதை கேளு… கதை கேளு… விழியன் கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவ... மேலும்
நச்சுப் பானம் கோகோ கோலா நச்சுப் பானம் கோகோ கோலா கோகோ கோலா என்னும் கொடிய குளிர்பானம். குழந்தைகளைத் தொடர்ந்து பருகச் செய்யும். இதில் உள்ள Aspartame என்னும் வேதிப் பொருள் குழந்தைகளுக்கும் ப... மேலும்
உரிமை சின்னச் சின்னக் கதைகள் கிராமத்து ஓட்டு வீடு. சிட்டுக்குருவி ஒன்று அந்த வீட்டின் உள்ளே ஓட்டு இடுக்கில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. அதைப் ப... மேலும்