Home விலங்கிதம்
வெள்ளி, 19 அக்டோபர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
விலங்கிதம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கதை கேளு.... கதை கேளு...

விலங்கிதம்

- விழியன்

முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத்திக்கொண்டு நரியிடம் தெரிவித்தது. நரி உடனடியாக கரடிகள், குரங்குகள், யானைகள் மற்றும் எல்லா விலங்குகளின் தலைவர்களுக்கும் செய்தியை தெரிவித்தது. அந்த சமயம் தங்கள் இல்லங்களில் ஓய்வில் இருந்த எல்லா விலங்குகளும்  செய்தி கேட்டு கூடின. நடுக் காட்டிற்குச் சென்ற மற்ற விலங்குகளுக்கும் செய்தி பறந்தது. முயல்குட்டி சொன்ன தகவல் இதுதான். வடக்குப் பகுதி கோணிமரத்தின் அருகே ஒரு மனித உடல் வெகுநேரமாய் இருக்கின்றது. எல்லோரும் அந்த மனித உடலுக்கு சில அடிகள் தூரத்தில் குழுமினார்கள்.

அது இறந்த உடலா? இன்னும் உயிர் இருக்கா? என்றது மான் ஒன்று.

நிச்சயம் உடலில் உயிர் இருக்கு. மூச்சுவிடுவது தெரிகின்றது பாருங்கள். ஆனால் அவன் மூச்சுவிட சிரமப்படுகின்றான் என்றது கரடி. அந்தக் கரடி அந்தக் காட்டின் மருத்துவரும்கூட. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் மருத்துவர் கரடி மனிதனுக்கு அருகே சென்றது. கவிழ்ந்து இருந்த அவனது உடலைத் திருப்பியது. இப்போது அவன் மூச்சுவிடுவது நன்றாகவே தெரிந்தது. அவன் முழுமையாக ஆடை அணியவில்லை. அவன் ஆடையும் அழுக்காகத்தான் இருந்தது. கரடி அவனை மடியில் கிடத்திக்கொண்டது. அருகில் தயங்கி நின்ற மானை வா என்று அழைத்தது. எல்லோரும் அந்த மனித உடலினைச் சூழ்ந்து கொண்டனர். ஏப்பா அவரே மூச்சுவிட சிரமப்பட்றார், காத்து விடுங்க. சுவாசிக்க அது முக்கியம் என்றது மருத்துவர் கரடி. அவன் கைகளைப் பிடித்து நாடி பார்த்தது. உயிர் இருக்கு. உள்ள சாப்பாடு போகல போல. சாப்பிட்டா, சரியாகிடும் என்றது.

நீர்நிலைகள் வறண்டு விட்டிருந்தன. காடும் விலங்குகளுக்கு சுருங்கிவிட்டிருந்தது. நான்கு யானைகள் உடனே அருகே இருக்கும் குட்டைக்குச் சென்றன. தங்கள் தும்பிக்கையில் நிறைய நீரினை உறிந்துகொண்டு வேகமாக நடந்து வந்து அந்த மனிதன் மீது பீய்ச்சி அடித்தன. மனிதனின் உடல் சிலிர்த்தது. நான்கு யானைகள் அடித்த தண்ணீர் அவனை குளிப்பாட்டக் கூட போதுமானதாக இருந்தது. கரடி அவனைத் துடைத்துவிட்டது. லேசாகக் கண் விழித்தான். சுற்றிலும் விலங்குகள் இருப்பதை உணர்ந்தான். பயப்படவில்லை. அவனால் எதுவும் கண் திறந்து செய்யமுடியவில்லை. அதற்குள் குரங்குகள் சில பழங்களைக் கொண்டு வந்தன. கரடி பழத்தைப் பிழிந்து அதன் சாற்றினை அவன் வாயில் விட்டது. மனிதன் குடித்தான். கொஞ்சம் தெம்பு வந்தது. எழுந்து கரடியின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டான். கரடி அவன் தலையை வருடிக் கொடுத்தது. மனிதனை முதன்முதலாக பார்த்த முயல் மெல்ல மனிதனிடம் வந்தது.

என்ன முயலாரே; நீ கண்டுபிடித்த மனிதன் நலமாக இருக்கின்றான் என்றது மருத்துவ கரடி. ஆமாம் கரடியாரே, ஆனால் அவருடைய ஆடைகள் கிழிந்து இருந்தன. நான் மனிதர்களை பார்த்திருக்கின்றேன், அவர்கள் ஆடையுடன் தான் இருப்பார்கள். இதோ சில இலைகளைக் கொண்டு ஓர் ஆடையை தைத்து இருக்கின்றேன் என்று சொன்னபடியே அந்த இலை ஆடையைக் கொடுத்தது முயல். கரடி, மனிதனின் இடுப்பில் கட்டிவிட்டது. கழுகு சில பழங்களை பறித்துக் கொண்டு வந்தது. அவனுடைய கையில் கொடுத்ததும் அதனை அவன் கடித்து உண்டான். அவன் விலங்குகளைப் பார்த்து பயப்படவில்லை. எல்லாவற்றையும் பார்த்துப் புன்னகை வீசினான். இரண்டு மணி நேரத்தில் எழுந்து நின்றான். அந்தளவிற்கு அவனுக்கு வலு வந்துவிட்டது. விலங்குகளைப் பார்த்து ஏதோ கையசைத்தான். யாருக்கும் புரியவில்லை.

அவன் வீட்டுக்கு போகணுமாம். அவன் அம்மா தேடுவார்களாம் என்றது குரங்கு. மனிதனின் மொழி அதற்கு புரிந்து இருந்தது. சரி வாருங்கள் எல்லோரும் அந்த பிரதான சாலை வரையில் விட்டுவிட்டு வருவோம் என எல்லா விலங்குகளும் கிளம்பின. யானை அந்த மனிதனைத் தன் மீது ஏற்றிக்கொண்டது. இடுப்பில் முயல் கொடுத்த இலை ஆடை இருந்தது. கைகளில் கழுகு கொடுத்த பழங்களும் இருந்தன. மயிலின் இறகு ஒன்றினை நரியார் கொடுத்தது, அதனை தலையில் சொருகி இருந்தான் அந்த மானிடன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். தூரத்தில் அவன் பெயரைச் சொல்லி அழைத்த ஒரு தாயின் பதட்டமான குரல் கேட்டுக்கொண்டு இருந்தது. மது.

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்