Home சாதனைப் பிஞ்சுகள்
புதன், 16 ஜனவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
களை கட்டிய காலை நிகழ்ச்சி களை கட்டிய காலை நிகழ்ச்சி பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து... மேலும்
அல்லும் பகலும் உழைத்திடடா! உழைப்பால் உலகை வென்றிடலாம் உண்மை! இதனை அறிந்திடுவீர்! உழைப்பால் முடியா செயலென்று உலகில் எதுவும் இல்லையென்பீர்!   அடிமேல் அடிகள் அடித்தி... மேலும்
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! ஆசிரியர் தை… தை… தை… இயற்கையின் விந்தை எழில் பொங்கும் வித்தை அழிய வேண்டும் அகந்தை ஆக வேண்டும் மேதை மகிழ வைக்கும் விருந்தை குளிர வேண்ட... மேலும்
உங்கா, சிங்கா, மங்கா கதை கேளு… கதை கேளு… விழியன் பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்ட... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் விழா நாயகர்கள் சரவணா ராஜேந்திரன் வள்ளுவர், கவுதம புத்தர், வர்த்தமான மகாவீரர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தல... மேலும்
சாதனைப் பிஞ்சுகள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

வானில் அனிதா செயற்கைகோள்

திருச்சியை சேர்ந்த பதினேழு வயதான  வில்லெட் ஓவியா. கைக்குள் அடங்கும் கலாம் செயற்கைக்கோளைத் தொடர்ந்து, அனிதா  என்ற பெயரில் புதிய செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார்

“சுற்றுப்புறச் சூழலால் காற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகமாகிறது. இதனால் நம்மைதாக்கும் பல நோய்களுக்கு காரணம் தெரியாமலேயே இரையாகிறோம். காற்று மாசுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த செயற்கைக்கோளை வடிவமைத்தேன். பூமியைச் சுற்றியிருக்கும் வாயு மண்டலம் பூமி வெப்பம் அடைவதால் எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது... தாக்கத்திற்கு உள்ளாகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக ஒரு செயற்கைக்கோளை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தேன். வாயு மண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, ஆக்சிஜன் மற்றும் இதர வாயுக்களின் அளவு எவ்வளவு என்பதை அறிய இந்த செயற்கைக்கோள் உதவும். நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதாவின் நினைவாக இந்த செயற்கைக்கோளுக்கு அனிதா - சாட் என்று பெயரிட்டிறுகிறார்” வில்லெட் ஓவியா.
இந்த அனிதா சாட் செயற்கைக்கோள்

மே 6 ஆம் தேதி வளிமண்டலம் நோக்கி அனுப்பட்டுள்ளது.

மாதவிடாயும் மூடநம்பிக்கையும்


திருவாரூர் மாவட்டம் காளச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.பானுப்பிரியா.

இவர் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அகில இந்திய அளவில் நடந்த கல்வி மற்றும் செயல் திட்டத்தில் ‘மாதவிடாயும், மூடநம்பிக்கையும்’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி வெற்றி பெற்று, டில்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தங்கப் பதக்கமும், ரூ.50,000/-_ ரொக்கமும் பெற்றுள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கில் பாராட்டும் பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை ஊக்குவித்த ஆசிரியர் தி.ஆனந்த் ஆங்கில பட்டதாரி.

16வயதில் எவர்ரெஸ்ட் உச்சி! சாதித்த சிவாங்கி பதக்

உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் நேபாளத்தில் அமைந்துள்ளது. 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்டில் ஏறுவது அவ்வளவு எளிதல்ல. அங்கு நிலவும் கடும் குளிர், உயிருக்கு ஆபத்தான பனிப் பாறைகள், குறைந்த காற்றழுத்தம்  போன்றவற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. எனினும், மலையேற்றத்தில் அதிக ஆர்வம் உள்ள ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் என, எந்தத் தடையும் இல்லாமல் எவரெஸ்டில் ஏறும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், அரியானா மாநிலத்தின் பிசார் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி சிவாங்கி பதக், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் ‘இளம் வயதில் எவரெஸ்டை தொட்ட இந்தியப் பெண்’ என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி எவரெஸ்ட் அடிவாரத்தில் தொடங்கி மே 17 அன்று எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். முறையான பயிற்சியுடனும் தன்னுடன் வந்த 244 இருபால் மலையேற்ற வீரர்களுடனும் சென்று இந்தச் சாதனையைச் செய்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘உடல் ஊனத்துடன் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் இந்தியரான அருணிமா சின்ஹாவின் சாதனையால், நான் ஈர்க்கப்பட்டேன். அவரின் அந்த முயற்சி தான் என்னையும் சாதிக்கத் தூண்டியது’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இதற்கு முறையான பயிற்சியும் இடைவிடாத முயற்சியும்தான் காரணம் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா?<

ஊஞ்சல் தாத்தா

நூலின் பெயர்: ஊஞ்சல் தாத்தா

ஆசிரியர்: அ.ர.ஹபீப் இப்றாஹீம்

விலை: ரூ.30 பக்கங்கள்: 32

வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்),

எண்:7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை_600018

தொலைபேசி : 044_-24332924

‘ஊஞ்சல் தாத்தா’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் ஊஞ்சலில் ஏறி மகிழ்வதும், அவர்களுக்கு தாத்தா நாட்டுப்புறக் கதைகளை சொல்லி ஊஞ்சலாட்டுவதும், வயதான காலத்திலும் மரங்களில் ஏறி பழங்களை பறித்து குழந்தைகளுக்கு அவர் வழங்குவதும் எனக்கு பிடித்திருந்தது. ஒருவர் இறந்துவிட்டால், அவரின் இடத்தை வேறொருவர் அன்பால் நிரப்புவார் எனும் நம்பிக்கையை இக்கதையின் மூலம் பெறுகிறேன்.

- பி. பாலகுமார், 8-ஆம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெங்களத்தூர், திருவண்ணாமலை மாவட்டம்.

குழந்தைகளிடம் ஒருவரின் இறப்பைச் சொல்லும்போது சொர்க்கம் போயிருக்கிறார் போன்ற பொருளுடன் சொல்வதை இனியாவது தவிர்க்க வேண்டாமா? மற்றபடி இப் புத்தகம் நிறைய படங்களுடன் சிறார் ரசிக்கும் வகையில் உள்ளது.

- பொறுப்பாசிரியர்

Share
 

முந்தைய மாத இதழ்

பெரியாரின் நூல்கள் படி! பெரியாரின் நூல்கள் படி!   பகுத்தறிவை வளர்ப்ப தற்குப் படித்திடுவாய் பெரியார் நூல்கள்; தகுதியுடைத் தலைவ னாகத் தாத்தாவின் நூல்கள் கற்பாய்!   அறிவுக்கே ஒத்து வா... மேலும்
பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் முதல் புதுக்கோட்டை வரை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்த்த... மேலும்
தித்தித்தா விட்ட பட்டம் தித்தித்தா விட்ட பட்டம் கதை கேளு… கதை கேளு… விழியன் கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவ... மேலும்
நச்சுப் பானம் கோகோ கோலா நச்சுப் பானம் கோகோ கோலா கோகோ கோலா என்னும் கொடிய குளிர்பானம். குழந்தைகளைத் தொடர்ந்து பருகச் செய்யும். இதில் உள்ள Aspartame என்னும் வேதிப் பொருள் குழந்தைகளுக்கும் ப... மேலும்
உரிமை சின்னச் சின்னக் கதைகள் கிராமத்து ஓட்டு வீடு. சிட்டுக்குருவி ஒன்று அந்த வீட்டின் உள்ளே ஓட்டு இடுக்கில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. அதைப் ப... மேலும்