Home சிங்கப்பூர்
சனி, 17 ஆகஸ்ட் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கே... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசம... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் ஊருக்கு ஒதுக்குப்புறம், பாழடைந்த மண்டபம். அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது. அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம் மேலிருந்து கீழ் 1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4) 2.            இந்தச் ச... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! உடுமலை சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்! பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திட... மேலும்
தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார். கூக... மேலும்
சிங்கப்பூர்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

y6.jpg - 243.23 Kb

அமைவிடமும் எல்லைகளும்:

¨    சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள பெரிதும் நகரமயமான ஒரு தீவு நகரம் -_ நாடு.

¨    ஒற்றை நகரம் என்பதால் சிங்கப்பூரே தலைநகரமும் ஆகும்.

¨    ஜொகூர் நீரிணை இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது.

¨    தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவிடமிருந்து பிரிக்கிறது.

¨    அண்டை நாடுகளாக மலேசியா, இந்தோனேசியா நாடுகள் உள்ளன.

¨    நாட்டின் மொத்த பரப்பளவு 704 கி.மீ2

(270 சதுர மைல்.)

பெயர்க்காரணம்:

¨    சிங்கப்பூர் சிங்கம்+ஊர்=சிங்கப்பூர். அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ்ப் பொருளைக் கொண்டது ஆகும்.

¨    இது சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது.

வரலாறு:

¨    சிங்கப்பூர் _ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது.

¨    14ஆம் நூற்றாண்டில் ‘துமாசிக்’ என்ற பெயர் கொண்ட நகரமாக விளங்கியது.

¨    15ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் ‘துமாசிக்’ நகருக்கு ‘சிங்கப்பூர்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

புவியியல்:

¨    சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது.

¨    சிங்கப்பூர், மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

¨    ‘புகிட்திம்’ என்பது குறிப்பிடத்தகுந்த பெரிய காடாகும்.

பொருளாதாரம்:

y7.jpg - 441.82 Kb

¨    சிங்கப்பூர் ஆசியாவின் ‘ஜிப்ரால்டர்’ என்று அழைக்கப்படுகிறது.

¨    உலகில் உள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்று.

¨    சிங்கப்பூர் உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று.

¨    உலகில் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் 14ஆம் இடம்.

¨    இறக்குமதி செய்வதில் உலகளவில் 15ஆவது நாடு.

¨    இந்தியாவின் இரண்டாவது பெரிய அந்நிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும்.

¨    சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளி (Singapore dollar) யாகும்.

¨    இயந்திரப் பொறியியல் துறை, உயிரி மருத்துவ அறிவியல் துறை, வேதிப் பொருட்கள், மின்னணுப் பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன

¨    சிங்கப்பூர் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும் சூதாட்ட விடுதிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.

¨    சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாகும்.

¨    அதிக அளவில் பணக்காரர்கள் (மில்லியனர்கள்) உள்ள நாடு.

போக்குவரத்து:

¨    சிங்கப்பூர் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர். இதில் 161 கி.மீ விரைவுச் சாலையாகும்.

¨    மேம்படுத்தப்பட்ட சாலை மின்னணுத் திட்டம் கொண்டு வரப்பட்டு மின்னணு முறையில் சுங்கம் வசூலிக்கப்படுகிறது.

¨    ஆசியாவில் பன்னாட்டு கப்பல் போக்குவரத்தின் முக்கிய மய்யமாக சிங்கப்பூர் விளங்குகிறது.

¨    ஒரு கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் மய்யமாகவும், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மய்யமாகவும் திகழ்கிறது.

¨    உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுக-மாகவும் சிங்கப்பூர் உள்ளது.

¨    8 விமான நிலையங்களுடன் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி விமான மய்யமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.

¨    சிங்கப்பூர் ‘சாங்கி’ (சிலீணீஸீரீவீ) விமான நிலையம் 80 விமானங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது.

¨    இங்கிருந்து 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களுக்கு உடனுக்குடன் விமான சேவை உள்ளது.

கல்வி:

¨    மாணவர்களின் பள்ளிக் கல்விக்கு பெரும்பாலும் அரசே உதவி செய்கிறது.

¨    அரசுப் பள்ளிகளின் பயிற்றுமொழியாக ஆங்கிலம் இருக்கிறது.

¨    ‘தாய்மொழி’ தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்பட்டு தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகின்றன.

¨    சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ‘நன்யாங்’ தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவை உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகின்றன.

மொழியும் மக்களும்:

y8.jpg - 435.47 Kb

¨    ஆட்சிமொழியாக மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ் ஆகியவை உள்ளன.

¨    தேசிய மொழி மலாய். தேசிய கீதமும் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது.

¨    நாட்டு மக்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அல்லது 5 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்தமொழியாகப் பேசுகின்றனர்.

¨    சிங்கப்பூரின் அரசியலமைப்பு, சட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தின் மொழியாக ஆங்கிலமே உள்ளது.

¨    சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது.

¨    சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய், தமிழர்கள், சீனர்கள், அரபு நாட்டினர் பண்பாடுகளே அதிக அளவு பின்பற்றப்படுகின்றன.

¨    மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வெளிநாட்டவராக உள்ளனர்.

¨    மக்கள் தொகை 6 மில்லியன்.

¨    நிலப் பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்குமாடி வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.

¨    குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடு.

¨    பவுத்தம், கிறித்துவம், இசுலாம், டாவோயிசம், இந்து, சீக்கியம் போன்ற பல மதங்களைக் கொண்ட நாடு.

விளையாட்டு:

¨    பிரபலமான விளையாட்டுகள்: கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டுதல், மேசைப்பந்து, பூப்பந்து ஆகியன.

¨    தண்ணீர் விளையாட்டுகளான ஸ்கூபா, டைவிங், கயாகிங், நீர்ச்சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன.


அரசு முறை:

¨    பாராளுமன்ற குடியரசு அரசாங்கம் நடைபெறுகின்றது.

¨    அதிபரும், பிரதமரும் அதிகாரமிக்கவர்கள்.

¨    சிங்கப்பூர் ஆரம்பத்தில் ஆங்கிலேய அரசிடம் காலனி நாடாக இருந்தது. பின்பு மலேசியாவிடம் இணைந்தது. இறுதியில், ஆகஸ்ட் 9, 1965இல் மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடானது.


ஊடகங்கள்:

¨    ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்கள் உள்ளன.

¨    ‘வசந்தம்’ என்னும் தமிழ் தொலைக்காட்சி, ‘ஒலி’ என்னும் தமிழ் வானொலி, ‘தமிழ்முரசு’ என்னும் தமிழ் செய்தித்தாள் உள்ளிட்ட முன்னணி தமிழ் ஊடகங்கள் சிங்கப்பூரில் உள்ளன.

¨    அனைத்து ஊடகங்களும் அரசின் கட்டுப்பாடுகளை எதிர்கொண்டே இயங்குகின்றன.

¨    இங்கு ஊடக சுதந்திரம் குறைவு.


லீ குவான் யூ:

¨    லீ குவான் யூ பிரதமராக இருந்த 1959 முதல் 1990 வரையான காலப்பகுதியில், வேலையில்லா திண்டாட்டம், வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை  ஆகியன தீர்க்கப்பட்டன.

¨    இவர் ‘சிங்கப்பூரின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.

¨    இவராலேயே சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததுடன் நாட்டின் பொருளாதாரம், உள் கட்டமைப்பு ஆகியவை வளர்ச்சி அடைந்தன.<

Share
 

முந்தைய மாத இதழ்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சிகரம் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பி... மேலும்
"தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது... இது... இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற... மேலும்
புவியை ஆளலாம்! புவியை ஆளலாம்! காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்க... மேலும்
உயர்வு உயர்வு ‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால் அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் - எனும் செறிவாம் உலகக் கருத்தினிலே சிறிய மாற்றம் நாம்காண்போம்;   அறிவு... மேலும்