Home தந்தை பெரியாரின் கதை
சனி, 20 ஜூலை 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” ”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்
உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன! கடல் மரணிக்கப் போகிறதா? என்ற கேள்வி எழலாம், ஆம்! இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்
பயணம் - பாடம் பயணம் - பாடம் தேன் எடுப்போமா? அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்
சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்
கொம்பு முளைச்சிருக்கா? கொம்பு முளைச்சிருக்கா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்
தந்தை பெரியாரின் கதை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 
பெரியாரின் நேரந் தவறாமை

 

y10.jpg - 669.64 Kb

அறுபது வருடங்களாக பெரியார், தான் கலந்து கொண்ட கூட்டங்களுக்குக் காலதாமதமாக போனது கிடையாது. மாலையில் கூட்டம் நடக்கும் ஊருக்கு காலையிலேயே போய்விடுவார். தாமதம் என்பதை பெரியார் அறியார்.
ஒருமுறை அவருக்கும் ஒரு சோதனை வந்தது. பெரியார் ஒரு கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த வண்டி (வேன்) பழுதாகி விட்டது, வண்டியை பழுது நீக்க  போதிய நேரமில்லை. பெரியார் தடியை தரையில் தட்டிக்கொண்டு செய்வதறியாது நின்றார்.

வழக்கமாக சீக்கிரமாக வந்துவிடும் பெரியாரைக் காணாமல் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். பெரியார் இல்லாமல் கூட்டமும் தொடங்கிவிட்டது, தொடக்கப் பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு லாரி வந்து நின்றது. எல்லோரும் லாரியை பார்த்தார்கள். நம் பெரியார் லாரியிலிருந்து இறங்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்டம் ஒரு நிமிடம் திகைத்தது. ‘சரியான நேரத்திற்கு வந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு நிம்மதி’ என்று சொல்லிக் கொண்டே மேடையில் வந்து அமர்ந்தார். சரியான நேரத்திற்கு வரவேண்டும் என்று பெரியார் செய்த செயலைக் கண்டு எல்லோரும் வியந்தனர்.

காங்கிரசில் பெரியார் இருந்த காலத்தில், இராஜாஜி அவர்கள் ஒருமுறை பெரியாரை அவசரமாகக் காணவந்தார். இராஜாஜி முகத்தில் கவலைக்குறி காணப்பட்டது. ‘என்ன?’ என்று கேட்டார் பெரியார்.

‘ஒரு பிரச்சினை. எவ்வளவு சிந்தித்தும் எனக்கு விடை தெரியவில்லை’ என்றார் இராஜாஜி.

‘சொல்லுங்கள்’ என்றார் பெரியார்.

y9.jpg - 166.35 Kb

இராஜாஜி பிரச்சினையைச் சொன்னார். பெரியார் தீர்வு கூறினார். அதைக் கேட்ட இராஜாஜி தயங்கினார். ‘மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்றார்.

“மக்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்குபவர்கள் பொதுவாழ்வுக்கு லாயக்கற்றவர்கள். மக்கள் பின்னால் நாம் செல்லக்கூடாது. மக்களை நாம்தான் சரியாக வழிநடத்த வேண்டும்” என்றார் பெரியார்.

இன்னொரு சம்பவம்.

மணியாச்சி ரயில் நிலையம். தந்தை பெரியாரும் _ முத்தமிழ்க் காவலர் என்று பின்னாளில் அழைக்கப்பட்டவரும் பெரியாரின் தொண்டருமான கி.ஆ.பெ.விசுவநாதமும் நின்றுகொண்டிருந்தார்கள். இரண்டு பார்ப்பனர்கள் தங்கள் இருவரையும் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்வதை கி.ஆ.பெ.விசுவநாதத்திடம் காட்டிச் சொன்னார் பெரியார், ‘அவர்கள் இருவரும் நம்மைச் சுட்டிக்காட்டி தங்களுக்கு எதிராகப் பாடுபடுகின்றவர்கள் நாம் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றார்கள்.

அவர்களுக்குத் தங்கள் ஆதிக்கத்துக்கு எதிரி யார் என்பது தெரிகிறது? ‘இதுபோல்  நமக்காகப் பாடுபடுகின்றவர்கள் யார் என்று தெளிவாக அறியும் சக்தி நம் மக்களுக்கு உள்ளதா? இதைச் சிந்தியுங்கள்!’ என்றார்.
பெரியார் பெரிய சிந்தனையாளர்.<

Share
 

முந்தைய மாத இதழ்

பழகு முகாம் பழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது? பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது? பழகுமு... மேலும்
தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்
புதிய பாடம்! புதிய பாடம்! வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சு!புதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்