Home செய்து அசத்துவோம் அழகிய கைப்பை
புதன், 20 ஜூன் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விலங்கிதம் விலங்கிதம் கதை கேளு.... கதை கேளு...விலங்கிதம்- விழியன் முயல்குட்டி வேகமாக ஓடிவந்து கழுகிடம் அந்த செய்தியைச் சொன்னது. கழுகு அந்த செய்தியினை உறுதிபடுத... மேலும்
செய்து அசத்துவோம் அழகிய கைப்பை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

y11.jpg - 243.55 Kb

தேவையான பொருட்கள்:

1. செவ்வக வடிவிலான சிறிது தடிமனான அட்டை, 2. கத்திரி, 3. பசை, 4. அளவுகோல், 5. சிறிது தடிமனான கயிறு.
செய்முறை:

1.    முதலில் செவ்வக வடிவ அட்டையை எடுத்துக் கொள்ளவும்.

2.    பிறகு படம் 2இல் காட்டியபடி அட்டையை மூன்று பாகங்களாகப் பிரித்து இரண்டு கோடுகளை போட்டுக் கொள்ளவும். (மூன்று பாகங்களும் சம அளவில் இருக்க வேண்டும்.)

3.    பிறகு படம் 3இல் காட்டியபடி முதல் பாகத்தில் அளவுகோல்கொண்டு வரைந்து கொள்ளவும்.

4.    படம் 4இல் காட்டியபடி வெட்டிஎடுத்துக் கொள்ளவும். கீழ் பாகத்தில் நடுவில் ஒரு சிறிய கோடு போட்டு அதை (கீறியது  போல்) வெட்டிக் கொள்ளவும்.

5.    பிறகு அட்டையின் இரு ஓரங்களிலும் பசையை தடவிக் கொள்ளவும். பிறகு மேல்புறத்தை மடித்து, நடுவில் நாம் கீறி வைத்திருக்கும்  ஓட்டையில் செருக்கிக் கொள்ளவும்.

6.    மடித்து, ஒட்டிக் கொண்ட பிறகு படம் 6இல் காட்டியபடி இரு ஓரங்களிலும் சிறு ஓட்டைகளை போட்டுக் கொள்ளவும்.

7.    பிறகு கயிறை எடுத்து இரு ஓட்டைகளிலும் விட்டு முடிந்து கொள்ளவும். இப்பொழுது அருமையான கைப்பை தயார். சரியா பிஞ்சுகளே! செய்து அசத்துங்கள்!
-வாசன்

Share
 

முந்தைய மாத இதழ்

தமிழ்த் திருநாள் வாழையும் கரும்பும் நெல்லும் வயல்களில் விளைந்து வந்து மேழியின் பெருமை சொல்லும் மிகப்பெரும் திருநாள் பொங்கல்!   பாலுடன் அரிசி வெல்லம் பர... மேலும்
திருக்குறள் திருக்குறள் குன்றின் விளக்காய் இருந்திடலாமேகுறளை தினமும் படித்தாலே - நல்லகுணங்கள் வளரும் படித்தாலே!கோபுரம் போலே உயர்ந்து நிற்பாய்குறளின் படியே நடந்தால... மேலும்
இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துகள்! பெரியார் பிஞ்சு வாசகர்கள், படைப்பாளர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்... மேலும்
காற்றே காற்றே! காற்றே காற்றே கொஞ்சம் நில்லு நில்லு! - எங்கள்... காதில் வந்து கொஞ்சம் சொல்லு, சொல்லு! கடவுள் என்றால் என்ன வென்று நீ சொல்லு சொல்லு! அதை... மேலும்
முயற்சி தந்த வளர்ச்சி முயற்சி தந்த வளர்ச்சி யாரென்று தெரிகிறதா? முயற்சி தந்த வளர்ச்சிசெல்சீ வெர்னர் (CHELSEA WERNER)- சரவணா இராஜேந்திரன் ‘டவுன் சின்ரோம்’ என்பது மூளை வளர்ச்சி தொடர்... மேலும்