Home மந்திரியை மடக்கிய குட்டிக்கர்ண மன்னன் !
புதன், 19 டிசம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் சுக்கு நூறாக்கப்பட்ட ரூ.10 கோடி ஓவியம் லண்டனில்  10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் ஒன்று, அடுத்த நொடியே சுக்குநூறாக கிழிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ப... மேலும்
கின்னஸ் கின்னஸ் சாதனையின் அடையாளம்! இயற்கையின் தோற்றத்தில் மனித சமூகம் என்றைக்குமே வித்தியாசமானதுதான். புதுமைகள் செய்வதில் மனித சமூகத்திற்கு இருக்கும் ஆர... மேலும்
வாழவைக்கும் வாழ்வியல் மாலை வாழவைக்கும் வாழ்வியல் மாலை ஊக்கம் பயிரினை வளஞ்செயும் பயன்தரு நிலமென உயிரினைக் கல்வியால் ஊக்கலாம் ஓர்கவே! அறிவொளி அறிவொளி நெறியினால் ஆளுமை அடையலாம் முறிவொளி மர... மேலும்
கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) கறுப்பினத்தின் நெருப்பு மலர்! (நெல்சன் மண்டேலா) படக்கதை எழுத்து: உடுமலை படங்கள்: லாங் வாக் டூ ஃபீரீடம் படத்திலிருந்து… மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… நவம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 9 முதல் பத்தியில் அரியனை என்பது அரியணை என்றும், 12ஆம் பக்கத்தில் 2ஆம் வரியில் உறக்கத்திலிந்து என்... மேலும்
மந்திரியை மடக்கிய குட்டிக்கர்ண மன்னன் !
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

குட்டிக்கர்ண மன்னனுக்கு அன்று பிறந்த நாள். இருந்தாலும் அவருக்கு அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. காரணம் வழக்கமாக அவன் மவுன விரதம் இருக்கும் அந்த நாளும் பிறந்த நாளும் ஒன்றாக வந்துவிட்டது. பல நாட்டு அரசர்களும் இவனைப் பார்க்கவும், வாழ்த்து தெரிவிக்கவும் ஓடோடி வந்தனர். பேசாவிரதம் இருக்கும் எந்த நாளிலும் யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வாரே தவிர அதைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டார்.  தடவிப் பார்த்தே அது என்ன பொருள் என்று தெரிந்துகொள்வார். கோடைக்காலம் அது. பலாப்பழ விளைச்சல் நேரம். வந்த அரசர்களில் பலர் பலாப் பழங்களையே பரிசாகக் கொண்டு வந்தனர்.

பகல் நாட்டு மன்னனும், இருட்டு நாட்டு மன்னனும் கொடுத்த இரண்டு பலாப் பழங்களையும் தடவித் தடவிப் பார்த்தார். பக்கத்தில் ஒரு கரும்பலகை இருந்தது. அதில் ஏதோ எண்களை எழுதினார். அமைச்சரை சைகையால் அழைத்தார். “பகல் நாட்டு மன்னன் கொடுத்த பலாப் பழத்தைக் கொண்டுபோய் அரிந்து பலாச் சுளைகளை எடுத்து வா” என்று சைகை காட்டினார்.

நிமிடத்தில் தட்டு நிறையப் பலாச் சுளைகள் வந்தன. இன்னொரு தட்டைக் கொண்டு வா என்றார். ஒவ்வொரு சுளையாக எடுத்துக் கொட்டையை ஒரு தட்டில் போட்டுவிட்டுச் சுளையைச் சுவைத்தார். அடடா... என்ன ருசி, என்ன ருசி என்று வாய்விட்டுக் கூற நினைத்தான். பேசாவிரதம் அதற்குத் தடையுத்தரவு போட்டது. அமைச்சரும் அவையில் இருந்தவர்களும் அவன் பலாப் பழத்தைச் சாப்பிடும் அழகை வெகுவாக ரசித்தனர். அவனுக்குப் பதிலாக அவர்கள் அடடா... அடடா என்று கும்பலாக பின்னணி கொடுத்தனர். ஆயிற்று... முப்பது, நாற்பது சுளைகள் காலியாகின. இருந்தாலும் நிறுத்தவில்லை. சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். தட்டு காலியாகிவிடும்போல் தெரிந்தது. கொட்டைகளை எண்ணினார். மீதியிருந்த சுளைகளை எண்ணினார். பாதிக் கண்ணைத் திறந்து கரும்பலகையை நோக்கினார். கையை கையை நீட்டி சைகை செய்தார். வயிற்றைத் தொட்டுத் தொட்டுக் காட்டினார். யாருக்கும் எதுவும் விளங்கவில்லை.  அந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் வந்தார். அரசனின் சைகையைப் பார்த்துவிட்டு, “அய்ம்பது அறுபது சுளைகள் சாப்பிட்டிருப்பார். என்னாயிற்று தெரியவில்லை” என்று அமைச்சர் சொன்னார்.

“அது வேறொன்றுமில்லை. பலாப் பழம் சூட்டைக் கிளப்பிவிட்டிருக்கிறது. மன்னருக்கு வயிற்று வலி அவ்வளவுதான்.’’ இரண்டு மூன்று பலாக் கொட்டைகளைச் சுட்டுக் கொண்டு வந்து அரசனிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அவரோ அதை வாங்கி அவர் முகத்திலேயே வீசியெறிந்தார். எழுந்து படீர் படீர் என்று குட்டிக் கர்ணம் அடித்தார். கோபம் வரும்போதெல்லாம் மன்னன் இப்படித்தான் செய்வார். அதனால்தான் அவருக்குக் குட்டிக்கர்ண மன்னன் என்றே பெயராயிற்று.

மீதியிருந்த சுளைகளைச் சுட்டிய மன்னன் ஏதோ சைகை காட்டினார். மற்ற சுளைகள் எங்கே என்றும்,  காணாமல் போனது எப்படி என்றும், யார் எடுத்தது என்றும் கேட்பது போலவும் இருந்ததால் பதில் சொல்ல இயலாமல் வைத்தியர் தடுமாறினார். அதை சமாளிக்க, “மன்னா உங்கள் செய்கை எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை. பலாப்பழம் சாப்பிட்டதில் வயிற்று வலியோ என்று ஓடோடி வந்தேன். எதற்காக இப்படிக் கோபப்படுகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை’’ என்றார்.

குட்டிக்கர்ண மன்னன், “மீதியிருந்த சுளைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து லபக்கினான். மணி ஆறரை ஆயிற்றோ இல்லையோ குட்டிக்கர்ண மன்னன் பெரிதாக ஒரு குட்டிக்கர்ணம் அடித்துவிட்டு ஆவேசமாக எல்லோரையும் பார்த்தான். மவுன விரதம் முடிந்ததால் அமைச்சரை நோக்கி, “மீதி எங்கே?” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினான். மந்திரிக்கு வாய் குழறியது. “எந்த மீதியைக் கேட்கிறீர்கள்?” என்றார்.

“எந்த மீதியா? பலாச் சுளையில் மீதி எங்கே என்கிறேன்.”

“அய்யய்யோ மொத்தத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டேன், பிறகெப்படி வரும் மீதி?”

“மரியாதையாக மீதியைக் கொண்டு வாருங்கள்...”

அமைச்சர் ஆடிப் போனார். அரசனின் சீற்றம் அதிகமாயிற்று. “வரும் பொருள் உரைப்பதுதான் மந்திரிக்கழகு. மறைப்பதல்ல. மறைத்து வைத்திருக்கும் மீதிச் சுளையை உடனே போய் எடுத்து வாருங்கள். இல்லாவிட்டால் நமது ஒற்றர்கள் வேலைவெட்டி எதுவும் இல்லாமல் வெட்டியாகத்தான் இருக்கிறார்கள். அவர்களை விட்டுத் தேடச் சொல்வேன். புரிகிறதா?’’ என்றதும், வெலவெலத்துப் போனார் அமைச்சர். அதற்குள் அரசியார் ஒரு பெரிய தட்டுடன் வந்தார். அந்தத் தட்டு நிறையப் பலாச் சுளைகள்.

“மன்னர் மன்னா! மண்டபத்தின் தெற்குத் தூணுக்குப் பக்கத்தில் இந்தப் பலாச் சுளைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது யாருடைய வேலை என்று தெரியவில்லை” என்றார்.  ‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல’, அமைச்சர் திருதிருவென்று முழித்தார்.

“அமைச்சரே! இதென்ன வேலை? திருடுவது ஒரு தொழிலா? நான் கொடுத்த பலாப் பழத்தில் எத்தனை சுளைகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும். எடுத்தது பெரிய தவறு. மறைத்தது அதைவிடப் பெரிய தவறு. இல்லை, இல்லை என்று மீண்டும் மீண்டும் சாதித்தது எல்லாவற்றையும்விட பெரிய தவறு. கணக்கதிகாரம் எப்படிப் பொய் சொல்லும்? மந்திரி என்றாலே திருடத்தான் வேண்டுமா? ச்சீ... ச்சீ...’’ என்று முகம் சுளித்தான் மன்னன்.

அதைத் தொடர்ந்து குட்டிக்கர்ண மன்னன், இருட்டு மன்னன் கொடுத்த மற்றொரு பலாப் பழத்தை எடுத்துக்கொடுத்து அதை வெட்டிச் சுளைகளை எடுத்து வருமாறு கூறினான். அதற்கு முன்பாக இந்தப் பழத்தில் இத்தனைச் சுளைகள் இருக்கும் என்றும் கூறினான். சுளைகள் வந்தன. எண்ணிக் காட்டினான். அவன் கூறிய எண்ணிக்கை சரியாக இருந்தது.

“அதெப்படி அரசே!” என்று அரசியார் வியந்து போனார்.

“சோழர்கள் காலத்துக் கணக்கதிகாரம் சொல்கிறது. பலாப்பழத்தின் காம்புக்குப் பக்கத்தில் இருக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன முள்ளையும் எண்ணி, அதனை ஆறால் பெருக்கி அய்ந்தால் வகுத்தால் எத்தனை வருகிறதோ அத்தனைதான் அப்பழத்தின் உள்ளே உள்ள மொத்த சுளைகள்.’’ என்று கூறிய மன்னன், சட்டென்று எழுந்து ஒரு குட்டிக்கர்ணம் போட்டுவிட்டுக் குபீரென்று உடல் குலுங்கக்குலுங்கச் சிரித்தான். பலாச் சுளைகளை எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

“பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு

சிறுமுள்ளுக் காம்பரு கெண்ணி வருவதை

ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே

வேறெண்ண வேண்டாஞ் சுளை”

இந்தக் கணக்கதிகாரப் பாடலை வைத்துத்தான் குட்டிக்கர்ண மன்னன் மந்திரியை மடக்கினார்.<

Share
 

முந்தைய மாத இதழ்

அன்பு அன்பு அன்பு என்பது அனைவரின் மனதிலும் அடியினில் சுரந்திடல் தெளிவாகும்! இன்பம் கனிவுடன் இரக்கமும் கருணையும் இணைந்தலை* புரண்டது வெளியாகும்!   ... மேலும்
பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெரியார் பிஞ்சுகள் மாநாடு பெயருக்குப் பொருந்தச் சீரோடு அறியா மையினை வேரோடு அகற்றிடப் பிறந்த மாநாடு! உலகம் இதுவரை காணாத ஒப்பற்ற முதலாம... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் -சரவணா இராஜேந்திரன் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியா முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டுவிடும். செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி என்று ஒருதரப... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் சிறிய இருக்கை தேவையான பொருட்கள்: 1. 3ஜ்3 செ.மீ. அளவுள்ள தடிமனான வண்ண அட்டை. 2. 12 தீக்குச்சிகள், 3. பெவிகால் பசை. செய்முறை 1.     முதல... மேலும்