Home குட்டி முயல் பூவிழி
செவ்வாய், 25 செப்டம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
அவர் வழி செல்வோம்! சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான்   வ... மேலும்
சின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்
வடகிழக்குப் பருவமழை வடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்
குட்டி முயல் பூவிழி
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பூவிழியாள் ஒரு குட்டி முயல். பத்தாவது நாளாக அதன் அம்மா  பூவிழியை நூலகத்திற்கு அழைத்துச் செல்கின்றார். பத்து நாள் கடந்தும் பூவிழி இன்னும் ஒரு புத்தகத்தைக் கூட தொடவில்லை. பிறகு நூலகத்தில் என்ன செய்தது? நூலகத்தின் வாசலில் சின்ன விளையாட்டு மைதானம் இருந்தது. மஞ்சள் நிறமென்றால் பூவிழிக்கு மிகவும் பிடிக்கும். பல வண்ணங்களில் அங்கே இருக்கைகள் இருந்தன. பூவிழி மரத்தின் கீழே இருந்த மஞ்சள் நிற இருக்கையில் அமர்ந்து கொள்ளும். காலை முதல் மாலை வரையில் அங்கே என்ன செய்கிறார்கள் என பார்க்கும். தன் பையில் அம்மா கொடுத்த முள்ளங்கி கீரையை இருவேளை சாப்பிடும். மாலை அம்மா வந்ததும் “பூவிழி! என்னம்மா புத்தகம் படித்தாயா?” என்று கேட்டால், “இல்லை அம்மா. நான் விளையாடினேன்” எனச் சொல்லும். அம்மாவும் புன்னகைத்து “சரி” என வீட்டிற்கு அழைத்துச் செல்லும்.

பதினொன்றாம் நாள் பூவிழிக்கு ஓர் எண்ணம் வந்தது. “அட நூலகம் என்கின்றார்கள், நூல்கள் என்கின்றார்கள் அப்படி என்னத்தான் இருக்கின்றது? பார்த்துவிடுவோம்” என முடிவு செய்தது. மைதானத்தில் இருந்து நூலகக் கட்டிடத்தை நோக்கி நடந்தது. அங்கே பழுப்பு நிறத்தில் பெரிய முயல் இருந்தது, “வா, பூவிழி, உன்னை வரவேற்கிறேன்” என்றது. நூலகரின் ‘தன் பெயர் செண்மயா’ என்று அறிமுகம் செய்துகொண்டது.

“நீ என்ன புத்தகம் வாசிக்கப்போகிறாய் பூவிழி?”

“நான் இன்னும் வாசிக்கக் கற்றுக்கொள்ளவில்லை. நான் ஒரு புத்தகம் எடுத்து வருகிறேன். நீங்க அந்த கதையைச் சொல்லுங்க” என்றது.

சந்தேகமே வேண்டாம்! பூவிழி ஒரு மஞ்சள் நிற அட்டை போட்டிருந்த புத்தகத்தினை எடுத்து வந்தது. “அட அருமையான புத்தகமாச்சே இது”

“எனக்குத் தெரியும்” என்றது பூவிழி புன்முறுவலுடன்.

“இதில் நிறைய கதைகள் இருக்கு குட்டி. எந்த கதையை உனக்கு வாசிக்கட்டும்?” என்று கேட்டது செண்மயா.

“எனக்கு.. எனக்கு.. மனிதர்கள் இருக்கும் கதை சொல்லுங்” என வரியை முடிக்காமலே சிரிக்க ஆரம்பித்தது.

பக்கங்களை புரட்டிய செண்மயா ஒரு பக்கத்தில் நிறுத்தியது. தொண்டையைக் கனைத்தபடி. “தொப்பிகளை விற்கும் வியாபாரிக் குரங்கு ஒன்று இருந்தது. பல வண்ணங்களில் தொப்பிகளை விற்றுக்கொண்டு ஊர் ஊராகச் சென்றது. தலையில் ஒரு பெரிய கூடையில் எல்லா தொப்பிகளையும் வைத்துக்கொண்டு போகும். ஒரு கடுமையான வெயில் நாளில் தொப்பிகளை விற்றுக்கொண்டு சென்றது. சோர்ந்து ஒரு மரத்தின் கீழே அமர்ந்தது. அமர்ந்ததும் உறங்கிவிட்டது. விழித்தபோது அதற்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் கூடையில் ஒரு தொப்பியைக்கூட காணவில்லை. மரத்தின் மேல் சத்தம் வர மேலே பார்த்தது. அங்கே மனிதர்கள் தொங்கிக்கொண்டு இருந்தார்கள். எல்லோர் தலையிலும் ஒரு தொப்பி இருந்தது.

மனிதர்களே ஒழுங்காக தொப்பிகளைக் கொடுத்துவிடுங்கள் என்றது சத்தமாக.

‘உஷ் உஷ். குஷ் குஷ்’ என மரத்தின் மீது இருந்த மனிதர்கள் கத்தினார்கள்.

வியாபாரிக் குரங்கு கையை ஓங்கியதும் மனிதர்களும் கையை ஓங்கினார்கள். குரங்கு தலையைச் சொறிந்ததும் மனிதர்களும் சொறிந்தார்கள். ஆஹா இது மறந்தே போனதே. குரங்கு தன் தலையில் இருந்த தொப்பியை கூடையில் போட்டது. எல்லா மனிதர்களும் தொப்பியை போடும் என எதிர்பார்த்தது. ஒரு மனிதன் இறங்கி வந்தது. திட்டம் வெற்றி என நினைத்தது குரங்கு. கூடையில் இருந்த தொப்பியை லபக் என்று எடுத்துக்கொண்டு மரத்தின் மேலே சென்றது அந்த மனிதன்.

மரத்தின் மேலே இருந்த மனிதன் மற்றொரு மனிதனிடம் நமக்கும் இந்தக் கதையைச் சின்ன வயதிலேயே சொல்லி இருப்பார்கள் என்று இந்த வியாபாரிக் குரங்கிற்கு தெரியவே இல்லை பார்த்தாயா?’ என்றது. வியாபாரிக் குரங்கு சோகமாக தலையில் கூடையை கவிழ்த்தபடி சென்றது.

கதை முடிந்தது” என செண்மயா கூறியது.

“அந்தக் கூடையில் மஞ்சள் நிறத் தொப்பி இருந்ததா? எத்தனை இருந்தன” என்று கேட்டது பூவிழி முயல். “அட அந்த வியாபாரிக் குரங்கு சோகமாகப் போகின்றதே கதை அப்படி முடிந்தால் நன்றாகவா உள்ளது? கதையை மாற்றிவிடலாமா?” எனக் கேட்டது நூலகர் செண்மயா.

“ஆமா இப்படி முடிக்கலாம்.” “சோகமாகச் சென்ற வியாபாரிக் குரங்கினை மனிதன் ஒன்று அழைத்தது. எல்லாத் தொப்பிகளையும் அதனிடம் கொடுத்துவிட்டு இரண்டு இளநீரையும் கொடுத்துவிட்டு ஒரு புன்னகை வீசிவிட்டு மீண்டும் மரத்தின் மீது ஏறியது” இப்படி கதையை முடித்தது பூவிழி.

“அடடே, கதை அற்புதமாக முடிந்துவிட்டதே. ஆமாம் இந்தக் கதையில் என்ன நீதி பூவிழி?” என்று கேட்டது நூலகர் தன் கண்ணாடியை சரி செய்தபடி.

புத்தகத்தை மூடிவைத்தது. “கதையில் நீதி சொல்லியே தீரவேண்டுமா? கதை கேட்கறதே எவ்வளவு அருமையா இருக்கு. அந்த மகிழ்ச்சி போதுமே” என்ற பூவிழி சொன்னபோது பூவிழியின் அம்மா அங்கே நின்று கொண்டு இருந்தது.

“அம்மா..” என கட்டிக்கொண்டது.

“பூவிழி என்னம்மா புத்தகம் படித்தாயா?”

“ஓ கதை கேட்டேனே” என்றது.

நூலகரிடம் விடைபெறும்போது “நாளை காலை வருவேன் எல்லா மஞ்சள் நிற புத்தகத்தில் இருக்கும் மனிதர்களின் கதையையும் படித்து வையுங்கள். நான் வந்து கேட்டுக்கொள்கிறேன்” என மகிழ்வாக விடைபெற்றது. கேட்ட கதையினை வீடுவரை தன் பாணியில் சொல்லிச் சொல்லி சொல்லி மகிழ்ந்தது குட்டி முயல். வானமும் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருந்தது.<

Share
 

முந்தைய மாத இதழ்

தொடர் வண்டி ! தொடர் வண்டி !   குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி   நீண்டு வளைந்து பாம்பை... மேலும்
செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை செய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை   அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்
சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த  பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்  சிறுத்தை போல சீறி எழுந்தவர்! பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள்   மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்
தங்க மங்கை ஹிமாதாஸ் தங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்