Home பெரியாரின் பார்வை
செவ்வாய், 19 பிப்ரவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி! வீட்டுக் குள்ளே நட்சத்திரம் கண் சிமிட்டுது - அது விண்வெளியில் இருந்து இங்கே எப்போ வந்தது?   பறந்து பறந்து அறைமுழுக்க வெளிச்சம் காட்டுத... மேலும்
சாதனை செய்வது கடினமா? சாதனை செய்வது கடினமா? கயிரா போஹ் கேட்கிறார் சரா நாம் ஊடகங்களில் சாதனையாளர்களைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். அப்போது பொதுவாக அனைவரது உள்ளத்திலும் ஓர... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி யாழுசிவா & ராஜ்சிவா மேலும்
இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு சிறுவர் கதை உமையவன் கருமலைக்காட்டுல மரங்கள் நிறைய இருக்கும். அரச மரம், ஆலமரம், பூவரச, வாதனா மரம், வேம்பு, இப்படி சொல்லிட்டே போகலாம் அவ்வ... மேலும்
’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா? ’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா? காரணமின்றி ஏற்காதீர்கள் சிகரம் தமிழ்ப் பாட நூல்களில் அந்தணர் என்று சில நேரங்களில் வருவதை விளக்குவதற்கு பூணூல் தரித்த பார்ப்பனர்களை சிலர் அ... மேலும்
பெரியாரின் பார்வை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

பெரியாரின் பார்வை கூர்மையானது. இங்கு நான் அவருடைய கண்பார்வையைக் குறிப்பிடவில்லை.

ஒரு விசயத்தை அவர் அலசும் கோணத்தையே குறிப்பிடுகிறேன். உதாரணமாக பெண்கள் விடுதலை பற்றி பெரியார் குறிப்பிட்டுச் சொன்னதைப் பார்க்கலாம்.

‘பெண்கள் விடுதலை ஆண்களால் உண்டாகாது; பெண்களே தங்கள் விடுதலைக்குப் பாடுபட வேண்டும்... எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு, கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா?’

* * *

ஒரு விசயத்தில் கோணம் மட்டுமல்ல, கோணல்கூட பெரியாரின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. சுட்டிக் காட்டுவார்.

மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்று திருத்தம் செய்து வெளியிடப்பட்டிருந்தது.

‘எங்கள் நாடு’ பாடல்.

‘மன்னும் இமயமலை யெங்கள் மலையே’ என்று தொடங்குவது. முதல் இரண்டு பத்திகளிலும் ‘பாரத நாடெங்கள் நாடே’ என்று இடம் பெற்றுள்ளது. மூன்றாவது பத்தியில் ‘ஆரிய நாடெங்கள் நாடே’ என்று திருத்தப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதுகுறித்து 1929-_லேயே தன் கட்டுரையில் எடுத்துக் காட்டினார் பெரியார். (10.02.1929)

பெரியாரின் பார்வை பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்ல நேரம் பார்த்துத் தானே செய்ய வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டபோது,

பெரியார் ‘டக்’கென்று பதில் சொன்னார்.

இராமனுடைய திருமணம் வசிஷ்டர் என்னும் ரிஷியால் நல்ல நேரம் பார்த்துத்தான் செய்யப்பட்டது. ராமன்_சீதை வாழ்க்கை எவ்வளவு சின்னாபின்னப்பட்டது? என்று கேட்டார்.

பெரியார் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற முறையில் பேசுவார்.

‘வழா வழா... கொழா... கொழா...’ காரியம் கிடையாது. இத்தன்மை பெரியார் பார்வையின் அடிப்படை ஆகும்.


பெரியாரின் சோம்பலின்மை

ஒருசமயம் பெரியார் ஒரு கிராமத்தில் நடந்த கூட்டத்திற்குப் பேசச் சென்றிருந்தார். அன்றே வேறொரு கிராமத்தில் நடக்கும் கூட்டத்தில் பேச வேண்டும்.

அந்தக் கிராமத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் இல்லை. கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரியாருக்காக ஒரு குதிரை வண்டியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்தக் குதிரை வத்தல் தொத்தலாக மெலிந்து காணப்பட்டது. குதிரை வண்டியை இழுத்துச் செல்லுமா என்றே சந்தேகமாக இருந்தது.

பெரியாரும் அவருடன் வந்தவரும் வண்டியில் ஏறி உட்கார்ந்தார்கள். வண்டிக்காரன் குதிரையை விரட்டினான். குதிரை மெல்ல நடந்தது. வண்டி மாப்பிள்ளை ஊர்வலம் போல் நகர்ந்தது.

பெரியாருக்கு பொறுக்க முடியவில்லை. அடுத்த கூட்டத்திற்கு நேரமாகிவிட்டது. சோம்பேறிபோல் வண்டியில் உட்கார்ந்து போகமுடியுமா?

பெரியார் வண்டியைவிட்டு இறங்கினார். தடியை கையில் எடுத்துக் கொண்டார். ‘விறுவிறு’ என்று நடந்தார். உடன் வந்தவருக்கு வண்டியை விட்டு இறங்க மனம் வரவில்லை. ஆனால் பெரியார் வேகமாக நடந்துகொண்டிருந்தார்.

சோம்பல் நோய் பெரியாருக்கு வந்தது கிடையாது.

பெரும்பாலும் பெரியார் பகலில் தூங்கமாட்டார். எதையேனும் படித்துக்கொண்டே இருப்பார். படிக்காத நேரங்களில் சிந்தனை செய்வார். தனிமையில் இருக்கும்போது எழுதிக் கொண்டிருப்பார். எஞ்சிய நேரங்களில் நண்பர்களுடன் வாதம் புரிந்து கொண்டிருப்பார்.

பெரியார் சோம்பல் இல்லாதவர், ஊக்கம் நிறைந்தவர்.<

Share
 

முந்தைய மாத இதழ்

மேழித் திருநாள்! மேழித் திருநாள்! மஞ்சுவும் பனியும் மூடும் மார்கழி பைய மறையும்! பஞ்சமும் பசியும் ஓடும் பாதையும் தையில் தெரியும்!   அஞ்சுதல் பகைமை போகி அனலிடை வெந்து ம... மேலும்
அழகிய பென்சில் கிரீடம் அழகிய பென்சில் கிரீடம் செய்து அசத்துவோம் வாசன் தேவையான பொருட்கள்: 1. பென்சில், 2. ஸ்கெட்ச் பென்(கருப்பு), 3.அளவுகோல், 4.கத்தரிக்கோல், 5.பசை, 6.தாள் வெட்டுக... மேலும்
பெரியாரின் பெருந்தன்மை பெரியாரின் பெருந்தன்மை 22 பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். யாரோ சில கயவர்களால் தூண... மேலும்
வலிமை வலிமை சின்னச் சின்னக் கதைகள் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன் கருவேல மரங்கள் நிறைந்த வேடந்தாங்கல் ஏரி. இது பறவைகளின் சரணாலயம். ஒவ்வ... மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… டிசம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 5இல் உள்ள பெட்டிச் செய்தியில் 3ஆம் வரியில் தன்சிறந்த குழந்தைகளுடன் என்பது தலைசிறந்த குழந்தைகள்... மேலும்