Home சின்னக் சின்னக் கதைகள்
திங்கள், 19 நவம்பர் 2018

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
மல்லிகை மல்லிகை மல்லிகை மலரும் மாலையிலே வாசனை கமழும் சோலையிலே கள்ளமில் லாத உள்ளத்தைப் போல் வெள்ளை நிறந்தான் மேனியிலே. கற்றவ ரோடு சேர்வதனால் மற்றவர் அ... மேலும்
கராத்தே வெற்றியாளர்கள் கராத்தே வெற்றியாளர்கள் திருவள்ளூர் மாவட்ட அளவில் நடந்த கராத்தே போட்டியில் பொன்னேரி பெரியார் இல்லத்தைச் சேர்ந்த பெரியார் பிஞ்சுகள் பிரியதர்ஷினி (14) முதல் இடத்தைய... மேலும்
பெரியாரின் எழுத்துத் திறமை! பெரியாரின் எழுத்துத் திறமை! சுகுமாரன் ஓவியம்: கி.சொ பெரியார் சொன்னதைச் செய்வார். செய்வதைச் சொல்வார். பெண் விடுதலைக்காகப் பெரியாரைப்போல் புரட்சிக் கருத்துகள் சொன்னவ... மேலும்
நோபல் பரிசு 2018 நோபல் பரிசு 2018 உலகத்தின் முக்கியமான சாதனையாளர்களுக்கு ஆறு துறைகளில் வழங்கப்படும் நோபல் பரிசின் இந்த ஆண்டுக்கான விருதாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது ... மேலும்
மாவீரர் நாள் (ஈழ வரலாறு) மாவீரர் நாள் (ஈழ வரலாறு) எழுத்து: உடுமலை ஓவியம்: கி.சொ மேலும்
சின்னக் சின்னக் கதைகள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

திருந்து

தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது.

பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிளி, அதைப் பார்த்தது.

வெட்டுக்கிளியின் செயல் அதற்கு வேதனையாய் இருந்தது.

தயவு செய்து இலையைத் தின்னாதே! பழம் இருக்கிறது, அதைச் சாப்பிடு என்றது பச்சைக்கிளி.

நீ பச்சைக்கிளி, நான் வெட்டுக்கிளி. நீ பழத்தைத் தின்னு! நான் இலையைத் தின்கிறேன்! என்னைத்  தடுக்காதே! நான் பசியாக இருக்கிறேன்! என்று ஆணவமாய்ச் சொன்னது வெட்டுக்கிளி.

இந்தச் செடி நமக்குத் தின்னப் பழம் கொடுக்கிறது. அதை விட்டுட்டு இலையைத் தின்றுச் செடியை அழிக்காதே! என கெஞ்சியது பச்சைக்கிளி.

பச்சைக்கிளியின் பேச்சை ஏற்காத வெட்டுக்கிளி செடி அழியுதேன்னு நீ ஏன் கவலைப்படுறே! இது அழிஞ்சா இன்னொரு செடியிருக்கு! உன் வேலையைப் பாரு என்றபடி இலைகளைத் தின்றுகொண்டே இருந்தது வெட்டுக்கிளி.

அய்யய்யோ! சொல்லச்சொல்ல கேட்காமல் பழச்செடியை அழிக்குதே இந்த வெட்டுக்கிளி. இந்த அநியாயத்தை எப்படித் தடுப்பது என்று புலம்பியது பச்சைக்கிளி.

திடீரென எங்கிருந்தோ வந்த ஓணான் லபக் என வெட்டுக்கிளியைப் பிடித்து விழுங்கியபடி நடந்தது.

இதைப் பார்த்த பச்சைக்கிளி தன் கிளி மொழியால் சொன்னது...

திருந்த மறுப்பவனுக்கு

வருந்தும் முடிவு வரும்!

Share
 

முந்தைய மாத இதழ்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!   விடைகள்: 1. எலியின் வால், 2. கிடாரின் தந்தி கம்பிகள், 3. முள்ளம்பன்றியின் கால், 4. தரையில் கிடக்கும் தொப்பி, 5. பட்டாம்பூச்சி, 6. வா... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் அழகிய கை விசிறி தேவையான பொருட்கள்: 1.     சிறிது தடிமனான, சதுர வடிவ, இரு பக்கமும் வண்ணமயமான காகிதம் ஒன்று. 2.     அளவுகோல் 3.     ரப்ப... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் தண்டனை மலை அடிவாரத்திற்கு ஊரில் உள்ள ஆடுகளையெல்லாம் மேய்க்க ஓட்டிப் போனார் ஒரு முதியவர். அவர் கவனிக்காத நேரத்தில் வயலுக்குள் இறங்கி நட்டு... மேலும்
அறிந்துகொள்வோம்… அறிந்துகொள்வோம்… கேலாபேகாஸ் பூத வகை ஆமைகள் 225 கிலோ எடை உடையது. இது 100 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. லெதர்பேக் கடலாமைகள் பனிக்கரடியைவிட பெரிதாக இரண்ட... மேலும்
எந்த எண் என்றாலும் பத்துதான் * ஓர் இலக்கு எண் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். * அந்த எண்ணுடன் ஒன்பதை(9)க் கூட்டவும். * கூட்டிய எண்ணை இரண்டால்(2) பெருக்கவும். * வரும் விடைய... மேலும்
'மொக்கை`யும் மூன்றெழுத்து! "அம்மா"  மூன்று எழுத்து "அப்பா" மூன்று எழுத்து "தம்பி" மூன்று எழுத்து "தங்கை" மூன்று எழுத்து "மகள்" மூன்று எழுத்து "மகன்" மூன்று எழுத்த... மேலும்