Home குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்
வியாழன், 21 மார்ச் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! பயனாய் வாழ்வைக் கழித்திடு - தம்பி பயத்தைப் போக்கி வளர்ந்திடு நயமாய்ப் பேசக் கற்றிடு - தம்பி நன்மைகள் செய்ய எண்ணிடு! காலம் போற்றி வாழ... மேலும்
அழகிய பென்சில் ஸ்டேண்ட் அழகிய பென்சில் ஸ்டேண்ட் செய்து அசத்துவோம் வாசன் தேவையான பொருட்கள்: பல வண்ணத்தினாலான அய்ஸ்கிரீம் குச்சிகள், ஒரு சிறிய அட்டைப் பெட்டி, பசை, பெவிக்கால், ரப்பர் பே... மேலும்
சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் கதை கேளு… கதை கேளு… விழியன் மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க என்றார் ... மேலும்
மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ (1) கடவுள், (2) மதமும், ஜாதியும், (3) ஜனநாயகம் _ இம்மூன்றும் இந்நாட்டை பிடித்துள்ள பேய்கள்... மேலும்
பூ மட்டுமா? பூ மட்டுமா? த.மரகதமணி இது என்ன? எலுமிச்சை பழம். இதுக்கு முன்னாடி? எலுமிச்சங்காய். இது என்ன? வாழைப்பழம். இதுக்கு முன்னாடி? வாழைக்காய். இந்த நகைச்ச... மேலும்
குட்டிப் பெரியார் தாத்தாவும், பெரியார் பிஞ்சுகளின் பேரணியும்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

புதுவையிலிருந்து வருகை தந்திருந்த தோழர் இராஜா, ஒன்றாம் வகுப்பு பயிலும் ஆறு வயதான தன் மகன் கி.இரா.பிரபாகரனுக்கு தந்தை பெரியார் வேடமணிவித்து (அச்சிறுவன் மூன்றடி உயரம் இருக்கக் கூடும்) பேரணியில் அழைத்துவந்தார். அந்தக்குட்டிப் பெரியாரின் உணர்வுகள் என்னவென்பதை அறிந்துகொள்ள இயலாதபடி அவர் அணிந்திருந்த மீசையும், தாடியும் அவரின் முகத்தையே மறைத்திருந்தது. ஆனால், குட்டிப் பெரியாரின் தந்தை ராஜாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிவது போல பளிச் சென்றிருந்தது. மிகவும் கவனத்தை ஈர்த்த அந்தக் குட்டிப் பெரியாரை அனைவரும் ஆவலோடு பார்த்து தங்களின் கைபேசிகளில் படமெடுத்துத் தள்ளினர்.

அந்தக் குட்டிப் பெரியாரை சிறிது தூரம் நடத்தி அழைத்து வந்த ராஜா, அந்தப் பிஞ்சுக் கால்கள் வலிக்குமே என்ற காரணத்தால் பெரியாரையே அலேக்காகத் தூக்கி தம் இரண்டு தோள்களிலும் வைத்துக் கொண்டார். இன்னும் வேறு சிலரும்கூட அந்தக் குட்டிப் பெரியாரை வாங்கித் தம் தோள்களில் வைத்து பறையிசைக்கு ஏற்ப மெலிதாக ஆடியபடியே ஊர்வலத்தில் உற்சாகத்துடன் வருகை தந்தனர். அடேயப்பா! எப்படிப்பட்ட உணர்வுகள்! மங்காது மாறாது இன்றும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பெரியாரின் கொள்கைகளையே நாளும் சுமந்தபடி வாழ்ந்துவரும் அவர்களுக்கு ஏதோ பெரியாரையே தம் தோள்களில் தூக்கிச் சுமக்கும் பெருமிதம் போலும்!  பெரியார் கல்வி வளாகத்திலிருந்து வருகை தந்திருந்த மாணவர்களில் சிலர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி, கல்வி வள்ளல் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர், மேரிகியூரி, டாக்டர். முத்துலட்சுமி, கல்பனா சாவ்லா போன்ற தலைவர்கள், அறிவியல் முன்னோடிகளின் வேடமணிந்து பேரணியின் முன்வரிசையில் வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.

தொடரும்...

மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாட்டுச் செய்திகளை அவ்வளவு சுருக்கமாகச் சொல்லிவிட முடியுமா? பெரியார் பிஞ்சுகள் மாநாடு பற்றிய இன்னும் விரிவான பதிவுகள், மாநாட்டின் முக்கிய நோக்கமான பெரியார் பிஞ்சுகளின் பிரகடனம், அதற்கான காரணம் அனைத்து நிகழ்ச்சிகளின் விவரம், பெரியார் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் என அடுத்த இதழிலும் மாநாட்டுச் சிறப்புப் பக்கங்கள் தொடரும்... (நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரியார் பிஞ்சுகளின் படங்கள் விடுபட்டிருந்தால் அருள்கூர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்).

தொகுப்பு: உடுமலை வடிவேல்

Share
 

முந்தைய மாத இதழ்

பெருமையுரு! பெருமையுரு! பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள் தவறே யின்றித் தாய்மொழியைத் தம்பி முதலில் கற்றிடுவாய்; அவமா னங்கள் இதிலில்லை; அயலார் மொழியும் இருக்கட... மேலும்
மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசிய நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் மற்றும் பெரியார் ... மேலும்
டயோ – தியோ டயோ – தியோ கதை கேளு… கதை கேளு… விழியன் டயோவினை கூட்டில் காணவில்லை. தாரிகாவும் அவள் தம்பியும் வீடு முழுவதும் தேடிவிட்டார்கள். கண்டுபிடிக்க முடியவில்... மேலும்
காலப் பயணம் செய்யலாமா? கால இயந்திரம் சரவணா இராஜேந்திரன் காலப்பயணம் _ நாம் எல்லோரும் இந்த வார்த்தையைக் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  காலம், கடந்து பயணம் செய்யும... மேலும்
குதிக்கும் டால்பின் குதிக்கும் டால்பின் செய்து அசத்துவோம் வாசன் 1.     3X5 இன்ச் அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு இரண்டையும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும். 2.     பிறகு ப... மேலும்