Home ”ரோலிங் சர்ர்ர்ர்ர்”
புதன், 16 ஜனவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
களை கட்டிய காலை நிகழ்ச்சி களை கட்டிய காலை நிகழ்ச்சி பெரியார் பிஞ்சுகள் மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சிகரமான பெரியார் பிஞ்சுகள் மாநாட்டில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலுமிருந்து... மேலும்
அல்லும் பகலும் உழைத்திடடா! உழைப்பால் உலகை வென்றிடலாம் உண்மை! இதனை அறிந்திடுவீர்! உழைப்பால் முடியா செயலென்று உலகில் எதுவும் இல்லையென்பீர்!   அடிமேல் அடிகள் அடித்தி... மேலும்
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்! ஆசிரியர் தை… தை… தை… இயற்கையின் விந்தை எழில் பொங்கும் வித்தை அழிய வேண்டும் அகந்தை ஆக வேண்டும் மேதை மகிழ வைக்கும் விருந்தை குளிர வேண்ட... மேலும்
உங்கா, சிங்கா, மங்கா கதை கேளு… கதை கேளு… விழியன் பள்ளி முடித்துவிட்டு மகிழ்வாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தது உங்கா. உங்கா வெள்ளையும் ஆங்காங்கே கறுப்பு வட்ட... மேலும்
நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும் விழா நாயகர்கள் சரவணா ராஜேந்திரன் வள்ளுவர், கவுதம புத்தர், வர்த்தமான மகாவீரர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, பெருந்தல... மேலும்
”ரோலிங் சர்ர்ர்ர்ர்”
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கதை கேளு கதை கேளு

விழியன்

ரோலிங் சர்ர்ர்ர்ர் என்ற குரல் வந்ததும் காட்டுவழிப் பாதையின் மீது எல்லோர் கண்களும் திரும்பின. படத்தின் இயக்குநர் கரப்பான்பூச்சி பூஞ்சைய்யா, டைரக்டர் என்று எழுதி இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தது. கேமராவை குப்லி கரடி கையாண்டது. படப்பிடிப்பு தளத்தில் நிறைய மான்களும், முள்ளம்பன்றிகளும் உதவி செய்துகொண்டிருந்தன. இன்றைய காட்சி மிகவும் உருக்கமான காட்சி. பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாயும் மகனும் காட்டிற்குள் சந்திக்கின்றார்கள். தாயாக நடிப்பது கஞ்சிரா என்ற குரங்கு. உண்மையில் கஞ்சிரா ஒரு ஆண் தான் ஆனால் பெண் வேடமிட்டு இன்று தாயாக நடிக்கின்றது. அச்சோ இன்னும் கதையின் நாயகனைப் பற்றி சொல்லவில்லையே. நாயகன் லிபு என்ற குட்டிப்புலி. லிபு தான் மகனாக நடிக்கின்றது.

லிபுவின் குட்டி வரலாற்றையும் நாம் தெரிந்துகொள்வோம். லிபுவிற்கு சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்று ஆசை. தன் காட்டின் அருகே ஒரு படப்பிடிப்பு நடந்தபோது அதனைப் பார்த்து நடிக்க ஆசை வந்தது. சிறுவயதில் நடந்த அந்த படப்பிடிப்பிலும் கஞ்சிரா தான் நடித்து இருந்தது. அதற்கு கொடுத்த மரியாதையையும் பக்கத்து காடுகளில் இருந்து வந்து மற்ற விலங்குகள் கையெழுத்து வாங்கியதையும்  பார்த்து இன்னும் ஆசை அதிகரித்தது. எப்படியேனும் அந்த பிரகாச விளக்கின் முன்னர் நின்றுவிட வேண்டும். காட்சியை நடித்து முடித்தவுடன் செட்டில் இருப்பவர்கள் எல்லோரும் கைத்தட்டிவிட வேண்டும் என நினைத்தது. ஆனால் ஒருமுறை தன் தாயுடன் திரையரங்கிற்குச் சென்று பாதியிலேயே ஓடிவந்து விட்டது லிபு. யானை என்றால் லிபுவிற்கு பயம். படத்தில் யானை ஒன்று திரையில் தோன்றியதுமே அம்மாவின் முந்தானையைத் தேடியது. ஒரு காட்சியில் யானை திரையில் ஓடிவருவதைப் பார்த்து திரையரங்கைவிட்டே ஓடோடி வீட்டிற்கு வந்துவிட்டது. அதன் பின்னர் திரையரங்கம் பக்கம் தலைவைத்தே படுக்கவில்லை. ஆனால் திரைப்பட சுவரொட்டிகளைப் பார்க்கும், திரை விமர்சனங்களைப் படிக்கும்.

ரோலிங் சர்ர்ர்ர் சொல்லும் இணை இயக்குநரான மானின் கை காலை பிடித்து இந்த கதாபாத்திரத்தை வாங்கி இருக்கின்றது. தன் அம்மாவிடம் கூட சொல்லவில்லை. காட்சிக்காக அது ஆசையாசையாக வளர்த்த மீசையை வெட்டிக் கொண்டது. ஒப்பனைக் கலைஞரிடம் எப்படியாச்சும் வண்ணம் தீட்டி மறைக்கமுடியாதா என மன்றாடியது. ஆனால் ஒரே பிடியாக வெட்டியாக வேண்டும் என மீசையை வெட்டியது.

என்னப்பா அந்த லிபுகிட்ட காட்சியை சொல்லியாச்சா என விசிறிக்கொண்டே கேட்டது பூஞ்சைய்யா. சொல்லியாச்சு சார், அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்து லிபு ஓடி வரணும், வந்து தன் தாயை பார்த்ததும் அம்மா... என உருகி அழைத்து கட்டிப்பிடிக்கவேண்டும். தெளிவா சொல்லியாச்சு சார்.

ரோலிங் சர்ர்ர்ர்ர் என்ற குரல் வந்ததும் காட்டுவழிப் பாதையின் மீது எல்லோர் கண்களும் திரும்பின. தூரத்தில் லிபு ஓடி வந்தது.

கட் என்றது பூஞ்சைய்யா.

பல ஆண்டுகள் கழிச்சு அம்மாவை பார்க்க வர்ற ஒரு நடுக்கம் வேண்டாமா?

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

அம்மா..ன்னு காடே அதிர்கின்ற மாதிரி கத்தணும் லிபு

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

கண்ணைக் கீழ வெக்காத லிபு

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

கட்

தாடை அதிரணும்..

கஞ்சிரா சார் மேக்கப் கலைஞ்சிடுச்சு

இன்னும் வேகமா ஓடி வா லிபு

இன்னும் சத்தம்..

சுமார் அய்ம்பது ரீ-டேக் எடுத்து-விட்டார்கள். லிபு கடைசியா ஒரு டேக் எடுத்திடலாம். எல்லோரும் சோர்ந்து-விட்டார்கள். கஞ்சிரா சார் கூட கடுப்பா இருக்கார். இப்போது சரியாக நடிக்கின்றேன் என சோர்வாக அந்த அரைகிலோ மீட்டர் தூரத்திற்கு சென்றது.

மீண்டும் ரோலிங் சர்ர்ர்ர்ர்.

காத்திருந்தார்கள். காத்திருந்தார்கள் காத்திருந்தார்கள். லிபு வருவது போலவே தெரியவில்லை. ஆமாம் லிபு படப்பிடிப்பு தளத்தை விட்டு கிளம்பிவிட்டது. ஆப்பிள் பழச்சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு என விதவிதமாக கிடைக்கும் என நினைத்தது. ஆனால் தண்ணீர்கூட கிடைக்கவில்லை. தண்ணீர் தாகம், பசி. நேராக வீட்டிற்கு சென்றது. லிபுவின் அம்மா சமையல் பாத்திரங்களை எல்லாம் கழுவி முடித்திருந்தது.

என்ன லிபு எங்க போயிட்ட? எங்க சாப்பிட்ட? இவ்வளவு நேரம் காத்திருந்து இப்ப தான் சாப்பாட்டை எல்லாம் எறும்புக்கு கொடுத்திட்டு கழுவி வெச்சேன். என்ன எங்காச்சும் பலமான சாப்பாடா? அடேய் என்ன மீசை எல்லாம் வெட்டிருக்க என்றது.

அம்மா... என்று உருக்கமாக கத்தியது.

ஆனால் கட் என யாருமே சொல்லவில்லை. உடனே சீக்கிரம் தன் மகனுக்கு உப்புமா சமைத்து கொடுத்தது. நடந்தை சொல்லச் சொல்ல தாயார் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அம்மா, இதை என் நண்பர்களிடம் எல்லாம் சொல்லக்கூடாது என வாக்குறுதி வாங்கிக் கொண்டது. ஆனால் ஏதேனும் குறும்புத்தனம் செய்தால் உடனே தாயார் ரோலிங் சர்ர்ர்ர்ர் எனச் சொல்லும்.

Share
 

முந்தைய மாத இதழ்

பெரியாரின் நூல்கள் படி! பெரியாரின் நூல்கள் படி!   பகுத்தறிவை வளர்ப்ப தற்குப் படித்திடுவாய் பெரியார் நூல்கள்; தகுதியுடைத் தலைவ னாகத் தாத்தாவின் நூல்கள் கற்பாய்!   அறிவுக்கே ஒத்து வா... மேலும்
பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் பேரிடர்களிலிருந்து இயற்கைக் காப்போம் தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் குறிப்பாக நாகப்பட்டினம் முதல் புதுக்கோட்டை வரை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளைப் பார்த்த... மேலும்
தித்தித்தா விட்ட பட்டம் தித்தித்தா விட்ட பட்டம் கதை கேளு… கதை கேளு… விழியன் கிராமத்திற்குச் சென்று ஊர் திரும்பி இருந்தாள் தித்தித்தா. பள்ளி துவங்கிவிட்டது. முதல் நாள் முதலே பட்டம் விடவ... மேலும்
நச்சுப் பானம் கோகோ கோலா நச்சுப் பானம் கோகோ கோலா கோகோ கோலா என்னும் கொடிய குளிர்பானம். குழந்தைகளைத் தொடர்ந்து பருகச் செய்யும். இதில் உள்ள Aspartame என்னும் வேதிப் பொருள் குழந்தைகளுக்கும் ப... மேலும்
உரிமை சின்னச் சின்னக் கதைகள் கிராமத்து ஓட்டு வீடு. சிட்டுக்குருவி ஒன்று அந்த வீட்டின் உள்ளே ஓட்டு இடுக்கில் கூடு கட்டிக் கொண்டிருந்தது. அதைப் ப... மேலும்