Home பெரியாரின் பெருந்தன்மை
சனி, 20 ஜூலை 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” ”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்
உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன! கடல் மரணிக்கப் போகிறதா? என்ற கேள்வி எழலாம், ஆம்! இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்
பயணம் - பாடம் பயணம் - பாடம் தேன் எடுப்போமா? அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்
சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்
கொம்பு முளைச்சிருக்கா? கொம்பு முளைச்சிருக்கா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்
பெரியாரின் பெருந்தன்மை
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

22 பெரியாரின் கதை

சுகுமாரன்

ஓவியம்: கி.சொ


விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார்.

யாரோ சில கயவர்களால் தூண்டப்பட்ட ஒருவன் திடீரென்று மேடையில் ஏறி, பெரியாரை கத்தியால் குத்த முயன்றான்.

குத்த வந்தவனின் கையைப் பெரியார் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவனால் அசைய முடியவில்லை.

பெரியார் அவனை உற்றுப் பார்த்தார். அப்பாவி மனிதன், எய்தவன் இருக்க வெறும் அம்பாகப் பாய்ந்திருக்கும் இந்த மனிதனை ஏன் தண்டிக்க வேண்டும் என்று மனதிற்குள் எண்ணமிட்டார்.

அந்த மனிதன் பயத்தால் நடுங்கினான். அவனை அப்படியே மேடையிலிருந்த நாற்காலியில் உட்காரவைத்தார். அவன் பதட்டத்தை தணித்தார்.

அருகிலிருந்த தோழர்கள் அவனை போலீசில் ஒப்படைக்கலாம் என்று கூறினர். பெரியார் அதை ஏற்கவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தினருக்கு ஆத்திரம் பொங்கியது.

பெரியாரைக் குத்த வந்தவனை அடிக்கவும் உதைக்கவும் முன் வந்தனர்.

பெரியார் எல்லோரையும் அடக்கினார். கூட்டத்தினரின் ஆத்திரத்திலிருந்து காப்பாற்றி அவனைப் பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

எதிரிக்கும் நன்மை செய்த பெரியாரின் பெருந்தன்மையை மக்கள் புகழ்ந்தனர்.

பெரியாரின் அன்புள்ளம்

தள்ளாத வயதில் உடல்நிலை இடங்கொடுக்காத நிலையிலும் பெரியாரின் சேவை தொடர்ந்தது. காரணம், பெரியாரின் அன்புள்ளம், மக்கள் மீது அவர் கொண்ட அன்பு அளவிடற்கரியது.

அதுபோல பெரியாரின் மீது தமிழ்மக்கள் கொண்ட அன்பு இமயமலையை விடப் பெரியது.

பெரியார் உயிருடன் இருந்த காலத்திலே தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் அவருக்கு சிலைகள் எழுப்பப்பட்டன.

தமிழ் மக்கள் தங்கள் அன்பை எடை போடுவதுபோல் பெரியாரின் எடைக்கு எடை வழங்கிய பொருள்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.

1964ஆம் ஆண்டு உணவு நெருக்கடிக் காலம், அரிசிக்குப் பஞ்சம் ஏற்பட்டது. காஞ்சிபுரத்தில் பெரியாரின் 86ஆவது பிறந்த நாள் விழா நடந்தது. பெரியாரின் எடைக்கு எடை அரிசி வழங்கப்பட்டது.  ஆனால், பெரியார் அரிசியை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்க கூட்டுறவு சங்கத்திற்கே வழங்கிவிட்டார்.

திருவாரூரில் கொடுக்கப்பட்ட அரிசியை பிள்ளைகளின் மதிய உணவுக்குக் கொடுத்து-விட்டார்.

நீதிமன்றங்களில் பெரியாருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மக்களே வசூல் செய்து கட்டினர்.

பெரியாருக்கு மூன்று முறை பிரச்சார வேன்கள் வழங்கப்பட்டன.

பெரியார் மக்களிடம் அன்பு வைத்தார். மக்கள் தங்கள் அன்பில் அவரை இன்னும் வேலை வாங்கினர்.

Share
 

முந்தைய மாத இதழ்

பழகு முகாம் பழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது? பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது? பழகுமு... மேலும்
தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்
புதிய பாடம்! புதிய பாடம்! வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சு!புதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்