Home போகிப் பண்டிகை என்பது சரியா?
வியாழன், 21 மார்ச் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு! பயனாய் வாழ்வைக் கழித்திடு - தம்பி பயத்தைப் போக்கி வளர்ந்திடு நயமாய்ப் பேசக் கற்றிடு - தம்பி நன்மைகள் செய்ய எண்ணிடு! காலம் போற்றி வாழ... மேலும்
அழகிய பென்சில் ஸ்டேண்ட் அழகிய பென்சில் ஸ்டேண்ட் செய்து அசத்துவோம் வாசன் தேவையான பொருட்கள்: பல வண்ணத்தினாலான அய்ஸ்கிரீம் குச்சிகள், ஒரு சிறிய அட்டைப் பெட்டி, பசை, பெவிக்கால், ரப்பர் பே... மேலும்
சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல் கதை கேளு… கதை கேளு… விழியன் மூன்றாவது வரிசையில் இருந்து சத்தம் வந்துகொண்டே இருந்தது. தம்பிங்களா, அதென்ன சத்தம்? வகுப்பை கவனிங்க என்றார் ... மேலும்
மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ (1) கடவுள், (2) மதமும், ஜாதியும், (3) ஜனநாயகம் _ இம்மூன்றும் இந்நாட்டை பிடித்துள்ள பேய்கள்... மேலும்
பூ மட்டுமா? பூ மட்டுமா? த.மரகதமணி இது என்ன? எலுமிச்சை பழம். இதுக்கு முன்னாடி? எலுமிச்சங்காய். இது என்ன? வாழைப்பழம். இதுக்கு முன்னாடி? வாழைக்காய். இந்த நகைச்ச... மேலும்
போகிப் பண்டிகை என்பது சரியா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்


தமிழர்கள் கொண்டாடும் அர்த்தமுள்ள விழா பொங்கல் விழா! தமிழர்கள் தொன்று தொட்டு பகுத்தறிவுடன் வாழ்ந்தார்கள். ஆனால், ஆரிய ஊடுருவலுக்குப் பின்தான் அறிவிழந்தார்கள்; அடிமையானார்கள்!

தனக்குப் பயன்படுவதற்கு நன்றி செலுத்தினார்கள், உயர்ந்தவற்றை மதித்தார்கள். இதைத் தவிர அவர்களிடம் மூடச் செயல்கள் எதுவும் இல்லை.

அவர்களது நன்றியுணர்வின் அடையாளமே பொங்கல் விழா. தமிழர்களின் தலையாயத் தொழிலாகிய உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக நின்றவை மழை, சூரியன், மாடு, உழைப்பாளி. இந்த நான்கு காரணிகளுக்கும் நன்றி சொல்லும் விழாவே பொங்கல் விழா! மழைக்கு நன்றி சொல்லும் விழா மாரிப் பொங்கல், சூரியனுக்கு நன்றி சொல்லும் விழா சூரியப் பொங்கல்,

மாடுகளுக்கு நன்றி சொல்லும் விழா மாட்டுப் பொங்கல், உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் விழா உழவர் பொங்கல். சூரியனுக்கு நன்றி சொல்ல சூரிய ஒளியில் பொங்கி படையலிட்டு, அதை உண்டு மகிழ்வர். மாட்டுக்கு நன்றி சொல்ல, அதைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, உணவு கொடுத்து மகிழ்வர்.

உழவர்களுக்கு நன்றி சொல்ல, உழைப்பாளிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, புத்துணவு, பொருட்கள் கொடுத்து உபசரிப்பர்.

மழைக்கு நன்றி சொல்ல, வேண்டும்போது மழை வராது. எனவே, மழைத் திருநாள் அன்று ஒரு சொம்பில் நீர் வைத்து அதற்குப் படையல் செய்து நன்றி செலுத்தினர். இந்த நன்றி செயலைப் பின்னாளில் புரட்டித் திரித்து மூடச் செயலாக்கினர்.

மழை என்பதற்கு மாரி என்று வேறு சொல் உண்டு. எனவே, மாரிப் பொங்கல் என்று அழைத்தனர். மாரி என்பதை மாரியாத்தாள் என்று மாற்றி, மாரியாத்தாளுக்குப் படைப்பது என்று ஆக்கிவிட்டனர். நீர்ச் சொம்பில் வேப்பிலைச் செருகி, மாவு இடித்து தட்டில் வைத்துப் படையல் செய்யும் மூடத் தனத்தைப் புகுத்தினர்.

மழைத் திருநாளை மாரியாத்தாள் திருநாளாக ஒரு பக்கம் மாற்ற, மறுபக்கம் இந்திரத் திருவிழா என்று திரித்துக் கூறினர்.

மழைக்கு அதிபதி இந்திரன். இந்திரனுக்குப் போகி என்று பெயர். எனவே, அப்பண்டிகையைப் போகிப் பண்டிகை என்றனர்.

போகியென்பதும் புரட்டு, மாரியென்பதும் மடமை. மழைக்கு நன்றி சொல்லும் மழைத் திருநாள் என்பதே சரி. ஆனால் நன்றி எதிர்பார்க்காத சூரியன், மழை ஆகியவற்றுக்கு படையல் செய்து வணங்குதல் அவசியமற்றது.

இயற்கையைக் கொண்டாடுவதும் என்பதும், இன்றைய சூழலில் இயற்கையைக் காப்பதில் கூடுதல் அக்கறை செலுத்துவதுமே இவ்விழாக்களின் பொருளாக இருக்க வேண்டும்.

சிவந்த உடல் சிறப்பு?

உலகில் பெருமளவு பேசப்படும் சிக்கல்களுள் இதுவும் ஒன்று. குறிப்பாக தமிழகத்தில் அதிலுங்குறிப்பாக பெண்களுக்கு இது பெருஞ்சிக்கல்.

ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் கருப்பு நிறம்தான் நலத்தின் அடையாளம். அதுவே நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்கது.

தற்போது கருப்பு நிற ஆண்களைப் பெண்கள் விரும்புவது மிகுந்து வருகிறது. காலப்போக்கில் கருப்புப் பெண்களை விரும்பும் மனப்போக்கு வளரும். அதுதான் அறிவிற்குகந்த எதிர்பார்ப்பும் ஆகும். எனவே, சிவப்பு சிறப்பு என்ற எண்ணம் தப்பானதாகும். சிவப்பு வேண்டும் என்பது உளவியல் சார்ந்த ஓர் அறியாமையே! சிவப்பை உயர்வாக தப்பாக எண்ணியே தமிழன் ஆரியர்க்கு அடிமையானான். அத்தவறுகள் இனியுந் தொடரக்கூடாது.

உறுதி


தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்கள், 2011இல் தானே புயலின் போதும், இப்போது தாக்கிய கஜா புயலின்போதும் புயலின் வேகத்தை எதிர்கொண்டு விழாமல் தாக்குப் பிடித்திருக்கின்றன. தலைக்கனம் இல்லாவிட்டால் எதையும் சமாளிக்கலாம் என்பார்கள். பனை மரத்தைப் பொறுத்தவரை, அதன் தலைப்பகுதி கனமானது அல்ல என்னும் பழமொழிக்கு ஏற்ப கஜா புயலை எதிர்கொண்டு விழாமல் நிலைத்து நிற்கிறது.

தாவரவியல் முன்னாள் தலைவர் எம்.நரசிம்மன் கூறும் மூன்று முக்கிய காரணங்கள்.

1.     பனைமர வேரின் அமைப்பு, பனைமர வேர் நார்த்தன்மை கொண்டது என்றாலும், அதன் சுவாசத் திறன் அதிகம்.

2.     பனைமரத் தண்டின் நாள அமைப்பு அதை இலகுவானதாக வைத்திருக்கிறது.

3.     மரத்தின் உச்சிப் பகுதி, மடங்கிய இலைகளும், அதன் அமைப்பும் காற்றையும் தாக்குப் பிடித்து நிற்க உதவுகிறது.

எங்கெல்லாம் பனை மரங்கள் வளர்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் இருப்பதை உறுதிசெய்து கொள்ள முடியும். ஏனெனில் பனை மரத்தின் வேர்கள் மிக ஆழமாக ஊடுருவக் கூடியவை என்கிறார்.

பனை மரத்தின் உச்சிப் பகுதி, தண்டுப் பகுதி, வேர்ப் பகுதி ஆகியவற்றின் தனித்தன்மைகள், பேரழிவுகளைத் தாங்கும் வலிமையை அம்மரத்துக்கு அளிக்கின்றன என்கிறார் தாவரவியல் துணைத் தலைவர் டாக்டர் பி.ரவிச்சந்திரன்.

பனை மரத்தின் வேர்கள், நார்த்தன்மை கொண்டவை, அய்ந்தடி சுற்றளவில் படர்ந்திருக்கும் பனைமர வேர்கள், நிலத்துக்குள் 5 முதல் 10 அடி ஆழம் வரை ஊடுருவியிருக்கும். எனவே, பனை மரம் அத்தனை எளிதில் வேரோடு சாய்ந்துவிடாது

மேலும், பனை மரத்தின் வெளிப்புற அடுக்கு கடினத் தன்மை கொண்டதாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருப்பதால், எத்தனை வேகம் கொண்ட காற்றையும் தாங்கி நிற்கும். எளிதில் முறியாது என்கிறார் அவர்.

Share
 

முந்தைய மாத இதழ்

பெருமையுரு! பெருமையுரு! பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள் தவறே யின்றித் தாய்மொழியைத் தம்பி முதலில் கற்றிடுவாய்; அவமா னங்கள் இதிலில்லை; அயலார் மொழியும் இருக்கட... மேலும்
மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார் மலேசிய நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் மற்றும் பெரியார் ... மேலும்
டயோ – தியோ டயோ – தியோ கதை கேளு… கதை கேளு… விழியன் டயோவினை கூட்டில் காணவில்லை. தாரிகாவும் அவள் தம்பியும் வீடு முழுவதும் தேடிவிட்டார்கள். கண்டுபிடிக்க முடியவில்... மேலும்
காலப் பயணம் செய்யலாமா? கால இயந்திரம் சரவணா இராஜேந்திரன் காலப்பயணம் _ நாம் எல்லோரும் இந்த வார்த்தையைக் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  காலம், கடந்து பயணம் செய்யும... மேலும்
குதிக்கும் டால்பின் குதிக்கும் டால்பின் செய்து அசத்துவோம் வாசன் 1.     3X5 இன்ச் அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு இரண்டையும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும். 2.     பிறகு ப... மேலும்