Home டயோ – தியோ
செவ்வாய், 21 மே 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உலக நாடுகள் உலக நாடுகள் மெக்சிகோ (MEXICO) சந்தோஷ் மேலும்
கதை கேளு... கதை கேளு கதை கேளு... கதை கேளு பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா புப்பா புப்பான்னு ஒரு குட்டி கரடி இருந்துச்சாம். ஒரு நாள் அந்த கரடி பழுப்பு நிற மரத்து மேல இருந்து ‘ஓ’ன்... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் நேரம் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் நேரம். எறும்புக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் ராணி எறும்பு உயர்ந்த இடத்தில் இருந்து... மேலும்
கண்டோம் கருந்துளையை! கண்டோம் கருந்துளையை! அறிவியல் உலகின் மற்றொரு மைல்கள் எம் 87 பிரதீப்குமார் ஏப்ரல் 10, 2019 உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்களும், ஆர்வலர்களும் கண் உறங்காமல் ... மேலும்
குறிஞ்சி மலர் குறிஞ்சி மலர் குறிஞ்சி ---_ கடல் மட்டத்தில் இருந்து 600 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் மலைப் பிரதேசத்தில் வளரும் செடி. குறிஞ்சி மலர்கள் ஒன்பதாண்டுகளுக்கு ஒர... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு விடை: அடுத்த இதழில்... மேலும்
டயோ – தியோ
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கதை கேளு… கதை கேளு…

விழியன்

டயோவினை கூட்டில் காணவில்லை. தாரிகாவும் அவள் தம்பியும் வீடு முழுவதும் தேடிவிட்டார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. தியோ நல்லபடியாக அந்த பச்சைக் கூண்டிற்குள்ளே இருந்தது. சென்ற மாதம்தான் தாரிகாவின் தம்பி இரண்டு டயனோசர்களை கொண்டு வந்தான். எங்கே கிடைத்தது என சொல்லவே இல்லை. ஏற்கனவே அவர்கள் வீட்டில் பச்சை நிறத்தில் ஒரு கூண்டு இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வீட்டில் கிளி வளர்த்தபோது, தாரிகாவின் தாத்தாவே அதனைச் செய்திருந்தார். இரண்டு டயனோசர்களுக்கு அது போதுமான இடமாக இருந்தது. அவை குட்டியாகத்தான் இருந்தன. ஒரு குட்டிப் பூனை அளவிற்கு! டயனோசர்களுக்கு ஒரே ஓர் உணவு தான். கீரை மட்டுமே. விதவிதமான கீரை வகைகள் மட்டுமே டயனோசர்கள் உண்ண வேண்டும். வேறு உணவினை சுவைத்துவிட்டால் அவை பெரியதாக வளர்ந்துவிடும்.

கூண்டில் இருந்த தியோவிற்கு வெந்தயக்கீரையை வைத்துவிட்டு தாரிகாவும் அவள் தம்பியும் டயோவைத் தேட கிளம்பினார்கள். தோட்டத்திற்கு பின்னால் டயோவின் காலடித்தடங்கள் இருந்தன. அதனைப் பின் தொடர்ந்தார்கள். அது மெல்ல மெல்ல காட்டிற்குள் அழைத்துச்சென்றது. தாங்கள் காட்டிற்குள் வந்ததை அவர்கள் உணரவே இல்லை. இருட்டத்துவங்கி இருந்தது. அக்காவின் கையினை தம்பி பற்றிக்கொண்டான். டயனோசர்களை விற்ற மாரி அண்ணன் தெளிவாகச் சொன்னார் டயனோசர்களைத்  தவற விடாதீர்கள். மிக அரிதாக கிடைக்கின்றது. கீரையைத் தவிர எதுவும் தரவேண்டாம். தந்தால் அது காணாமல் போகும் இன்று வேறு எந்த உணவும் கொடுக்கவில்லை ஆனாலும் எப்படி காணாமல் போகும் என்றே இருவரும் பேசிக்கொண்டார்கள். இப்போது காலடி ஒரு பள்ளத்தில் முடிந்தது. டயோ இங்கே தான் தவறி விழுந்திருக்க வேண்டும். காலையில் வந்து காப்பாற்றிட வேண்டும் என நினைத்துக் கொண்டார்கள். ஆனால் காலை வரை அதற்கு ஆபத்து இருக்காதா? என்றும் யோசித்தார்கள்.

தாரிகாவும் தம்பியும் குனிந்து பள்ளத்தினைப் பார்த்தார்கள். டமால்... தொபக்கடீர்... இருவரும் பள்ளத்திற்குள் விழுந்துவிட்டார்கள். அது சின்ன பள்ளம் போல இல்லை. உருண்டுகொண்டே சென்றார்கள், சென்றார்கள், சென்றுகொண்டே இருந்தார்கள். கால்மணி நேரம் கழித்து ஒரு மரத்தின் மீது தொங்கிக்கொண்டு இருந்தார்கள். அது வேறு ஒரு உலகம் தான். வானத்தில் இருந்து பச்சை பச்சையாக தூறல் தூறியபடி இருந்தது. தூறல் கீழே விழுந்தது ஆனால் எங்கும் நீரைக் காணவில்லை. அவர்கள் தொங்கிய மரம் மிகப்பெரிய மரம்.தாரிகாவும் அவள் தம்பியும் நகர்வதைப் போல உணர்ந்தார்கள். ஆமாம் அந்த உலகத்தில் மரங்கள் நடந்தன. கொஞ்சம் பயமாக இருந்தாலும் இருவருக்கும் கொஞ்சம் குதூகலமாகவும் இருந்தது. அக்கா அங்கபாரு என்றான்.

தூரத்தில் நான்குமாடி கட்டடம் உயரத்திற்கு டயனோசர்கள் நூற்றுக்கணக்கில் நடந்து கொண்டிருந்தன. கழுத்தில் மஞ்சள் நிறத்திலும் சிவப்பு நிறத்திலும் வரிவரியாக இருந்தது. நீண்ட வால். அதிலும் வால் முழுக்க முட்கள். ஒருவேளை டயோவும் வளர்ந்தால் இருப்படித்தான் இருக்குமா? என நினைத்துக்கொண்டார்கள். அதே சமயம் டயோ அங்கே தென்பட்டது. அதனை ஒரு பெரிய டயனோசர் தலையில் நக்கி தன் அன்பினைத் தெரிவித்துக்கொண்டு இருந்தது. அந்த உலகின் நிலத்தில் முழுக்க முழுக்க கீரைகள் மட்டுமே இருந்தன. மணத்தக்காளியின் வாசனை எங்கும் வீசியது. எல்லா டயனோசர்களும் வினோதமான ஒலியை எழுப்பின. அது ஒரு மாதிரி வயிற்றை பிசையச் செய்தது. இப்போது இருவருக்கும் லேசான நடுக்கம் வரத்துவங்கி இருந்தது.

அந்த சமயம் அங்கே இரண்டு காகங்கள் வந்தன. அடேய் பசங்களா இங்க எங்க வந்தீங்க?  என்று கேட்டன. தாங்கள் கிச்சா பச்சா என்று அறிமுகம் செய்துகொண்டன. காகங்கள் ஏன் கறுப்பாச்சு என்ற கேள்விக்கு விடை தேடி இங்கே வந்தோம் எனவும் கூறின. வாங்க, உங்களை உங்க வீட்டில் விட்டுவிடுகின்றோம் எனச்சொல்லி அவர்கள் பதிலுக்கு கூட எதிர்பார்க்காமல் கிச்சா அக்காவையும், பச்சா தம்பியையும் தூக்கிக்கொண்டு பறந்தன.

காலையில் இருவரையும் அவர்கள் அம்மா எழுப்பினார்கள். பசங்களா... டயோவும் தியோவும் கத்திட்டு இருக்கு! போய் கீரை வையுங்க என்றார்கள். அக்கா நீ கனவில் வேற உலகத்துக்கு போனியா? எனக் கேட்க எண்ணினான். ஆனால் பதறி அடித்து எழுந்தார்கள். குடுகுடுவென கூண்டிற்கு அருகே சென்றார்கள். ஆமாம் டயோவும் தியோவும் உள்ளே இருந்தன. மணத்தக்காளி வாசனை வீசியது. டயோ அவர்கள் இருவரையும் பார்த்து கண்ணடித்தது. வாசலில் இரண்டு காகங்கள் கரைந்துகொண்டிருந்தன.

Share
 

முந்தைய மாத இதழ்

விடுமுறைக்கு எங்கே? விடுமுறைக்கு எங்கே? ஆண்டுத் தேர்வு முடிந்தது அடுத்து விடுமுறை வந்தது எங்கே செல்லப் போகிறாய் என்றே பெற்றோர் கேட்டனர்!   பசுமை போர்த்திய வயல்களும் பரந்த ஏ... மேலும்
சிறார் பொறுப்பு சிறார் பொறுப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் - ஏப்ரல் 29 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனிஇந்த நாட்டினை ஆளப்... மேலும்
பெரியாரும் பெண் விடுதலையும் பெரியாரும் பெண் விடுதலையும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ பெரியார் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றிருந்தார். பெரியார் மேடையில் அமர்ந்... மேலும்
செனகல்  செனகல் உலக நாடுகள் சந்தோஷ் அமைவிடமும் எல்லையும் கேப்வெர்டி கடற்கரை * இந்நாட்டின் தலைநகர் டக்கார் * செனகல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ... மேலும்
பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! உலகளவில் நடைபெறும் டேலன்ட் ஷோவில் தமிழகத்தின் லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவர் கலந்துகொண்டார். இவரின் தந்தை சதீஷ்வர்ஷன் இசையமைப்பாளர் ஆவார்.... மேலும்