Home காலப் பயணம் செய்யலாமா?
செவ்வாய், 21 மே 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உலக நாடுகள் உலக நாடுகள் மெக்சிகோ (MEXICO) சந்தோஷ் மேலும்
கதை கேளு... கதை கேளு கதை கேளு... கதை கேளு பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா புப்பா புப்பான்னு ஒரு குட்டி கரடி இருந்துச்சாம். ஒரு நாள் அந்த கரடி பழுப்பு நிற மரத்து மேல இருந்து ‘ஓ’ன்... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் நேரம் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் நேரம். எறும்புக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் ராணி எறும்பு உயர்ந்த இடத்தில் இருந்து... மேலும்
கண்டோம் கருந்துளையை! கண்டோம் கருந்துளையை! அறிவியல் உலகின் மற்றொரு மைல்கள் எம் 87 பிரதீப்குமார் ஏப்ரல் 10, 2019 உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்களும், ஆர்வலர்களும் கண் உறங்காமல் ... மேலும்
குறிஞ்சி மலர் குறிஞ்சி மலர் குறிஞ்சி ---_ கடல் மட்டத்தில் இருந்து 600 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் மலைப் பிரதேசத்தில் வளரும் செடி. குறிஞ்சி மலர்கள் ஒன்பதாண்டுகளுக்கு ஒர... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு விடை: அடுத்த இதழில்... மேலும்
காலப் பயணம் செய்யலாமா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

கால இயந்திரம்

சரவணா இராஜேந்திரன்

காலப்பயணம் _ நாம் எல்லோரும் இந்த வார்த்தையைக் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.  காலம், கடந்து பயணம் செய்யும் கற்பனைக் கதைகளைக் கேட்டிருப்போம். நாம் காலம் கடந்து பயணிக்கலாம். அதாவது இன்று நாம் 2019 பிப்ரவரியில் இருக்கிறோம் என்றால், நாம் 2030-வரை செல்ல அறிவியல் நமக்கு சில வழிமுறைகளைக் கூறியுள்ளது. ஆனால் இன்றைய அறிவியலில் அது நமக்குச் சாத்தியமில்லை. அப்படியே அறிவியலின்படி நாம் 2030க்குச் சென்று விட்டாலும் மீண்டும் 2019க்குத் -திரும்ப முடியாது.

அதாவது பின்னோக்கிச் செல்ல முடியாது. அறிவியலின்படி பின்னோக்கிச் செல்வது சாத்தியமில்லாத ஒன்று, அதனால் தான் தமிழில் இறந்த காலம் என்று அழகாகக் கூறிவிட்டார்கள். இறந்தவர்களை உயிர்ப்பிக்க இயலாது; அதே போல் தான் இறந்த காலத்தை மீண்டும் நாம் கொண்டுவர முடியாது.

ஆனால் நாம் இறந்த காலத்திற்கு எளிதில் பயணம் செய்யும் வாய்ப்பு உள்ளது. அது நாள்குறிப்புகள், நாளிதழ்கள், நூல்களின் வழியாக! இதில் நாள்குறிப்புகளும் நாளிதழ்களும் இறந்த காலத்திற்குப் பயணம் செய்ய அதிக வாய்ப்புகளை நமக்குத் தருகின்றன. நாளிதழ்களைப் பொறுத்தவரை, பொதுவெளியில் அன்று என்ன நடந்தது என்பதை அறிய ஒரு பின்னோக்கிய காலப்பயணம் செல்ல நமக்கு உதவுகிறது. அதேபோல், நம்முடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை அறிய நம்முடைய நாள்குறிப்புகள் உதவும். இன்றும் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை எப்படி அறிகிறோம் என்றால் அவர்களது நாள்குறிப்பின் மூலம்தான்.

தந்தை பெரியாரின் நாள்குறிப்புகள் மூலம் அந்த மாபெரும் தலைவரின் வாழ்க்கை எவ்வளவு போராட்டம் நிறைந்தது! அந்தப் போராட்டத்தை எப்படி எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டுள்ளார் என்பதை உலகம் அறிந்து வியக்கிறது.  நாள்குறிப்பு எழுதுவதை நாம் அன்றாடம் வாழ்க்கையில் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்னுடைய கல்லூரி இறுதியாண்டில் இருந்து நாள்குறிப்பு எழுதி வருகின்றேன். இதற்கு ஊக்கமாக இருந்தது என்னுடைய தாத்தாவின் நாள்குறிப்புகள்தான். என்னுடைய தாத்தா கொழும்பில் ஆங்கிலேய வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக இருந்தவர். சுதந்திரத்திற்குப் பின்பு சில காலம் இங்கிலாந்திற்குச் சென்று பிறகு ஊருக்கு வந்து தங்கிவிட்டார். தான் குமாஸ்தாவாக இருந்த காலத்தில் வழக்குகள் குறித்து நாள்குறிப்புகளை எழுதும் பழக்கம் அவரிடம் இருந்து வந்தது. அதைப் படித்த எனக்கும் தொடர்ந்து நாள்குறிப்பு எழுதும் பழக்கம் உருவானது. நாள்குறிப்பு நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ள கற்றுகொடுக்கும் ஆசிரியர் போன்றதாகும். நாள்தோறும் நாள்குறிப்பை நாம் எழுத பழகவேண்டும்.

Share
 

முந்தைய மாத இதழ்

விடுமுறைக்கு எங்கே? விடுமுறைக்கு எங்கே? ஆண்டுத் தேர்வு முடிந்தது அடுத்து விடுமுறை வந்தது எங்கே செல்லப் போகிறாய் என்றே பெற்றோர் கேட்டனர்!   பசுமை போர்த்திய வயல்களும் பரந்த ஏ... மேலும்
சிறார் பொறுப்பு சிறார் பொறுப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் - ஏப்ரல் 29 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனிஇந்த நாட்டினை ஆளப்... மேலும்
பெரியாரும் பெண் விடுதலையும் பெரியாரும் பெண் விடுதலையும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ பெரியார் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றிருந்தார். பெரியார் மேடையில் அமர்ந்... மேலும்
செனகல்  செனகல் உலக நாடுகள் சந்தோஷ் அமைவிடமும் எல்லையும் கேப்வெர்டி கடற்கரை * இந்நாட்டின் தலைநகர் டக்கார் * செனகல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ... மேலும்
பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! உலகளவில் நடைபெறும் டேலன்ட் ஷோவில் தமிழகத்தின் லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவர் கலந்துகொண்டார். இவரின் தந்தை சதீஷ்வர்ஷன் இசையமைப்பாளர் ஆவார்.... மேலும்