Home பிஞ்சு நூல் அறிமுகம்
செவ்வாய், 19 பிப்ரவரி 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி! வீட்டுக் குள்ளே நட்சத்திரம் கண் சிமிட்டுது - அது விண்வெளியில் இருந்து இங்கே எப்போ வந்தது?   பறந்து பறந்து அறைமுழுக்க வெளிச்சம் காட்டுத... மேலும்
சாதனை செய்வது கடினமா? சாதனை செய்வது கடினமா? கயிரா போஹ் கேட்கிறார் சரா நாம் ஊடகங்களில் சாதனையாளர்களைப் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். அப்போது பொதுவாக அனைவரது உள்ளத்திலும் ஓர... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி யாழுசிவா & ராஜ்சிவா மேலும்
இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு சிறுவர் கதை உமையவன் கருமலைக்காட்டுல மரங்கள் நிறைய இருக்கும். அரச மரம், ஆலமரம், பூவரச, வாதனா மரம், வேம்பு, இப்படி சொல்லிட்டே போகலாம் அவ்வ... மேலும்
’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா? ’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா? காரணமின்றி ஏற்காதீர்கள் சிகரம் தமிழ்ப் பாட நூல்களில் அந்தணர் என்று சில நேரங்களில் வருவதை விளக்குவதற்கு பூணூல் தரித்த பார்ப்பனர்களை சிலர் அ... மேலும்
பிஞ்சு நூல் அறிமுகம்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஒரு சமூகத்தின் மாற்றத்தை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக விளங்குவது குழந்தை வளர்ப்பு தான், குழந்தைகளை தர்க்க ரீதியான சிந்தனைகளோடும், ஆளுமைத் திறனோடும் வளர்ப்பதில் பெற்றோர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கு உதவும் வகையில் சிறுவர்ப் பாட்டுப் புதையல் என்ற நாற்பது பாடல்களைக் கொண்ட நூல் வெளிவந்துள்ளது. விவசாயத்தைக் காக்கும் மண்புழுக்களை அறிமுகம் செய்யும்போது,

உழாத நிலத்தினிலும்

உழுது பணி செய்திடுமே என்று பாராட்டி,

நிலத்தில் ரசாயனம் விழுந்ததே

எல்லாம் ஒன்றாய் கலந்ததே

மண்புழு வாழ்வை இழந்ததே! என்று நிலைமையைப் புரிய வைக்கிறார் கவிஞர் பிரசன்ன பாரதி.

இயற்கையின் தேவையையும் மக்களின் எதிர்பார்ப்பையும் எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு உவமைகளோடு கவிஞர் பாடுகிறார்.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் யாவரும் படிக்கும் விதமாக சமூக சிந்தனையோடு எழுதப்படுள்ள இப்புத்தகம் வாழ்வின் பல்வேறு கோணங்களில் கவனம் பாய்ச்சுகிறது. வாழ்க்கை ஒரு நாளாயினும், மேற்கின் தென்றல், தூரத்து கிராமம், ஒற்றையடிப்பாதை, தவளை, பாலைவனம், வாய்க்கால், ஆடுமேய்க்கும் சிறுவன் என தன் சிந்தனைகளை குழந்தைகள் படிக்கும் வண்ணம் எளிமையான சொற்களோடு கொண்டு வந்திருக்கிறார் பிரசன்ன பாரதி.

நூல்: சிறுவர் பாட்டுப் புதையல்

வெளியீடு: ரிலீப் பவுண்டேஷன்

ஆசிரியர்: சொ.பிரசன்ன பாரதி

- செ. அன்புச்செல்வி

Share
 

முந்தைய மாத இதழ்

மேழித் திருநாள்! மேழித் திருநாள்! மஞ்சுவும் பனியும் மூடும் மார்கழி பைய மறையும்! பஞ்சமும் பசியும் ஓடும் பாதையும் தையில் தெரியும்!   அஞ்சுதல் பகைமை போகி அனலிடை வெந்து ம... மேலும்
அழகிய பென்சில் கிரீடம் அழகிய பென்சில் கிரீடம் செய்து அசத்துவோம் வாசன் தேவையான பொருட்கள்: 1. பென்சில், 2. ஸ்கெட்ச் பென்(கருப்பு), 3.அளவுகோல், 4.கத்தரிக்கோல், 5.பசை, 6.தாள் வெட்டுக... மேலும்
பெரியாரின் பெருந்தன்மை பெரியாரின் பெருந்தன்மை 22 பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ விருதுநகரில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேசிக் கொண்டிருந்தார். யாரோ சில கயவர்களால் தூண... மேலும்
வலிமை வலிமை சின்னச் சின்னக் கதைகள் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன் கருவேல மரங்கள் நிறைந்த வேடந்தாங்கல் ஏரி. இது பறவைகளின் சரணாலயம். ஒவ்வ... மேலும்
மன்னிச்சூ… மன்னிச்சூ… டிசம்பர் 2018 பெரியார் பிஞ்சு இதழில் பக்கம் 5இல் உள்ள பெட்டிச் செய்தியில் 3ஆம் வரியில் தன்சிறந்த குழந்தைகளுடன் என்பது தலைசிறந்த குழந்தைகள்... மேலும்