Home உழைப்பு
சனி, 20 ஜூலை 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” ”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?” திடீரென்று ஒருநாள் இரவு என் மகன் உதயா ஆனந்த அதிர்ச்சி கொடுத்தான். “அப்பா, திருக்குறள் 40ஆவது அத்தியாயம் கல்வி! அதில் 7ஆவது குறளுக்கு ஒரு ... மேலும்
உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள் என்ன! கடல் மரணிக்கப் போகிறதா? என்ற கேள்வி எழலாம், ஆம்! இந்தப் பெருவெளி இயங்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அதில் உயிரோட்டம் உள்ளது என்று பொ... மேலும்
பயணம் - பாடம் பயணம் - பாடம் தேன் எடுப்போமா? அடலேறு கடந்த வாரம் தேனி மாவட்டம் சென்றிருந்தோம். இயற்கை எழில் சூழ்ந்த பகுதி. ஆனால் இப்போது நான் சொல்லப்போவது தேனியின் அழ... மேலும்
சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சாதனை : உசேன் போல்ட் ஆகணும்! சர்வேஷின் கனவு 79 மெடல்கள், 71 சான்றிதழ்கள், 4 பரிசுகள், 7 விருதுகள் என 82 மாரத்தான் போட்டிகளில் இதுவரை 1205 கிலோ மீட்டர்களைக் கடந்திருக்... மேலும்
கொம்பு முளைச்சிருக்கா? கொம்பு முளைச்சிருக்கா? அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை பிஞ்சண்ணா காலையிலிருந்தே இளவமுதனின் போக்கு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான் அவனது அண்னன் இளமாறன். பள்ளி தொடங்... மேலும்
உழைப்பு
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சின்னச் சின்னக் கதைகள்

கதை: மு,கலைவாணன்

ஓவியம் மு.க.பகலவன்

மலை உச்சியில் உயர்ந்த மரம். அதன் கிளையில் ஒரு தேன் கூடு. ஆயிரக்கணக்கான தேனீக்கள் அதை மொய்த்துக் கொண்டிருந்தன.

அந்த வழியே பறந்து வந்த ஒரு தேன் சிட்டு அந்த மரத்தின் கிளையில் அமர்ந்தது.

அருகில் பறந்த தேனீயை அழைத்தது.

இந்த அடையில் இத்தனை தேனீக்கள் தேன் கொண்டு வந்து சேர்க்கின்றனவே இதில் உன் பங்கு எங்கே இருக்கிறது? என்று கேட்டது.

பங்கா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது

எல்லோரும் சேர்ந்து எல்லோருக்காகவும் வாழ்கிறோம்.

யாரும் யாரையும் ஏமாற்றாமல் உழைக்கிறோம்.

யாரும் சும்மா இருப்பதில்லை.

எனக்கு, உனக்கு என்பதைவிட, நமக்கு என்பதுதானே நல்லது! என்றது தேனீ.

ஆனாலும், ஒரு சந்தேகம். நீங்கள் பாடுபட்டுச் சேர்க்கும் தேனை யாராவது எடுத்துப் போய் விடுகிறார்களே... அப்போது வருத்தமாக இல்லையா உங்களுக்கு? என்று கேட்டது தேன்சிட்டு.

நாங்கள் ஏன் வருந்த வேண்டும்?

ஆயிரம் தேனீக்களின் உழைப்பைச் சுரண்டித் தின்ன நினைப்பவர்கள்தான் வருந்த வேண்டும்.

ஆனாலும் நாங்கள் சேர்த்த தேன் எவ்வளவு காலமானாலும் கெட்டுப் போகாமல் இருந்து நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுவதை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

இந்தக் காடும் மரங்களும், பூக்களும் இருக்கும்வரை எங்களுக்குக் கவலையே இல்லை.

எனக்கு நிறைய வேலையிருக்கு... பேச நேரமில்லை நான் வருகிறேன் என்ற தன் கடமையை உணர்ந்து பறந்தது தேனீ.

தேனீயின் பேச்சு தேனாய் இனித்தது தேன் சிட்டுக்கு.

உழைப்பின் பெருமையை எடுத்துச் சொன்ன தேனியைப் புகழ்ந்து பாடியபடி பறந்தது தேன் சிட்டு.

"உழைக்கும் கரங்களுக்கே

இனிக்கும் வாழ்க்கை"

Share
 

முந்தைய மாத இதழ்

பழகு முகாம் பழகு முகாம் பழகுமுகாம் ஏன் குழந்தைகளின் குதூகலத் திருவிழாவாக இருக்கிறது? பழகுமுகாம் ஏன் குழந்தைகளை ஒரு கொண்டாட்ட மனநிலைக்குக் கொண்டு செல்கிறது? பழகுமு... மேலும்
தெரிந்து கொள்வோம் தெரிந்து கொள்வோம் உலக நாகரீகத்தின் மூத்த குடிகள் நாங்கள் என பெருமை கொள்வோம், அதற்கான அறிவியல் ஆதாரங்களும் வந்துவிட்டன. கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடிய... மேலும்
புதிய பாடம்! புதிய பாடம்! வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சுபயிலும் பள்ளி திறந்திடுச்சு பாடம் புதிதாய் ஆயிடுச்சு!புதிய ஆசான் வந்தாச்சு பு... மேலும்