Home ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?
வியாழன், 20 ஜூன் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காரணமின்றி ஏற்காதீர்கள் ! காரணமின்றி ஏற்காதீர்கள் ! சாப்பிடும் வாழையிலையின் அடிப்பாகம் வலப்பக்கம்  இருக்கவேண்டும்? பந்தியில் வாழையிலையை போடும்போது, சாப்பிடுகின்றவர்களுக்கு வலப்புறமாக வாழையி... மேலும்
புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சிறுமி அஷ்வதா, தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சில்ட்ர... மேலும்
திரைப் பார்வை திரைப் பார்வை பறக்கும் யானை ‘டம்போ’ ரித்திகா டிஸ்னி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் கற்பனை கதாபாத்திரமான ‘டம்போ’ என்ற பறக்கும் யானையைப் ப... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் முயல் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன்   புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்கா... மேலும்
வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க வாங்க விடுதலை தாத்தா! வாங்க, வாங்க! வாங்கி வந்தோம் ஒரு மாலை வாங்கிக் கொள்வீர் எங்கள் தாத்தா!   எண்பத்தைந்து வயதிலுமே எப்படி ... மேலும்
ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

வானொலி நிகழ்ச்சியிலும், தொலைக்-காட்சியிலும் குறிப்பாக இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்கள் இக்கேள்வியை நியாயமாகவும் எண்ணுகிறார்கள். இது அவர்களின் அறியாமையின் அடையாளமாகும்.

ஜாதியில்லை என்ற சொல்லிவிடுவதால் ஜாதி இல்லாமல் போகாது. ஜாதியை ஒழிப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போன்று, ஜாதியை ஜாதி அடிப்படையில் ஒழிப்பதே இம்முயற்சி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எந்த சமுதாயம் ஜாதியின் பெயரால் அடக்கப்பட்டதோ; உரிமை பறிக்கப்பட்டு, வாய்ப்புத் தடுக்கப்பட்டதோ அந்த சமுதாயத்திற்கு உரிமை தந்து உயர்த்த வேண்டுமானால் ஜாதி மூலமாகத்தானே அவர்களை அடையாளங்காண வேண்டும்.

எந்த ஜாதியின் பேரால் ஒடுக்கப்பட்டார்களோ அதே ஜாதியின் பேரால் அவர்களுக்கு வாய்ப்பளித்து உயர்த்த வேண்டியது கட்டாயம் ஆகும்.

நமது நிலமாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரே மாதிரியான உரத்தை நாம் போடுவதில்லை. ஒவ்வொரு நிலத்தையும் மண் பரிசோதனை செய்து அந்தந்த மண்ணின் வளப்பத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பவே உரம் இடவேண்டும்.

அதேபோல், ஜாதியால் அடையாளங் கண்டு அவர்களின் கீழ்நிலைக்கு ஏற்ப வாய்ப்பு அளிக்க ஜாதியைக் கேட்க வேண்டியுள்ளது.

வாழைப்பழம் எளிதில் செரிக்கும் என்பது சரியா?

வாழைப்பழம் வழவழ கொழ கொழ என்று இருப்பதால் அது எளிதில் செரித்துவிடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது தவறான கருத்தாகும்.

வாழைப்பழம் மென்மையாக இருந்தாலும், அது எளிதில் செரிப்பதில்லை. வாழைப்பழம் செரிப்பதற்கு 24 மணிநேரம் எடுத்துக் கொள்கிறது. எனவே, வாழைப்பழத்தை விரும்பும்போதெல்லாம் சாப்பிடும் வழக்கத்தைக் கைவிட வேண்டும். வாழைப்பழத்தை காலை உணவிற்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து உண்பது நல்லது. வாழைப்பழத்தை அளவோடும் உண்ண வேண்டும்.

வெப்ப நோய் கண்டவர்களுக்குப் (அம்மை வார்த்தவர்களுக்கு) பேயம் பழம் சிறந்த உணவு. அதிகம் கொடுக்க வேண்டும். மலைப்பழம் உடலுக்கு வலு சேர்க்கக் கூடியது. மலச்சிக்கல் வராது தடுக்கும்.

நரிக்கொம்பு வைத்திருந்தால் நல்லது நடக்குமா?

மூடநம்பிக்கையின் உச்சகட்டம் இது. உண்மையில் நரிக்குக் கொம்பே கிடையாது. நரியின் ரெண்டு காதுகளுக்கு நடுவில் கொம்பு மாதிரி ஒரு சிறிய மேடும், அதில் சிறிது முடியும் இருக்கும். அதைத்தான் சிலர் கொம்பு என்று சொல்லி விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள். இதனால் நூற்றுக்கணக்கான நரிகள் கொல்லப்பட்டு, இப்போது நரி இனமே அரிய இனமாக மாறிவிட்டது. நரி பருவகாலத்திற்கு ஏற்ற மாதிரி என்ன உணவு கிடைக்கிறதோ அவற்றை உண்ணும் பழக்கம் கொண்டது. இதை மனிதர்களும் பின்பற்றினால் உணவு மலிவாகவும் கிடைக்கும் உடலுக்கும் நன்மை.

குள்ளநரி என்பது சாதாரண நரியைக் காட்டிலும் சற்றுக் குள்ளமாக இருக்கும். மேலும், யானைவால் மயிரை மோதிரத்தில் சேர்த்துப் போட்டால் நல்லது என்பதும் மூடநம்பிக்கையே. அதனால் எந்தப் பயனும் வராது. இந்த மூடநம்பிக்கையால் யானை மயிர் பிடுங்கப்பட்டு யானைக்குத்தான் கேடு வருகிறது.

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பதாகப் பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது முழுவதும் தவறான கருத்தாகும்.

சர்க்கரை ஒவ்வொரு மனித-னுக்கும் கட்டாயத் தேவையாகும். எதிலும் ஓர் அளவு வேண்டும் என்பதுபோல் சர்க்கரை சாப்பிடுவதிலும் அளவு வேண்டும். மற்றபடி சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு.

நமது உடலில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. அதிலுள்ள பீட்டா செல்கள் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கின்றன.

இந்த ஹார்மோன்தான் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை (சர்க்கரையை) சக்தியாக (ஆற்றலாக) மாற்றுகிறது.

இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சக்தியாக மாற்றப்படாமையால், அதிகரிக்கும் அளவே சர்க்கரை நோய் என்று அழைக்கப்படுகிறது-. இன்சுலின் சுரக்கும் கணையம் நாளமில்லா சுரப்பியாகும்.

கணையம் பழுதுறாமல் வலுவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அது ஆற்றலாக மாற்றி விடும். அதனால், இரத்தத்தில் சர்க்கரை சேராது.

கணையம் பழுதுறாமல் இருக்க வேப்பிலை, பாகற்காய், சிறுகுறிஞ்சான் கீரைகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

எனவே, சர்க்கரை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வரும் என்பது தவறு. கணையம் பழுதுற்றால்தான் சர்க்கரை நோய் வரும். உடற்பயிற்சியும், மனஇறுக்கம் இல்லாமல் இருப்பதும் கணையத்தைக் காப்பாற்றும்.

ஆக, சர்க்கரை நோயாளிகள்தான் சர்க்கரை சேர்க்கக் கூடாதே தவிர, நலமாகவுள்ளவர்கள் சேர்க்கலாம். 40 வயதுக்கு மேல் சர்க்கரை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

இளம் வயதில் அளவிற்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்தால் போதும். மற்றபடி இனிப்பைக் கண்டு பயப்படத் தேவையில்லை. செயற்கை இனிப்புகளே கேடு தரும். சீனியைவிட வெல்லமும், பனைவெல்லமும் சிறந்தது.

Share
 

முந்தைய மாத இதழ்

உழைத்து உண்க ! உழைத்து உண்க ! வள்ளிப் பாட்டிக் கடையிலே வாங்கி வந்த வடையுடன் துள்ளிப் பறந்த காகமும் சோலை மரத்தில் அமர்ந்தது!   வந்த மர்ந்த காகத்தை வஞ்ச நரியும் கண்... மேலும்
உயிர்நேயச் சிறுவர் டெடிக்! உயிர்நேயச் சிறுவர் டெடிக்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரமைச் சேர்ந்த 6 வயது சிறுவர் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின... மேலும்
பெற்றோர் கவனத்திற்கு... பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்! 1.  வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது... மேலும்
உலகம் நம் குடும்பம் உலகம் நம் குடும்பம் கறுப்பு சிவப்பு வெளுப்பென்று காசி னிக்குள் பலநிறத்தார்; உறுப்பின் நிறத்தைப் பார்க்காமல் உள்ளம் மட்டும் பார்த்திடுவாய்!   தட்ப வெப்ப ந... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தீப்பெட்டிப் படகு வாசன் தேவையான பொருட்கள்: ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்ற... மேலும்
பிஞ்சு வாசகர் கடிதம் பிஞ்சு வாசகர் கடிதம் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதில் சிரமம் இருக்கும். அதை சுவாரசியமாகக் கொண்டு செல்ல நான் சிரமப்படுவேன்... இதை எனக்கு எளிதாக ஆக்கியது பெரியா... மேலும்