Home வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!!
வியாழன், 20 ஜூன் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காரணமின்றி ஏற்காதீர்கள் ! காரணமின்றி ஏற்காதீர்கள் ! சாப்பிடும் வாழையிலையின் அடிப்பாகம் வலப்பக்கம்  இருக்கவேண்டும்? பந்தியில் வாழையிலையை போடும்போது, சாப்பிடுகின்றவர்களுக்கு வலப்புறமாக வாழையி... மேலும்
புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சிறுமி அஷ்வதா, தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சில்ட்ர... மேலும்
திரைப் பார்வை திரைப் பார்வை பறக்கும் யானை ‘டம்போ’ ரித்திகா டிஸ்னி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் கற்பனை கதாபாத்திரமான ‘டம்போ’ என்ற பறக்கும் யானையைப் ப... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் முயல் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன்   புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்கா... மேலும்
வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க வாங்க விடுதலை தாத்தா! வாங்க, வாங்க! வாங்கி வந்தோம் ஒரு மாலை வாங்கிக் கொள்வீர் எங்கள் தாத்தா!   எண்பத்தைந்து வயதிலுமே எப்படி ... மேலும்
வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!!
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

சா.மூ.அபிநயா

ஓர் ஊரில் ஒரு சிட்டுக்குருவி இருந்தது.  கண்டங்கள் பல தாண்டிப் பறக்க வேண்டும் என்று அதற்கு ஆசை. புது இடங்களுக்குச் செல்வது, புதுப் பறவைகளை சந்திப்பது என்றால் அதற்குக் கொள்ளை மகிழ்ச்சி. அப்படிப்பட்ட சிட்டுக் குருவிக்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைத்தால்...? அந்தச் சிட்டுக்குருவி யார் தெரியுமா? நான்தான். நானும் என் நண்பர்களுடன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்திற்கு சென்றேன். அட ஆமாங்க! பாம்பனோ பீச் உயர்நிலை பள்ளி (Pompano Beach High School) நடத்திய 4ஆவது பன்னாட்டு உச்சி மாநாட்டில் இந்தியா சார்பாக பங்கேற்க, நான் உள்பட எட்டு மாணவர்கள் சென்றிருந்தோம்.

பயணம் என்றாலே ஜாலி. விமானப் பயணம் என்றால் கேட்கவா வேண்டும்? மும்பை விமான நிலையம் முழுவதும் மயில் தோகை மாதிரி வண்ணமயமா இருந்துச்சு.

மும்பையிலிருந்து ஒரே தாவல்! நேரா நியூயார்க்! இடைநில்லாப் பேருந்துன்னு நம்ம ஊர்ல போற மாதிரி, உலகின் மறு பகுதிக்கு இடை நில்லாமல் நேராகச்சென்று இறக்கியது விமானம்!

நியூயார்க் நகரில் 6 மணி நேரம் காத்திருந்தோம். ஆளைப் பார்த்து எடைபோடக் கூடாது மாதிரி, சூரியன் பார்த்தும் எடை போடக் கூடாது போல! வெளியே 10 செல்சியஸ் வெப்பநிலை.  (அது வெப்பநிலையில்ல... குளிர்நிலை) ஆனால், சூரியன் எங்களுக்கு ஹாய் சொல்லிட்டு இருந்துச்சு. சரின்னு விமான நிலைய முனையம் (Terminal) மாறும்போது கையுறை (Mittens) இல்லாம போய்ட்டோம். சரியான குளிர். பேசினால் புகை புகையாக வருது. ஓட்டமும் நடையுமாக அடுத்த முனையத்திற்கு போய்ச் சேர்ந்தோம். அங்கே இருந்தவரை கேட்டபோதுதான் தெரிந்தது. நாங்கள் சென்றது ஆண்டின் மிகக் குளிரான வாரம் என்று! விமானத்தில் பயணிக்கும்போது காதை மூடிக்கொள்ள பஞ்சும் சூயிங்கமும் (Chewing gum) எடுத்துக்கொள்ள வேண்டும். தரையிறங்கும்போது வரும் காதுவலியை இது போக்கும். எனக்குப் பயன்பட்டது.

ஃபோர்ட் லார்டல் (Fort Lauradele) போய்ச் சேர்ந்தவுடன் எங்களுக்கு விருந்தளிக்கும் குடும்பம் (Host Family) எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. இந்த மாநாட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று. விருந்தளிக்கும் குடும்ப முறை. ஏதேனும் விடுதியில் தங்கி இருந்தால், மற்ற மாணவர்களுடன் பழகி இருந்திருப்போம். ஆனால், ஒரு குடும்பத்துடன் இருந்தபோது அவர்களின் கலாச்சாரம் மிக எளிமையாகப் புரிந்தது. இன்னும் சொல்லப்போனால், விருந்தளிக்கும் குடும்பம் போய் எங்கள் குடும்பம் என்னும் உணர்வுக்கு ஆளாகிவிட்டோம். என் பயண நினைவுகளை உங்களோடு பகிர விரும்புகிறேன்.

(பயணிப்பேன்)

Share
 

முந்தைய மாத இதழ்

உழைத்து உண்க ! உழைத்து உண்க ! வள்ளிப் பாட்டிக் கடையிலே வாங்கி வந்த வடையுடன் துள்ளிப் பறந்த காகமும் சோலை மரத்தில் அமர்ந்தது!   வந்த மர்ந்த காகத்தை வஞ்ச நரியும் கண்... மேலும்
உயிர்நேயச் சிறுவர் டெடிக்! உயிர்நேயச் சிறுவர் டெடிக்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரமைச் சேர்ந்த 6 வயது சிறுவர் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின... மேலும்
பெற்றோர் கவனத்திற்கு... பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்! 1.  வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது... மேலும்
உலகம் நம் குடும்பம் உலகம் நம் குடும்பம் கறுப்பு சிவப்பு வெளுப்பென்று காசி னிக்குள் பலநிறத்தார்; உறுப்பின் நிறத்தைப் பார்க்காமல் உள்ளம் மட்டும் பார்த்திடுவாய்!   தட்ப வெப்ப ந... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தீப்பெட்டிப் படகு வாசன் தேவையான பொருட்கள்: ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்ற... மேலும்
பிஞ்சு வாசகர் கடிதம் பிஞ்சு வாசகர் கடிதம் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதில் சிரமம் இருக்கும். அதை சுவாரசியமாகக் கொண்டு செல்ல நான் சிரமப்படுவேன்... இதை எனக்கு எளிதாக ஆக்கியது பெரியா... மேலும்