Home பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிளாஸ்டிக் தேவையா?
வியாழன், 20 ஜூன் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காரணமின்றி ஏற்காதீர்கள் ! காரணமின்றி ஏற்காதீர்கள் ! சாப்பிடும் வாழையிலையின் அடிப்பாகம் வலப்பக்கம்  இருக்கவேண்டும்? பந்தியில் வாழையிலையை போடும்போது, சாப்பிடுகின்றவர்களுக்கு வலப்புறமாக வாழையி... மேலும்
புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சிறுமி அஷ்வதா, தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சில்ட்ர... மேலும்
திரைப் பார்வை திரைப் பார்வை பறக்கும் யானை ‘டம்போ’ ரித்திகா டிஸ்னி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் கற்பனை கதாபாத்திரமான ‘டம்போ’ என்ற பறக்கும் யானையைப் ப... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் முயல் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன்   புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்கா... மேலும்
வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க வாங்க விடுதலை தாத்தா! வாங்க, வாங்க! வாங்கி வந்தோம் ஒரு மாலை வாங்கிக் கொள்வீர் எங்கள் தாத்தா!   எண்பத்தைந்து வயதிலுமே எப்படி ... மேலும்
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு பிளாஸ்டிக் தேவையா?
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

காரணமின்றி ஏற்காதீர்கள்

சிகரம்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தற்போது அதிகமாகச் செய்யப்பட்டு வருகிறது. அவசியத்தோடு பழுதடைந்த உறுப்புகளைச் சீர் செய்ய கொண்டு வரப்பட்ட இம்முறை, தற்போது அழகுபடுத்திக் கொள்ளவும் பயன்படுகிறது.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை என்றதும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட உறுப்புகளை உடலில் பொருத்துவார்கள் என்கின்ற எண்ணம் (கற்பனை) பலருக்கும் இருக்கிறது.

அப்படி எண்ணுவது தவறு. இந்த அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் சம்பந்தப்படுவதே இல்லை. இந்த அறுவை சிகிச்சையில் உடலில் ஓரிடத்திலிருந்து சதை வெட்டியெடுக்கப்பட்டு, தேவையான பகுதியில் ஒட்டப்படுகின்றது. இதில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒருவருக்கு உதடு பொக்கையாக இருந்தால் தொடைப் பகுதியில் இருந்து சதையை எடுத்து, அந்தப் பொக்கையை அடைப்பார்கள். மூக்கு சப்பையாக இருந்தால் அதை அழகுபடுத்துவார்கள்.

இவ்வாறு எந்த உறுப்பு சரி செய்யப்பட்டாலும் உடலில் வேறு ஒரு பகுதியிலிருந்து சதை எடுக்கப்பட்டே பொருத்தப்படுகிறது.

அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் பெயர் 1839-லேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு 70 ஆண்டுகள் கழித்து 1909-ஆம் ஆண்டில் தான் நாம் இன்று நாள்தோறும் பயன்படுத்தும் பொருளில் (meaning) பிளாஸ்டிக் என்ற சொல் லியோ பேக்கிலாண்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து உருவாக்கப்படும் இன்றைய பயன்பாட்டுப் பொருளான நெகிழியைக் குறிக்கும் வகையில் பிளாஸ்டிக் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது கடந்த நூற்றாண்டில் தான். ஆனால், செதுக்குதல், சீர்செய்தல், வடிவமைத்தல் என்னும் பொருளில் 1598-ஆம் ஆண்டு முதலே வழக்கில் உள்ளது. இச் சொல்லின் வேர்ச் சொல் கிரேக்கத்தில் உள்ளது. அது 2000 ஆண்டு காலத்திற்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சதை மாற்றி வடிவம் தரும் அறுவை சிகிச்சைக்கும், இன்று பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் (நெகிழி)கும் தொடர்பில்லை. ஒரே சொல் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளுடன் பயன்படுத்தப்படுவது அனைத்து மொழிகளிலும் உள்ள ஒரு நடைமுறை தான். அப்படித்தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்பதில் வரும் பிளாஸ்டிக் - பெயர் உரிச் சொல்லாகவும் (adjective), பொருட்கள் தயாரிக்க நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் (நெகிழி) -_ பெயர்ச் சொல்லாகவும் (noun) வெவ்வேறு பொருள் தருகின்றன.

ஊசி போட்டால்தான் பயன் அதிகமா?

மக்களிடையே இப்படியொரு நம்பிக்கை ஆழமாகக் காணப்படுகிறது. ஆனால் இது தவறான நம்பிக்கையாகும்.

மருத்துவரிடம் சிகிச்சை பெறச் செல்லும்போது ஊசி போடுங்கள் என்று வற்புறுத்தும் நோயாளிகளைப் பார்க்கலாம்.

நோயாளிகளின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு, போலி மருத்துவர்களும் தேவை-யில்லாமலே ஊசி போடுவதுண்டு.  அதுவும் கிராமப்புறங்களில், அங்கீகாரம் பெறாத மருத்துவர்கள் எதற்கெடுத்தாலும் ஊசி போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் நோக்கம் காசு பறிப்பதாகும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் தேவையான மருந்தை தேவையான வழியில் நாங்களே தருவோம் என்று கண்டிப்பு காட்டி வருவார்கள்.

வாயினால் மருந்து எடுத்துக் கொள்ள முடியாத சூழலில் மட்டுமே ஊசியைப் பயன்படுத்த வேண்டும். சில மருந்துகளை ஊசியின் மூலம் மட்டுமே கொடுக்க வேண்டும். மற்றபடி ஊசியின் மூலம் மருந்து செலுத்தினாலும், வாய்வழியே மாத்திரை சாப்பிட்டாலும் பயன் ஒன்றுதான் _  இன்சுலின் போன்ற சில ஊசிகளைத் தவிர!. (மருந்துகளின் பலன் ஒன்றுதானே தவிர, அவை உட்செலுத்தப்படும் வழிகள் வேறு என்பதுதான். ரத்தத்தில் செலுத்தப்படும் ஊசிகளும், சதையில் போடப்படும் ஊசிகளும், வாய்வழியாக உட்கொள்ளப்படும் மருந்துகளும் அவற்றின் தன்மைக்கேற்ப தயாரிக்கப்படும். அவற்றை மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடாது).

எய்ட்ஸ் விரைவாய் பரவி வரும் இக்காலத்தில்,  ஊசி வழியேயும் எய்ட்ஸ் பரவ வாய்ப்பிருப்பதால் ஊசியைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முடிந்த மட்டும் ஊசி போடுவதைத் தவிர்த்தல் வேண்டும்.

ஊசி போட்டுக் கொள்ளும் அவசியம் வரும்போது மட்டும், ஒருமுறை மட்டுமே உபயோகிக்கும் ஊசியைப் பயன்படுத்த வேண்டும். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவர் பயன்படுத்தக் கூடாது.

ஓரே குடும்பத்தவராயினும் தனித் தனியே ஊசியைப் பயன்படுத்த வேண்டும். காரணம் எய்ட்ஸ் நோய் யாரிடம் உள்ளது, யாரிடம் இல்லையென்று வெளித் தோற்றத்தால் மட்டும் கண்டறிய முடியாது. ஒரே குடும்பத்தில் உள்ளவராயினும் அவரவர் நடத்தையும், ஒழுங்கும் வேறு வேறானவை அல்லவா?

வைரத்தை வைரத்தால்தான் அறுக்க முடியுமா?

அது பழமொழிக்காக சொல்லப்பட்டது. இப்போதெல்லாம் வைரங்களை அறுக்கவும், வைரத்தில் ஒரு ரோமத்தின் குறுக்களவேயுள்ள மிக நுண்ணிய துளைகளைப் போடவும் எலெக்ட்ரான் கதிர் (ELECTRON RAY) பயன்படுகிறது. DIAMOND SAW எனப்படும் ஒரு வகை ரம்பத்தைப் பயன்படுத்தி வைரங்களை சிறுசிறு துண்டுகளாக வெட்டுவதும் உண்டு. அதேபோல மற்ற நவரத்தினக் கற்களை துண்டுபோட DIAMOND CUTTER என்று கருவியும் பயன்பாட்டில் உள்ளது.

Share
 

முந்தைய மாத இதழ்

உழைத்து உண்க ! உழைத்து உண்க ! வள்ளிப் பாட்டிக் கடையிலே வாங்கி வந்த வடையுடன் துள்ளிப் பறந்த காகமும் சோலை மரத்தில் அமர்ந்தது!   வந்த மர்ந்த காகத்தை வஞ்ச நரியும் கண்... மேலும்
உயிர்நேயச் சிறுவர் டெடிக்! உயிர்நேயச் சிறுவர் டெடிக்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரமைச் சேர்ந்த 6 வயது சிறுவர் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின... மேலும்
பெற்றோர் கவனத்திற்கு... பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்! 1.  வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது... மேலும்
உலகம் நம் குடும்பம் உலகம் நம் குடும்பம் கறுப்பு சிவப்பு வெளுப்பென்று காசி னிக்குள் பலநிறத்தார்; உறுப்பின் நிறத்தைப் பார்க்காமல் உள்ளம் மட்டும் பார்த்திடுவாய்!   தட்ப வெப்ப ந... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தீப்பெட்டிப் படகு வாசன் தேவையான பொருட்கள்: ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்ற... மேலும்
பிஞ்சு வாசகர் கடிதம் பிஞ்சு வாசகர் கடிதம் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதில் சிரமம் இருக்கும். அதை சுவாரசியமாகக் கொண்டு செல்ல நான் சிரமப்படுவேன்... இதை எனக்கு எளிதாக ஆக்கியது பெரியா... மேலும்