Home கொஞ்சம் கற்போம்…
சனி, 20 ஏப்ரல் 2019
Banner

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
திசை அறிதல் திசை அறிதல் கவிஞர் தங்கராஜா, தென்காசி கிழக்கே பார் கிழக்கே பார் காலைச் சூரியன் தெரிவதைப் பார் வங்கக் கடலின் அழகைப் பார்!   மேற்கே பார் மேற்கே பார... மேலும்
டாக்டர் அம்பேத் பிறந்தநாள் ஏப்ரல் – 14 டாக்டர் அம்பேத் பிறந்தநாள் ஏப்ரல் – 14 டாக்டர் அம்பேத்கரின் புத்தகப் பிரியம் வை.கலையரசன் மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
இசைப்போம் வாரீர்! இசைப்போம் வாரீர்! சங்கே முழங்கு இசை குறிப்பு: விஜய் பிரபு மேலும்
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! எண்ணிப்பார் ஏழு வேறுபாடு! விடைகள்: 1. மேகம், 2. படகு, 3. பந்து, 4. வீடு, 5. கலங்கரை விளக்கம், 6. குடை, 7. சிறுவனின் கை, 8. புத்தகப் பை புழுவாயினும் பழம் தின்னட்டும... மேலும்
கொஞ்சம் கற்போம்…
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”

கே.பாண்டுரங்கன்

'இனிப்பு'  என்றாலே பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோருக்கும் பிடிக்கும். பிடிக்காது என்று சொல்பவர்களே இல்லை.

ஆங்கிலம் கற்றுக் கொள்ளுதல் என்பது பலருக்கு கசக்கக் கூடிய ஒன்று. நிறைய பேருக்கு ஆங்கிலம் படிக்க மிகுந்த ஆர்வம் இருக்கும்... ஆனால், அதைக் கற்றுக் கொள்ளும் வழி மட்டும் தெரியாது.

ஆங்கிலம் என்பது இஞ்சி, ஏலக்காய் போன்றது. தமிழ் என்பது கரும்பு போன்றது. ஏலக்காயும், இஞ்சியும் ஆரோக்கியம்தான். நல்லதுதான். அதுபோல் கரும்பும் ஆரோக்கியமானதுதான். நல்லதுதான். கரும்பை வயலிலிருந்து அறுத்து எடுத்து, சுத்தம் செய்து, சல்லைகளை நீக்கி, சிறிதாக வெட்டி, பல்லால் மென்று நாவால் சுவைத்துதான் சுவையை அறிந்து கொள்கிறோம்.

உடல் உற்சாகம் அடைவதை, பலம் அடைவதை, சாறாகப் பருகியும் உணரலாம்... அறியலாம்.

கரும்பை உணர்வதுபோல் தமிழையும் உணர வேண்டும் _ அறிய வேண்டும். தமிழை உணர்ந்தால்தான், அறிந்தால்தான் ஆங்கிலத்தையும் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

வாங்க... தமிழ் கலந்து ஆங்கிலம் அருந்துவோம்.

அதற்கு முன் ஒன்று!

உடலுக்கு பல்வேறு உறுப்புகள் இருப்பதுபோல், ஓர் ஆங்கில சொற்றொடரையோ ஒரு தமிழ் சொற்றொடரையோ எழுதுவதற்கு பல்வேறு சொல் உறுப்புகள் (Organs) தேவைப்படுகின்றன.  அவற்றை ஒவ்வொன்றாகக் கற்றுக் கொள்வோம்.

பயப்படாதீங்க... எளிதுதான்!

Articles - சுட்டிடைச் சொல்

ஆர்டிகிள் என்பது சுட்டிடைச்சொல் அதாவது சுட்டுஇடைச்சொல் என்றால் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்... புரிகிறதா?

'A' என்றால் ஒரு

'An' என்றால் ஓர்

'The' என்றால் அந்த, இந்த

மாற்றிச் சொல்வதானால்....

ஒரு = A

ஓர் = An

இந்த, அந்த = The

இவை ஆங்கிலத்தில் ஆர்ட்டிகில்ஸ் (Articles) என்று அழைக்கப்படும்?

'An' - 'ஓர்' இவை எங்கு, எப்படி வரும்?

A, E, I, O, U ஆகியவை Vowel மீறீகள் (உயிரெழுத்துகள்) ஆகும்.

An என்பது உயிரெழுத்து ஒலி ஒலிக்கும் இடங்களுக்கு முன்தான் வரும். அதாவது vowel- களுக்கு முன்தான் வரும். அதாவது,

An Order = ஓர் ஆணை

An Aeroplane = ஓர் ஆகாய விமானம்

An Idli = ஓர் இட்லி

An Orange = ஓர் ஆரஞ்சு

An Umbrella = ஓர் அழகிய குடை

'A' - ஒரு எப்படி, எங்கு வரும்?

அதாவது, தமிழில் ஒரு எப்படி, எங்கே வரும்?

ஒரு என்பது மெய் எழுத்துக்களின் முன்புதான் வரும்.

அதாவது, 'A' என்பது consonant முன்பு  வரும் சுட்டிடைச்சொல்.

‘A’ Boy = ஒரு பையன்

‘A’ Girl = ஒரு பெண்

‘A’ Baby = ஒரு குழந்தை

‘A’ Tree = ஒரு மரம்

மேற்கண்டவை சின்ன எடுத்துக்காட்டுகள்தான்...

தமிழில் ஓர் என்பது, அ, ஆ, இ போன்றவை உயிரெழுத்து ஒலிகளுக்கு முன்தான் வரும். உயிர்மெய் எழுத்துகளுக்கு முன் ஒரு என்ற சொல்லைப் பயன்படுத்துவோம். இப்போது புரிகிறதா A-வை ஒரு என்றும். An-னை ஓர் என்றும் ஏன் சொல்கிறோம் என்று!

‘The’ - அந்த/ இந்த எப்படி, எங்கே வரும்?

அதாவது, அந்த, இந்த என்பது ஏற்கனவே சுட்டப்பட்ட பெயர்ச் சொல்லை மீண்டும் குறிப்பிடும்போது வரும்.

அப்படித்தான் The என்ற சுட்டிடைச்சொல்லும்!

எ.கா: A Lion lived in a forest.The Lion roared loudly.

ஒரு சிங்கம் ஒரு காட்டில் வசித்தது. அந்த சிங்கம் சத்தமாக கர்ச்சித்தது.

இப்போது கியும், The யும் எப்படி பயன்படுத்தப்-படுகிறது என்பது புரிகிறதல்லவா?

அதேபோல, குறிப்பிட்ட ஒன்றைச் சுட்டாமல் பொதுப்படையாக ஒரு பெயரையோ, இடத்தையோ, பொருளையோ சுட்டுவதற்கும், இயற்கையாக உள்ள அஃறிணைப் பொருட்களுக்கும் முன்பு 'ஜிலீமீ'  வரும். எ.கா: மலை, சூரியன், நிலவு, காடு

எ.கா: ‘The’ sun, ‘The’ forest, ‘The’ mountain, 'The' Lion

அந்த  சூரியன்,  இந்த  காடு, இந்த  மலை போன்றவை.

அதேபோல,

அந்த, இந்த  என்பது உச்சபட்சமாக-சொல்லப்படும் வார்த்தைகளுக்கு முன்பும் வரும்.

எ.கா: ‘The ‘ most important matter, ‘The’ fastest horse, ‘The’ greatest man in the world

அந்த முக்கியமான  விபரம், அந்த வேகமான குதிரை, உலகின் மிகச்சிறந்த இந்த மனிதன்

வினைச் சொற்கள் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

 


 

Share
 

முந்தைய மாத இதழ்

சின்னச் சிறகு சிட்டுக் குருவி! சின்னச் சிறகு சிட்டுக் குருவி! மு.நடராசன், புதுச்சேரி சின்னச்சிறகை விரித்து நன்றாய் சிட்டுக் குருவி பறக்குது! கீசுக் கீச்செனத் சத்தமிட்டே கிழக்கு நோக்கிச் செல்லுது! ... மேலும்
ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா? ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா? காரணமின்றி ஏற்காதீர்கள் சிகரம் வானொலி நிகழ்ச்சியிலும், தொலைக்-காட்சியிலும் குறிப்பாக இளைஞர்கள் இக்கேள்வியை அடிக்கடி கேட்கிறார்கள். அவர்கள்... மேலும்
வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!! வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!! சா.மூ.அபிநயா ஓர் ஊரில் ஒரு சிட்டுக்குருவி இருந்தது.  கண்டங்கள் பல தாண்டிப் பறக்க வேண்டும் என்று அதற்கு ஆசை. புது இடங்களுக்குச் செல்வது, ப... மேலும்
அய்ன்ஸ்ரூலி அய்ன்ஸ்ரூலி அறிவியல் படக்கதை யாழு சிவா & ராஜ் சிவா மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் பெரியார் பிஞ்சு இதழைப் படிப்பது போல, வித்தியாசமான கோணங்களில்,... மேலும்