Home விண்ணை நோக்கி - ’மணியம்மையார் சாட்’
ஞாயிறு, 16 ஜூன் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
காரணமின்றி ஏற்காதீர்கள் ! காரணமின்றி ஏற்காதீர்கள் ! சாப்பிடும் வாழையிலையின் அடிப்பாகம் வலப்பக்கம்  இருக்கவேண்டும்? பந்தியில் வாழையிலையை போடும்போது, சாப்பிடுகின்றவர்களுக்கு வலப்புறமாக வாழையி... மேலும்
புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் சிறுமி அஷ்வதா, தனியார் பள்ளியொன்றில் ஆறாம் வகுப்புப் படிக்கிறார். அய்ந்தாம் வகுப்புப் படிக்கும்போதே சில்ட்ர... மேலும்
திரைப் பார்வை திரைப் பார்வை பறக்கும் யானை ‘டம்போ’ ரித்திகா டிஸ்னி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாத கோடை விடுமுறையில் கற்பனை கதாபாத்திரமான ‘டம்போ’ என்ற பறக்கும் யானையைப் ப... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் முயல் கதை: மு.கலைவாணன் ஓவியம்: மு.க.பகலவன்   புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன. அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்கா... மேலும்
வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க ‘விடுதலை’ தாத்தா! வாங்க வாங்க விடுதலை தாத்தா! வாங்க, வாங்க! வாங்கி வந்தோம் ஒரு மாலை வாங்கிக் கொள்வீர் எங்கள் தாத்தா!   எண்பத்தைந்து வயதிலுமே எப்படி ... மேலும்
விண்ணை நோக்கி - ’மணியம்மையார் சாட்’
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

ஆசியாவில் முதல்முறையாக முற்றிலும் மாணவிகள் உருவாக்கிய செயற்கைக் கோள்

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஏரோஸ்பேஸ், கணினி, மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் என்று பல்துறை சார்ந்த மாணவிகள் 15 பேர் இணைந்து, ‘ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ நிறுவனத்தில் பயிற்சி பெற்று ‘ அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி இந்த செயற்கைக்கோளை வடிவமைத்தனர். அது ஆசியாவிலேயே முதன்முதலாக பெண்களால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஏவும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இஸ்ரோ’ நிறுவனத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தார்.

‘எஸ்கேஐ என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட்’ (SKI-NSLV 9 Maniammaiyar Sat)   என்ற பெயரைக் கொண்ட இந்த பலூன் செயற்கைக்கோள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 21.4.2019 காலை 11.42 மணிக்கு ஏவப்பட்டு மாலை 4.45க்கு தரையிறங்கியது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன், வான்வெளியில் 70 ஆயிரம் அடி உயரத்துக்குச் சென்று, அங்குள்ள வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் தரையிறங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ‘மணியம்மையார் சாட்’ என்ற இந்த செயற்கைக்கோள் ஒரு லட்சத்து 3 ஆயிரம் அடி உயரம் சென்று, 4 மணி நேரத்துக்குப் பின்னர், 20 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் குலமங்கலம் சாலையில் உள்ள சங்கத்திடல் என்ற கிராமத்தில் உள்ள வயலில், பாராசூட் மூலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கிச் செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும், அதில் பெருத்தப்பட்டு உள்ள கேமரா உதவியுடன் வான்வெளியின் வளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை குறித்து கண்டறிந்து, நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுத்து அனுப்பியது.

இதனுடன் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மற்றும் வெப்பநிலை கணக்கிடும் கருவி ஆகியவை அட்சரேகை, உயரம், திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தியதால், பலூன் செயற்கைக்கோள் எங்கு செல்கிறது என பேராசிரியர்களும், மாணவர்களும் கணினி உதவியுடன் பார்த்துக்கெண்டே இருந்தனர்.

இந்நிகழ்வை ஆசியா புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தினர் சாதனையாகப் பதிவு செய்து கொண்டனர். தன்னுடைய பயண நேரத்தில் 1600க்கும் மேற்பட்ட மின்னணுத் தகவல்களை, கட்டுப்பாட்டு அறைக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது மணியம்மையார் சாட்.

துணைவேந்தர் பேராசிரியர் வேலுசாமி,  பதிவாளர் தன்ராஜ், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் உள்ளிட்டோர் மாணவிகளைப் பாராட்டி ஊக்கமளித்தனர்.

செயற்கைக்கோளின் சிறப்பம்சம்

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டில் அவரது நினைவைப் போற்றும் விதமாக மணியம்மையார் சாட்’’ எனும் பெயரில் ஏவப்பட்ட-தோடு, அதன்மீது அன்னை மணியம்மையாரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் வேளாண்மையில் சிறந்தோங்கும் தஞ்சை மாவட்டத்திலிருந்து ஏவப்படுதவதால், மாணவிகள் அதில் விவசாயத்தை முன்னிறுத்தும் விதமான படங்களைச் சுற்றியும் இணைத்து வேளாண்மை தொழிலுக்குப் பெருமை சேர்த்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அமைந்திருப்பது காவிரி டெல்டா மாவட்டம் என்பதனை நினைவு கூறும் விதமாக, செயற்கைக்கோளின் மேற்கூரை மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான இந்தச் சாதனைக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் நம் ஆசிரியர் தாத்தா கி.வீரமணி அவர்கள் குழுவினரைப் பாராட்டினார். இன்னும் பல சாதனைகளுக்குத் தயாராகி வருகிறது நம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்.

Share
 

முந்தைய மாத இதழ்

உழைத்து உண்க ! உழைத்து உண்க ! வள்ளிப் பாட்டிக் கடையிலே வாங்கி வந்த வடையுடன் துள்ளிப் பறந்த காகமும் சோலை மரத்தில் அமர்ந்தது!   வந்த மர்ந்த காகத்தை வஞ்ச நரியும் கண்... மேலும்
உயிர்நேயச் சிறுவர் டெடிக்! உயிர்நேயச் சிறுவர் டெடிக்! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மிசோரமைச் சேர்ந்த 6 வயது சிறுவர் டெரிக் சைக்கிள் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டின... மேலும்
பெற்றோர் கவனத்திற்கு... பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்! 1.  வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும். 2. அம்மா அல்லது... மேலும்
உலகம் நம் குடும்பம் உலகம் நம் குடும்பம் கறுப்பு சிவப்பு வெளுப்பென்று காசி னிக்குள் பலநிறத்தார்; உறுப்பின் நிறத்தைப் பார்க்காமல் உள்ளம் மட்டும் பார்த்திடுவாய்!   தட்ப வெப்ப ந... மேலும்
செய்து அசத்துவோம் செய்து அசத்துவோம் தீப்பெட்டிப் படகு வாசன் தேவையான பொருட்கள்: ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்ற... மேலும்
பிஞ்சு வாசகர் கடிதம் பிஞ்சு வாசகர் கடிதம் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதில் சிரமம் இருக்கும். அதை சுவாரசியமாகக் கொண்டு செல்ல நான் சிரமப்படுவேன்... இதை எனக்கு எளிதாக ஆக்கியது பெரியா... மேலும்