Home கொஞ்சம் கற்போம்…
செவ்வாய், 21 மே 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
உலக நாடுகள் உலக நாடுகள் மெக்சிகோ (MEXICO) சந்தோஷ் மேலும்
கதை கேளு... கதை கேளு கதை கேளு... கதை கேளு பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா புப்பா புப்பான்னு ஒரு குட்டி கரடி இருந்துச்சாம். ஒரு நாள் அந்த கரடி பழுப்பு நிற மரத்து மேல இருந்து ‘ஓ’ன்... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் சின்னச் சின்னக் கதைகள் நேரம் வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் நேரம். எறும்புக் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் ராணி எறும்பு உயர்ந்த இடத்தில் இருந்து... மேலும்
கண்டோம் கருந்துளையை! கண்டோம் கருந்துளையை! அறிவியல் உலகின் மற்றொரு மைல்கள் எம் 87 பிரதீப்குமார் ஏப்ரல் 10, 2019 உலகெங்கிலும் உள்ள அறிவியல் அறிஞர்களும், ஆர்வலர்களும் கண் உறங்காமல் ... மேலும்
குறிஞ்சி மலர் குறிஞ்சி மலர் குறிஞ்சி ---_ கடல் மட்டத்தில் இருந்து 600 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் மலைப் பிரதேசத்தில் வளரும் செடி. குறிஞ்சி மலர்கள் ஒன்பதாண்டுகளுக்கு ஒர... மேலும்
கணிதப் புதிர் சுடோகு கணிதப் புதிர் சுடோகு விடை: அடுத்த இதழில்... மேலும்
கொஞ்சம் கற்போம்…
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”

கே.பாண்டுரங்கன்

வினைச்சொல் (Verbs)

‘Verb’ = வினை -= வேலை

வினைச்சொல் ‘Verb’ எதற்கு பயன்படுத்தப்-படுகிறது தெரியுமா?

அதாவது,

ஒரு வரியில், ஒரு சொற்றொடரில் (sentence-இல்) ஒரு வேலை (work) செய்யப்படுகிறது என்பதை தெரிவிக்கவே.

எ.கா:

விளையாட்டுத் திடலில் சிறுமிகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

Girls are playing cricket in the playground

மேற்கண்ட சொற்றொடரில்,

விளையாடுகிறார்கள் என்பதில் விளையாடு என்பது வினைச்சொல்.

Playing என்பதில் வரும் “Play” என்பது verb, அதாவது வினைச்சொல்.

விழாவில் சிறுவர்கள் கரும்பு தின்கிறார்கள்.

Boys are eating Sugercane in the festival.

மேற்கண்ட சொற்றொடரில்... eat என்பது என்ன? வினைச்சொல் (verb) அல்லவா?

வாக்குச்சாவடி அருகில் வாக்காளர்கள் நிற்கிறார்கள்

The voters are standing near the polling place.

மேற்கண்ட சொற்றொடரில்... stand என்பது என்ன?

வினைச்சொல் (verb) அல்லவா!

இது மாதிரி ஆயிரக்கணக்கான வினைச் சொற்கள் (VERBS) உள்ளன.

அவை எல்லாமே வேலையைக் குறிக்கும்.

கீழே சில வினைச்சொற்களை பார்ப்போம்.

இந்த வினைச்சொற்களால்தான் ஆங்கிலத்தில் அல்லது தமிழில் சொற்றொடர்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒவ்வொரு வினைச்சொல்லும் (verb) தமிழிலோ ஆங்கிலத்திலோ பலவிதமான உருவெடுத்து வேடமிட்டு சொற்றொடர்களை வார்த்தை அலங்காரங்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன. எப்படி என்றால், Go என்றால் போ என்று பொருள் அல்லவா?

இந்த Go வை

“To go” என்று எழுதலாம்.

“Going” என்று எழுதலாம்.

“Gone” என்று எழுதலாம்.

“Goes” என்று எழுதலாம்.

அதேபோல் present என்றால் = பரிசளி என்று பொருள்.

He presented என்றால் = பரிசளித்தான் என்று பொருள்.

Presenting என்றால் = பரிசளித்துக் கொண்டு என்று பொருள்.

to present என்றால் = பரிசளிக்க என்று பொருள்.

அத்தகைய வினைச்சொற்களை (verb)  நிறைய தெரிந்து இருந்தால் கொண்டாட்டம்தானே!

அதாவது தமிழில் நாமறிந்த வினைச்சொற்களை ஆங்கிலத்திலும் அறிந்து கொண்டால் மிக மிகச் சுவையாக இருக்குமல்லவா?

இங்கே சில வினைச்சொற்களைக் (verbs) கொடுத்துள்ளேன். அதைப் பார்த்து... கைகோத்து... கற்றுக் கொள்ளுங்கள்... இன்னும் ஏராளம் கற்றுக்கொண்டால் கொண்டாட்டமாக இருக்கும்!

Attract = ஈர்(த்தல்)

acknowledge = உறுதிப்படுத்து

allow = அனுமதி

attack = தாக்கு

accept = சம்மதி

attempt = முயற்சி செய்

accuse = குற்றம் சாட்டு

admin = நிர்வகி

avoid = தவிர்

agree = ஒப்புக்கொள்

 

Be = இரு

bend = வளை

bind = கட்டு

borrow = கடன் பெறு

blink = முழி(த்தல்)

bet = பந்தயம் கட்டு

born = பிற(த்தல்)

beat = அடி(த்தல்)

boil = கொதிக்க வை

buy = (பணம் கொடுத்து) வாங்கு

broadcaste = ஒலிபரப்பு

become = உருவாகு (ஆகு)

இன்னும் ஏராளமான வினைச் சொற்களை

நீங்கள் அகராதியில் படிக்கலாம்.

Share
 

முந்தைய மாத இதழ்

விடுமுறைக்கு எங்கே? விடுமுறைக்கு எங்கே? ஆண்டுத் தேர்வு முடிந்தது அடுத்து விடுமுறை வந்தது எங்கே செல்லப் போகிறாய் என்றே பெற்றோர் கேட்டனர்!   பசுமை போர்த்திய வயல்களும் பரந்த ஏ... மேலும்
சிறார் பொறுப்பு சிறார் பொறுப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் - ஏப்ரல் 29 - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனிஇந்த நாட்டினை ஆளப்... மேலும்
பெரியாரும் பெண் விடுதலையும் பெரியாரும் பெண் விடுதலையும் தந்தை பெரியாரின் கதை சுகுமாரன் ஓவியம்: கி.சொ பெரியார் தஞ்சாவூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றிருந்தார். பெரியார் மேடையில் அமர்ந்... மேலும்
செனகல்  செனகல் உலக நாடுகள் சந்தோஷ் அமைவிடமும் எல்லையும் கேப்வெர்டி கடற்கரை * இந்நாட்டின் தலைநகர் டக்கார் * செனகல் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு ... மேலும்
பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! பியானோவில் அசத்திய நாதஸ்வரம்! உலகளவில் நடைபெறும் டேலன்ட் ஷோவில் தமிழகத்தின் லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவர் கலந்துகொண்டார். இவரின் தந்தை சதீஷ்வர்ஷன் இசையமைப்பாளர் ஆவார்.... மேலும்