Home உலக நாடுகள் : தென் ஆப்பிரிக்கா( South Africa)
வியாழன், 22 ஆகஸ்ட் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கே... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசம... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் ஊருக்கு ஒதுக்குப்புறம், பாழடைந்த மண்டபம். அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது. அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம் மேலிருந்து கீழ் 1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4) 2.            இந்தச் ச... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! உடுமலை சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்! பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திட... மேலும்
தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார். கூக... மேலும்
உலக நாடுகள் : தென் ஆப்பிரிக்கா( South Africa)
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

 

அமைவிடமும் எல்லையும்:

*             தென்னாப்பிரிக்க நாடு ஆப்பிரிக்காவின் தென்முனையில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடலின் அருகே அமைந்துள்ளது.

*             வடக்கில் நமீபியா, போட்சுவானா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் உள்ளன.

*             கிழக்கில் மொசாம்பிக் மற்றும் ஸ்விஸ்லாந்து அமைந்துள்ளன.

*             நாட்டின் மொத்தப் பரப்பளவு 1,219,912 சதுர கி.மீ. (470,000 சதுர மைல்)

*             தென்னாப்பிரிக்காவிற்கு மூன்று தலைநகரங்கள் உள்ளன. அவை கேப் டவுன், பிரிட்டோரியா, புளோயம் ஃபாண்டைன்.

மக்களும் மொழியும்:

 

*             மக்கள் தென்னாப்பிரிக்கர் என அழைக்கப்படுகின்றனர்.

*             80.2% கறுப்பினத்தவர், 8.8% வெள்ளை இனத்தவர், 8.4% வேறு நிறம், 2.6% ஆசியர்கள் வாழ்கின்றனர்.

*             ஆட்சி மொழிகள் மொத்தம் 11;

கூடுதலாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 8. அதில் தமிழும் ஒன்று.

*             உலக மக்கள் தொகை வரிசையில் 25ஆவது இடத்தில் உள்ளது.

 

வரலாறு:

*             உலகின் பழமையான தொல்பொருள் ஆய்வுத் தளங்கள் அதிகம் உள்ள நாடு தென் ஆப்பிரிக்கா.

*             ஸ்டெர்க்ஃபாண்டின், குரோம்திராய் மற்றும் மகபன்ஸ்கட் குகைகளில் உள்ள பரந்த அளவிற்கான புதைபடிவங்கள், மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே இன்று உள்ள மனித இனமான ஹேமோ சேப்பியன்ஸ் உள்பட பல்வேறு மனித இனங்ள் இங்கு வாழ்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றன.

*             1050ஆம் ஆண்டிலிருந்து சோசா மக்கள் குழு இங்கு வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

*             1487ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவை அடைந்த முதல் அய்ரோப்பியர் போர்ச்சுக்கீசிய கண்டுபிடிப்பாளரான பார்டலோமு டயஸ் ஆவார்.

*             1652ஆம் ஆண்டில் ஜேன் வான் ரீ பீக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பாக மய்யம் ஒன்றை நிறுவினார்.

*             இந்தோனேசியா, மடகாஸ்கர் மற்றும் இந்தியாவி-லிருந்தும் தொழிலாளர்கள் அடிமைகளாக டச்சுக்காரர்களால் கொண்டு செல்லப்பட்டனர்.

*             1795ஆம் ஆண்டில் நன்னம்பிக்கை முனைப் பகுதியை பிரித்தானியப் பேரரசு கைப்பற்றியது. கடல் பயணத்திற்காக

கேப் டவுனை பயன்படுத்திக் கொண்டது.

*             1806ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு கேப் டவுனை தனது காலனியாக இணைத்துக் கொண்டது.

*             பிரிட்டிஷ் அரசு 1807இல் அதனுடைய உலகளாவிய கொத்தடிமை வணிகத்தை நிறுத்தியது. 1833இல் காலனி நாடுகள் அனைத்திலும் கொத்தடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது.

*             19ஆம் நூற்றாண்டில் சூலு மக்கள் அதிகாரத்திற்கு வந்தனர்.

*             1867ஆம் ஆண்டில் வைரங்கள் கண்டு-பிடிக்கப்பட்டன, 1884ஆம் ஆண்டில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதும் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டது.

*             1931ஆம் ஆண்டில் வெஸ்ட்மினிஸ்டர் சட்டத்தின் மூலம் பிரிட்டிஷிடமிருந்து முழு சுதந்திரம் வழங்கப்பட்டது.

*             1961ஆம் ஆண்டில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கு கொண்ட வாக்கெடுப்பின்படி நாடு குடியரசானது.

*             விடுதலைக்காகப் போராடி தண்டனை பெற்ற நெல்சன் மண்டேலா 1990ஆம் ஆண்டு விடுதலை பெற்றார்.

*             1994ஆம் ஆண்டில் பல இனங்கள் பங்குகொண்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கருப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா அதிபராக பதவியேற்றார்.

அரசு முறைகள்:

*             பாராளுமன்ற அவைகளைக் கொண்ட அரசுமுறை. தேசிய கவுன்சில் (மேலவை) 90 உறுப்பினர்களைக் கொண்டது. தேசிய அசெம்பிளி (கீழவை) 400 உறுப்பினர்களைக் கொண்டது.

*             தேர்தல் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும்.

*             தேசிய அசெம்பிளியின் பெரும்-பான்மைக் கட்சியின் தலைவர் அதிபராக இருப்பார்.

*             தற்போதைய அதிபர்: சிரில் ராமபோசா

*             கேப் டவுன் அரசியல் தலைநகரமாகச்(Legislative Capital) செயல்படுகிறது.

 

நெல்சன் மண்டேலா

பொருளாதாரம்:

*             நாணயம்: தென்னாப்பிரிக்க ‘ராண்டு’ என அழைக்கப்படும்.

*             ஏராளமான கனிம வளங்கள் இருப்புக் கொண்ட நாடு.

*             அய்.நா. வகைப்படுத்தலின்படி நடுத்தர வருமானம் உடைய நாடாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

*             கட்டுமானம், சுற்றுலா, விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

*             வைரங்கள், பழங்கள், தங்கம் உள்ளிட்ட உலோகங்கள், கனிமங்கள், சர்க்கரை மற்றும் கம்பளி முதலியவை ஏற்றுமதிப் பொருளாகும்.

*             புதிய இயந்திரங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பெட்ரோலியம், வேதிப் பொருட்கள் ஆகியவை இறக்குமதி பொருளாகும்.

மக்கள் கலாச்சாரம்:

*             பன்மைத்துவம் கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா.

*             ‘ஒற்றை’ப் பண்பாடு என மக்களை வலியுறுத்துவதில்லை.

*             தென்னாப்பிரிக்க மக்கள் இசையில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள்.

*             பெரிதும் அசைவ உணவை விரும்பி உண்ணுவார்கள்.

*             சூலு, சுவாசி, சோசா பழங்குடிமக்கள் சேர்ந்து வாழ்கின்றனர்.

சுற்றுலா இடங்கள்:

*             தென்னாப்பிரிக்கா பெரிய அளவிற்கு இயற்கை வாழ்விடங்களைக் கொண்டுள்ளது.

*             டிராகன்ஸ்பெர்க்கில் அமைந்திருக்கும் ஜெசுத்தி மலை (3,408 மீ) உயரத்தில் அமைந்த மிகப் பெரிய மலையுச்சியாகும்.

*             ஜோகன்னஸ்பர்க் நகரில் சுண்ணாம்புக்கல் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகை உலகப் புகழ்பெற்ற ஒன்றாகும். இது ‘மனித குலத்தின் தொட்டில்’ என அழைக்கப்படுகிறது.

*             சாகசக்காரர்களுக்குப் பிடித்தமானது பில் ஹாரோபின் பலூன் சவாரி.

*             மரோபெங்க் என்ற இடத்தில் மனித குலம் எவ்வாறு தோன்றியது, கண்டங்கள் எவ்வாறு இடம் பெயர்ந்தன என்பதை ஒலி _ ஒளிக் காட்சியின் மூலம் விளக்குகின்றனர்.

*             தனியார் வனவிலங்கு சரணாலயங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படுகிறது. அவற்றில் வனவிலங்குகளை அருகிலிருந்து காண முடிகிறது.

*             தென்னாப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன்(Jagers Fontein) என்ற இடத்தில் இருக்கும் வைரச் சுரங்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம்.

*             ஜோகன்ஸ்பார்க்கில் காந்தியாருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தென்னாப்பிரிக்காவில் காந்தியின் வாழ்க்கைக் குறிப்புகள் பொறிக்கப்-பட்டுள்ளன. காந்தியாருக்கு பெரிய சிலைகளும் நிறுவப்பட்டுள்ளன.

விளையாட்டு:

*             கால்பந்து, ரக்பி மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை மக்கள் விரும்பி விளையாடுகின்றனர்.

*             ‘ரக்பி’ உலகப் கோப்பையை முதல் முயற்சியிலேயே தென்னாப்பிரிக்கா அணி வென்றது.

*             2010ஆம் ஆண்டு பிபா (திமிதிகி) கால்பந்து உலகக் கோப்பையை சிறப்பாக நடத்தியது.

*             தென்னாப்பிரிக்காவின் கிரிக்கெட் வீரர்கள் உலகப் புகழ்பெற்றவர்கள்.

காந்தியாரும் தென்னாப்பிரிக்காவும்:

*             காந்தியார் முதன்முதலில் தன் அடிமைத்தனத்தை உணர்ந்த இடம்.

*             காந்தியாரின் அகிம்சைவாதத்தை  கருப்பினத் தலைவரான நெல்சன் மண்டேலா பின்பற்றினார்.

*             தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கான போராட்டத்தில் தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட தமிழர்கள் காந்தியாருக்கு உறுதுணையாக இருந்தனர்.

*             எனினும் அங்கிருந்த இந்தியர்களுக்காகப் போராடிய கந்தியார், அங்கிருந்த கருப்பின மக்களை இனவெறுப்போடு அணுகினார் என்று இன்றைய ஆப்பிரிக்க இளைஞர்கள் எதிர்ப்புகாட்டுகின்றனர்.

 

 

 

 

 

 

 

Share
 

முந்தைய மாத இதழ்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சிகரம் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பி... மேலும்
"தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது... இது... இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற... மேலும்
புவியை ஆளலாம்! புவியை ஆளலாம்! காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்க... மேலும்
உயர்வு உயர்வு ‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால் அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் - எனும் செறிவாம் உலகக் கருத்தினிலே சிறிய மாற்றம் நாம்காண்போம்;   அறிவு... மேலும்