Home கொஞ்சம் கற்போம்...
வியாழன், 22 ஆகஸ்ட் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கே... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசம... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் ஊருக்கு ஒதுக்குப்புறம், பாழடைந்த மண்டபம். அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது. அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம் மேலிருந்து கீழ் 1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4) 2.            இந்தச் ச... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! உடுமலை சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்! பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திட... மேலும்
தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார். கூக... மேலும்
கொஞ்சம் கற்போம்...
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

“தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்”

கே.பாண்டுரங்கன்

பெயர்ச்சொல் (NOUN)

கடந்த இதழில் வினைச்சொல்லைப் (வினை = செயல்) பார்த்தோம்.

இந்த இதழில் பெயர்ச்சொல் பற்றி பார்க்கப் போகிறோம்!

பெயரைக் குறிப்பிடுவன ‘பெயர்ச்சொற்கள்’.

தமிழில் பெயர்ச் சொற்களில் பல வகைகளுண்டு.

நாம் ஆங்கிலத்தில் எளிதில் கற்றுக்கொள்ள இரண்டாக மட்டும் பிரித்துக்கொள்வோம்.

1. (சாதாரண) பெயர்ச் சொற்கள் (NOUN)

2. பிரதி பெயர்ச் சொற்கள் (PRONOUN)

(சாதாரண) பெயர்ச் சொற்கள்

பெயரைக் குறிப்பிடுவன ‘பெயர்ச் சொற்கள்’ என்பது தெரியும் அல்லவா?

கரும்பு(Sugarcane), இரும்பு (Iron), முட்டை (Egg), அம்பு (Arrow), வில் (Bow), மாட்டுவண்டி (Bullock cart), மகிழுந்து (Car) இவையெல்லாம்...

இன்னும் ஏராளமான பெயர்ச்சொற்கள்: காந்தம், நாற்காலி, புலி, எலி, குருவி, அருவி, நீர், நீராவி, சூரியன், சந்திரன், கடல், மலை, சாலை, மேகம், மழை, துளை, பட்டாம்பூச்சி, மின்னல் இவையெல்லாம் (சாதாரண) பெயர்ச்சொற்கள் என்பது தெரியும்.

பிரதி பெயர்ச் சொற்கள் (PRONOUN)

சில பெயர்ச்சொற்கள் சுட்டிக்காட்டு-வதற்காக, தனித்துவமாக அடையாளம் காண்பதற்காக, பெயர்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகின்றன. இவை பிரதி பெயர்ச் சொற்கள் அல்லது சுட்டுப் பெயர்கள் (PRONOUN) எனப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக,

ஓவியன், பகலவன், தென்னவன், முகிலன், ரவி.

இந்த பெயர்களுக்கு பதில்: He, She  என ஆங்கிலத்திலும், அவன், அவள் என தமிழிலும், தனித்துவ அடையாளத்திற்காக பயன்படுத்துகிறோம் அல்லவா? இப்படி, நபர்கள் அல்லது பொருட்களின் பெயர்களுக்கு பதிலாக வரும் பெயர்ச்சொற்கள் பிரதி பெயர்ச் சொற்கள் (PRONOUN). இவை ஒருமையிலும் (Singular). பன்மையிலும் (Plural) வரும். இதனை சிறு அட்டவணையின் மூலம் காண்போம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

* * *

இவைதான் ஆங்கிலத்தில் Subject  ஆக வந்து ஒரு Sentence--ல் அதாவது சொற்றொடரில் முதன்மையாக வருகின்றன.

நான் சுற்றுலா போகிறேன் = (Kumar) I go to picnic.

நீ சுற்றுலா போ = (Ramesh) you go to picnic .

அவன் சுற்றுலா போகிறான் = (Salim) He goes to picnic.

அவள் சுற்றுலா போகிறாள் = (Thamizhini) She goes to picnic.

அது (மரங்கொத்தி) பறக்கிறது = (The Wookpecker bird) It flies.

நாங்கள் மலேசியாவில் இருந்து வந்தோம் = (Kumar, Ramesh) We came from Malaysia.

நீங்கள் மலேசியாவில் இருந்து வந்தீர்கள் = (Kumar, Ramesh) You came from Malaysia.

அவள் மலேசியாவில் இருந்து வந்தாள் = (Thamizhini) She came from Malaysia.

அவன் மலேசியாவில் இருந்து வந்தான் = (Salim) She came from Malaysia.

அவர்கள் மலேசியாவில் இருந்து வந்தார்கள் = (Salim, Ramesh & Kumar) They came from Malaysia.

மேற்கண்ட சொற்றொடர்களில் நான், நீ, நீங்கள், அவன், அவர்கள், அவள், அது எப்படி தமிழில் முதலில் வருகிறதோ அதேபோல ஆங்கிலத்திலும் வரும்.

மொழிகளுக்குள்தான் எவ்வளவு இலக்கணத் தொடர்பு (Grammar relationship). நீங்களும் இந்தப் பெயர்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்த இதழில் வேறொரு தலைப்பில் சந்திப்போம்.

 

 

 

 

 

Share
 

முந்தைய மாத இதழ்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சிகரம் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பி... மேலும்
"தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது... இது... இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற... மேலும்
புவியை ஆளலாம்! புவியை ஆளலாம்! காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்க... மேலும்
உயர்வு உயர்வு ‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால் அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் - எனும் செறிவாம் உலகக் கருத்தினிலே சிறிய மாற்றம் நாம்காண்போம்;   அறிவு... மேலும்