Home சின்னச் சின்னக் கதைகள்
சனி, 17 ஆகஸ்ட் 2019

தற்போதைய இதழ்

Previous அடுத்து
  • 1
  • 2
கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் கதை கேளு... கதை கேளு : அன்பால் உருவான பாலம் விழியன் இரவு முழுதும் சியா எறும்பு தூங்கவில்லை. யாரையும் தூங்கவிடவும் இல்லை. தன் அறையில் இருந்த எல்லா எறும்புகளும் மாறி மாறி கேள்விகள் கே... மேலும்
பிஞ்சு & பிஞ்சு பிஞ்சு & பிஞ்சு பிஞ்சுகளே! உங்கள் படமும் இப்பக்கத்தில் இடம்பெற நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்! நீங்கள் ‘பெரியார் பிஞ்சு’ இதழைப் படிப்பது போல, வித்தியாசம... மேலும்
சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் சின்னச் சின்னக் கதைகள் : மூடத்தனம் ஊருக்கு ஒதுக்குப்புறம், பாழடைந்த மண்டபம். அதில் வௌவால் ஒன்று குடியிருந்தது. அது இருட்டியதும் வெளியில் சென்று சுற்றித் திரிந்து இரைதேடித... மேலும்
குறுக்கெழுத்துப் போட்டி குறுக்கெழுத்துப் போட்டி கேள்விகள் - சிவக்குமார், ராஜபாளையம் மேலிருந்து கீழ் 1.            இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் பெண் பிரதமர் (4) 2.            இந்தச் ச... மேலும்
அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்! உடுமலை சிறிய உருவங்கள்; பெரிய சிந்தனைகள்! பழகுமுகாமின் நான்காம் நாளில் (9.5.19) தஞ்சை சரபோஜி அரண்மனைக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, திட... மேலும்
தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி தானாக ’செஸ்’ விளையாடக் கற்ற கணினி அந்தக் கணினி செஸ் ஆடியபோது விஸ்வநாதன் ஆனந்த் வாய் பிளந்து நின்றார். அதைப் பற்றிக் கேட்டபோது “ கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது” என்றார். கூக... மேலும்
சின்னச் சின்னக் கதைகள்
PDF  | Print |  E-mail
User Rating: / 0
PoorBest 

முயல்

கதை: மு.கலைவாணன்

ஓவியம்: மு.க.பகலவன்

 

புதர் ஒன்றில் சில முயல்கள் வாழ்ந்து வந்தன.

அதில் ஒரு முயல், தான் முயலாய்ப் பிறந்ததற்காக வருந்திக்கொண்டே இருந்தது. “நான் புலியாகப் பிறந்திருந்தால் உறுமினாலே எல்லோரும் ஓட்டம் பிடிப்பார்கள்.

சிங்கமாகப் பிறந்திருந்தால் இந்தக் காட்டையே கலக்கி இருப்பேன். யானையாகப் பிறந்திருந்தால் பகைவர்களைத் தூக்கிப்போட்டு பந்தாடி இருப்பேன். என் தலைவிதி... கேவலம் முயலாகப் பிறந்துவிட்டேன்’’ என்று அடிக்கடி புலம்பும். தீனி தேடக்கூட எங்கேயும் போகாமல் புதரிலேயே படுத்துக் கிடக்கும். மற்ற முயல்கள் இரைதேடி வெளியில் சென்று வரும். ஆனால், இந்த முயல் மட்டும் சோம்பேறியாய் இருந்தது.

மற்ற முயல்களிடம் ஏதாவது உணவு கொண்டு வரச் சொல்லி சாப்பிட்டு காலம் கழித்தது.

புதரில் முயல்கள் இருப்பதை அறிந்த நரி ஒன்று அவற்றைப் பிடித்துத் தின்ன அங்கே வந்தது.

நரி வருவதை உணர்ந்த மற்ற முயல்கள் தாவிக் குவித்து தப்பித்துச் சென்றுவிட்டன.

நரி வருவது தெரிந்தும் தப்பிக்க எந்த முயற்சியும் செய்யாமல் தலைவிதியை நம்பிப் படுத்துக் கிடந்த சோம்பேறி முயல் மட்டும் நரிக்கு இரையானது. இதைப் பார்த்த மற்றொரு மூத்த முயல் சொன்னது.

“முயலாய் இருக்கலாம்!

முயலாதிருக்கலாமா?’’

Share
 

முந்தைய மாத இதழ்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா? சிகரம் காலையில் எழுந்தவுடன் வீட்டிற்குமுன் பெண்கள் சாணி கலந்த நீரைத் தெளிப்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை இது எல்லா வீடுகளிலும் கடைப்பி... மேலும்
"தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” கரும்பின் சுவை நமக்குத் தெரியும். கரும்பின் சத்து இது... இது... இன்னது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? அதுபோல இங்கே ஆங்கிலத்தில் பேசுவதற... மேலும்
புவியை ஆளலாம்! புவியை ஆளலாம்! காலை மாலை வேளைகளில் நடை நடக்கலாம்! காற்று வாங்கி கடற்கரையில் களைப்பைப் போக்கலாம்! நூலகத்தை நாடிப் படித்து அறிவில் உயரலாம்! நுண்ணறிவு... மேலும்
தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? தேசியக் கல்விக் கொள்கை - உங்கள் கருத்து என்ன? கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் உருவாக்கிய புதிய தேசியக் கல்விக் கொள்கை _ -2019க்கான வரைவை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. கல்வியாளர்க... மேலும்
உயர்வு உயர்வு ‘அறிவும் திறனும் நிறைந்திருந்தால் அகிலம் தன்னில் உயர்ந்திடலாம் - எனும் செறிவாம் உலகக் கருத்தினிலே சிறிய மாற்றம் நாம்காண்போம்;   அறிவு... மேலும்